207. கிரீன்லாந்து நாட்டின் கால்பந்து அணியால் FIFA/ UEFA போட்டிகளில் ஆட முடியாது. காரணம், இந்தத் தொடருக்கு இயற்கையான புல்தரை மைதானம் வேண்டும். அது கிரீன்லாந்து நாட்டில் இல்லை. உள்நாட்டு லீக் போட்டிகள் எதுவும் நடத்தப்படாததால் இந்த அணி FIFA/UEFA விளையாட அனுமதிக்கப்படுவதில்லை.

208. கிறிஸ்டியனோ ரொனால்டோ, கோல் எண்ணிக்கையில் மட்டுமன்றி, சமூக வலைதளங்களில் அதிகம் பின்தொடரப்படும் வீரராக இருக்கிறார். அவரைப் பின்தொடர்வோர் எண்ணிக்கை 200 மில்லியன் தாண்டிவிட்டது.

209. `கால்பந்தின் ஆஸ்கர்’ எனப்படும் `பாலன் டி ஓர்’ விருது, 2018-ம் ஆண்டில் முதன்முறையாக ஒரு பெண்ணுக்குக் கிடைத்தது. நார்வேயைச் சேர்ந்த 23 வயது அடா ஹெகர்பெர்க், இந்த விருதைப் பெற்றார்.

210. கால்பந்து வீரர்கள் பலரின் உடம்பிலும் டாட்டூக்கள் ஜொலிக்கும். ஆனால், பச்சை குத்தினால் சில மாதங்கள் ரத்த தானம் செய்யமுடியாது என்பதால், பச்சைக் குத்திக்கொள்ளாமல் இருப்பவர், ரொனால்டோ.

211. அர்ஜென்டினாவின் கால்பந்து ஹீரோ, லியோனல் மெஸ்ஸிக்கு சிறு வயதில் வளர்ச்சிக் குறைபாடு இருந்தது. இந்தச் சிகிச்சை செலவுக்காக 13-வது வயதில் எஃப்சி பார்சிலோனா அணியுடன் ஒப்பந்தம் செய்து விளையாடினார். இன்றுவரை பார்சிலோனா கிளப்புக்காக விளையாடி வருகிறார்.

212. கால்பந்தில், கோல்கீப்பர்கள் மட்டும் வேறு நிறத்தில் ஜெர்சி அணிவது ஏன்? 1913 வரை தன் அணியின் வீரர்கள் உடையைத்தான் அணிந்துவந்தனர். பந்தை யார் கையில் பிடிக்கிறார்கள் என்பதை வேறுபடுத்தி அறியவே புதிய உடை விதிமுறை நடைமுறைக்கு வந்தது.

213. லியோனல் மெஸ்ஸியின் திறமையைக் கண்ட பார்சிலோனா கிளப் நிர்வாகி கார்லஸ் ரெஸாச், உடனடியாக ஒப்பந்தம் செய்ய நினைத்தார். கையில் கிடைத்த நாப்கினிலேயே மெஸ்ஸியிடம் கையொப்பம் வாங்கிவிட்டார்.

214. 1982 வரை பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் தயாரிக்கபட்ட கால்பந்துகளே உலகக் கோப்பையில் பயன்படுத்தப்பட்டன. ஆங்கிலேயர்கள் கால்பந்து பிரியர்கள் ஆதலால், 1889 சமயத்தில் பழுதான கால்பந்தை சியால்கோட் (sialkot) பகுதியின் saddlemaker சரிசெய்தனர். அதனால், கால்பந்து உற்பத்தியில் சிறப்பாக விளங்குகிறது சியால்கோட்.

215. உலகின் இளம் புரொஃபஷனல் கால்பந்து வீரர் பிரைஸ் பிரிட்ஸ். பிறந்து 20 மாதத்திலேயே அவரின் ஆற்றலைக் கண்டு அசந்தது, பெல்ஜியத்தின் ரேஸிங் போக்ஸ்பெர்க் கால்பந்து அணி. உடனடியாக தொழில்முறை கால்பந்து வீரராக ஒப்பந்தம் செய்தது. இது நடந்தது 2013-ம் ஆண்டில்!

216. சர்வதேசப் போட்டிகளில் பயன்படுத்தப்படும் கால்பந்தின் ஆரம் (Radius) சுமார் 11 செ.மீ இருக்கவேண்டும். அதன் சுற்றளவு 68 - 70 செ.மீ இருப்பது அவசியம். எடை 410 - 450 கிராம்.