Prabhus3213

எனக்கு தெரிந்து 2018-ல் உள்ள ஆஸ்திரேலியா அணி மிகவும் பலவீனமான அணி. ஆஸ்திரேலியா அணியை விட இந்திய அணியிடம் அவ்வளவு சிறப்புகள் இருந்தும் 2வது டெஸ்ட் போட்டியில் தோற்றதற்கு யார் காரணம்?

பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சரியாக லைன் அண்ட் லென்த்தில் பந்துவீசவில்லை. ஓவருக்கு ஒரு லூஸ் பால் போட்டதால், அதை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர். அதனால்தான் அந்த பலவீனமான ஆஸ்திரேலிய பேட்டிங் யூனிட்டால் நிலைத்து நின்று ஆட முடிந்தது. பெர்த் ஆடுகளத்தில் 326 என்பது மிகப்பெரிய ஸ்கோர். ஆனால், அதற்காக நம் பௌலர்களை குறைசொல்லவேண்டும் என்பது இல்லை. தொடர்ச்சியாக எல்லோராலும் சிறப்பாகப் பந்துவீச முடியாது. அதுமட்டுமல்லாமல், எல்லோரும் தொடர்ந்து நிறைய போட்டிகளில் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். ஓரிரு போட்டிகளில் தவறத்தான் செய்யும். ஆனால், எல்லோரும் ஒரே போட்டியில் சோடை போனதுதான் இந்தியாவுக்குப் பாதகமாக அமைந்துவிட்டது.

ஆஸியின் முதல் இன்னிங்ஸிலேயே இந்திய அணி, பாதி ஆட்டத்தை இழந்துவிட்டது. அப்படியான நிலையில், இந்திய அணி நிதானமாக பேட்டிங் செய்திருக்கவேண்டும். நான்காவதாக பேட்டிங் செய்யும் நிலையில், மிகப்பெரிய ஸ்கோர் அடித்திருக்கவேண்டும். ஆனால் தவறிவிட்டது. இந்திய ஓப்பனர்கள் மீண்டும் சொதப்பியது, மிகப்பெரிய அடியாக அமைந்துவிட்டது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சீக்கிரமே களமிறங்க வேண்டியிருந்தது. எல்லா, போட்டிகளிலும் கோலி புஜாராவை மட்டுமே நம்பிக்கொண்டிருக்க முடியாது என்பதற்கு பெர்த் டெஸ்ட் ஓர் உதாரணம்.

Murugan09069767

ஆல்ரவுன்டர் ரேங்கில் no.3-ல் இருந்தும் ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்க வில்லையே கோலி ஏன்? இங்கிலாந்தில் ஜொலித்தும் பயன் இல்லையே...

பொதுவாக வெளிநாட்டு ஆடுகளங்களில் இந்திய அணி 2 ஸ்பின்னர்களோடு களமிறங்குவதில்லை. அந்த ஆடுகளங்கள் பெரிய அளவில் ஸ்பின்னுக்குச் சாதகமாக இருக்காது என்பதால், அந்த ரிஸ்க் எடுப்பதில்லை. அஷ்வின், ஜடேஜா இருவரில் அஷ்வின்தான் கோலியின் முதல் சாய்ஸாக இருக்கிறார். அதனால் ஜடேஜாவுக்கு எளிதாக வாய்ப்பு கிடைப்பதில்லை. அதுபோக, முன்பெல்லாம் வேகப்பந்துவீச்சாளர்கள் சுமாராக பந்துவீசுவார்கள். அப்படியான சூழ்நிலையில், ‘ஸ்பின்னர்களையாவது ட்ரை செய்யலாம்’ என்று இரண்டு ஸ்பின்னர்களோடு இந்திய அனி களமிறங்கும். ஆனால், இப்போது இஷாந்த், பும்ரா, ஷமி, உமேஷ், புவி என அட்டகாசமான கூட்டணி இருக்கிறது. அதனால், இரண்டாவது ஸ்பின்னருக்கான தேவை அங்கு எற்படுவதுல்லை.

