Published:Updated:

``விளையாட்டு உலகில் இருந்து முழு ஓய்வு” -உசைன் போல்டின் அடுத்த பிளான் 

``விளையாட்டு உலகில் இருந்து முழு ஓய்வு” -உசைன் போல்டின் அடுத்த பிளான் 
``விளையாட்டு உலகில் இருந்து முழு ஓய்வு” -உசைன் போல்டின் அடுத்த பிளான் 

உலகின் அதிவேக மனிதர், உசைன் போல்ட்.. உலக சாதனைகளுக்கு சொந்தக்காரர். தனது கொண்டாட்டங்கள் மூலமும் ரசிகர்களைப் பெற்றவர். களத்தில் மிகச் சாதாரணமாக மற்ற வீரர்களை வீழ்த்துவார். 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தையங்களில் உலக சாதனை படைத்திருக்கும் இவர் 2017 -ம் ஆண்டு தடகளத்தில் இருந்து ஓய்வு பெற்றார். 

ஓய்வுக்குப் பின் தனது வாழ்க்கையை குடும்பத்துடன் செலவழிப்பார் என்றும், பயிற்சி மையம் திறந்து பல திறமைசாலிகளை உருவாக்குவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தனக்குக் கால்பந்து விளையாட்டின் மீது ஆர்வம் உள்ளதாகவும் கிளப் அணியுடன் இணைந்து கால்பந்து வீரர் ஆகப்போகிறேன் என்று அறிவித்தார். 

வெறும் அறிவிப்போடு நில்லாமல், ஆஸ்திரேயாவில் இருக்கும் சென்ட்ரல் கோஸ்ட் அணியில் இணைந்து தொழில்முறை கால்பந்து கற்றுக்கொண்டார். தீவிரமாகப் பயிற்சிகள் மேற்கொண்ட போல்ட், ஆஸ்திரேலியாவில் கடந்த வருடம் நடைபெற்ற ஒரு போட்டியில் தனது அணிக்காக 2 கோல்கள் அடித்து அசத்தினார்.

இந்த நிலையில்தான் விளையாட்டில் இருந்து விலகும் முடிவை அவர் எடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் பிபிசி ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில்,  ``இது விளையாட்டில் இருந்து ஓய்வுபெறும் நேரம். நிச்சயமாகக் கால்பந்து ஒரு சிறந்த விளையாட்டு. ஒரு அணியாக விளையாடியது மகிழ்ச்சியாக இருந்தது. 

அதனை நான் சரியாக கையாளவில்லை என்று சொல்லிவிட முடியாது. ஆனால், நான் செல்ல கூடாத பாதையில் சென்றுவிட்டதாக உணர்கிறேன். வாழ்கையில் எல்லாமே பாடம் கற்பதுதான். அதனை வாழ்ந்து கற்றுக்கொள்ள வேண்டும். 

என்னிடம் நிறையத் திட்டங்கள் இருக்கிறது. ஒவ்வொன்றாக சோதித்துப் பார்ப்பேன். தற்போது எனது கவனம் தொழில் செய்வதில் உள்ளது” என்றார். இதுவரை ஸ்போர்ட்ஸ் மேனாக ஜொலித்தவர் இனி பிசினெஸ்மேனாகவும் ஜொலிக்க வாழ்த்துகள்!