அதுமட்டுமல்லாமல் இப்போதெல்லாம் 4 வேகப்பந்துவீச்சாளர்களோடு அட்டாக் செய்யும் மனநிலையில் இந்திய அணி விளையாடிவருகிறது. அதனால்தான் வெளிநாட்டு ஆடுகளங்களில் ஜடேஜாவுக்கு அதிக வாய்ப்புகள் கிடைப்பதில்லை. மற்றபடி இந்திய துணைக்கண்டத்தில் அவர் தொடர்ந்து ஆடிக்கொண்டுதான் இருக்கிறார். இங்கிலாந்தில் ஒரு போட்டியில் மட்டுமே ஆடியிருந்தாலும், வெஸ்ட் இண்டீஸ் தொடரின் இரண்டு போட்டிகளிலும் ஆடியிருக்கிறார்.

ஜடேஜா விஷயத்தில் பெரிதாக யாரையும் குறை சொல்வதற்கு இல்லை. பெர்த் டெஸ்ட் போட்டியில் எடுக்காதது கேள்விக் குறியாகியிருக்கிறது. மேலே சொன்னதுபோல் அந்தப் போட்டியில் இந்திய அணி 4 ஃபாஸ்ட் பௌலர்களுடன் களமிறங்க முடிவு செய்ததால், எடுக்கப்பட்ட முடிவு அது.

Munna892

இந்த 2019 உலக கோப்பையில் trump card ஆக யாரெல்லாம் இருக்க வாய்ப்புள்ளது.இந்திய அணி வீரர்கள் உள்பட?

மிகப்பெரிய தொடர் என்பதால், ஓரிரு வீரர்களை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லிடமுடியாது. இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோ, ஜோ ரூட், மோர்கன் என ஏகப்பட்ட மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள். சொந்த ஊர் என்பதால், எல்லோருமே ஜொலிக்க வாய்ப்பு அதிகம். கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து), முஷ்ஃபிகுர் ரஹீம் (வங்கதேசம்), ரஷீத் கான் (ஆப்கானிஸ்தான்), பாபர் ஆஸம் (பாகிஸ்தான்) ஆகியோரின் செயல்பாடுகள், அவர்கள் அணியின் தலையெழுத்தை நிர்ணயிக்கக்கூடும்.

டேவிட் வார்னர் - ஆஸ்திரேலியாவுக்கு ஒரு மிகப்பெரிய கம்பேக் கொடுக்கக்கூடும். ஒரு வருடம் கிரிக்கெட் விளையாடவில்லைதான். ஆனால், வார்னரிடம் ஒரு பெரிய மேஜிக் எதிர்பார்க்கலாம். வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, தென்னாப்ரிக்கா அணியைப் பொறுத்தவரை எந்த வீரரும் தொடர் முழுதும் ஜொலிப்பார் என்று சொல்லிவிட முடியாது. இந்திய அணியின் ட்ரம்ப் கார்ட் என்றால், அது குல்தீப் யாதவ்தான். அவரது சைனாமேன் பந்துவீச்சு, இங்கிலாந்தில் என்ன செய்யும் என்பதை அவர் நிரூபித்திருக்கிறார். இந்தியாவின் டாப் - 3 பேட்ஸ்மேன்கள் கன்சிஸ்டென்ட்டாக ஆடிவருவது இந்திய அணிக்கு பலம்.

Prabhus3213

பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் தோல்வியின் பிடியில் இருந்து மீண்டு வருவாரா?!

தைவானின் தாய் சூ யிங் (24), ஜப்பானின் நஸோமி ஒகுஹாரா (23), இந்தியாவின் பி.வி.சிந்து (23), சீனாவின் சென் யூஃபே (20) என, ரேங்கிங்கில் முதல் நான்கு இடங்களில் இருப்பவர்கள் அனைவருமே 24 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்கள்தான் தற்போது பேட்மின்டன் உலகில் கேலோச்சுகிறார்கள்.

2018-ல் சாய்னா 15 தொடர்களில் பங்கேற்றார். அதில், நான்குமுறை ஃபைனலுக்கு முன்னேறினார். காமன்வெல்த்தில் சிந்துவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது மட்டுமே அவரது சமீபத்திய சாதனை.
சாய்னாவின் வயது 28. சர்வதேச தரவரிசையில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார். அவர் ஃபார்ம் அவுட்டாகி விட்டார் என்பதை விட, 28 வயதில் ஒரு பேட்மின்டன் வீராங்கனையின் ஆட்டம் கொஞ்சம் பின்னடைவைச் சந்திப்பது இயல்பே. முன்புபோல இனி, அவர் வளர்ந்து வரும் இளம் வீராங்கனைகளைச் சமாளித்து, பெரிய தொடர்களில் வெற்றிபெறுவது அவ்வளவு சுலபமில்லை.

austinvijay

தேசிய விளையாட்டாய் இருந்தும் ஹாக்கியை ஸ்பான்சர்கள் புறகனிப்பது ஏன்? கிரிக்கெட்டை மக்கள் பார்ப்பதால் ஸ்பான்சர்கள் அதிகமானார்களா அல்லது ஸ்பான்சர்கள் அதிகமாய் ப்ரமோட் செய்ததினால் மக்கள் பார்க்க ஆரம்பித்தார்களா?

உங்களுக்கான முதல் பதில் - ஹாக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டு இல்லை. அதை தேசிய விளையாட்டாக, இந்திய விளையாட்டு அமைச்சகம் அங்கீகரிக்கவில்லை. காலம் காலமாக நம் பாடப்புத்தகங்களில் தவறாகச் சொல்லப் பட்டுக்கொண்டிருக்கிறது.

இரண்டாவது... கடந்த ஆண்டு, இந்தியாவில் 17 வயதுக்குட் பட்டோருக்கான கால்பந்து உலகக் கோப்பை நடந்தது. போட்டி நடந்த 6 நகரங்கள் தவிர்த்து, மற்ற எந்த இடத்திலும், அந்தத் தொடருக்கான வரவேற்பு இல்லை. இந்திய அணியின் போட்டிகள் நடந்த டெல்லியில்கூட கால்பந்து ஆரவாரம் சுத்தமாக இல்லை. ஒரு ஃபிஃபா டோர்னமென்ட்டுக்கே நம்மூரில் அவ்வளவுதான் வரவேற்பு. அதுவே ஒருவேளை இந்தியா வென்றிருந்தால், நிச்சயம் இங்கு கால்பந்து புரட்சியே நடந்திருக்கும். விஷயம் அதுதான்... இங்கு எந்த விளையாட்டு பிரபலமாக வேண்டுமானாலும் ஒரு பெரிய வெற்றி வேண்டும். ப்ரோ கபடி தொடர் வெற்றிக்குக் காரணம், இந்தியா உலகக் கோப்பையில் கோலோச்சுவதுதான். ஹாக்கியின் பழைய பெருமைகள், 40 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது செல்லுபடியாவதில்லை.

சர்வதேச அளவில், நம் அணி ஒரு விளையாட்டில் வென்றால்தான் நம் மக்கள் அதைக் கவனிக்கிறார்கள். மக்கள் பார்க்கும் விளையாட்டில் முதலீடு செய்யத்தான் கார்ப்பரேட்கள் முன்வருகின்றன. அவர்களுக்கு இதுவும் பிசினஸ்தான். நம் மனநிலை மாறவேண்டும். ஆஸ்திரேலியா - இந்தியா டெஸ்ட் தொடரை மட்டும் 5 மணிக்கு எழுந்து பார்த்துவிட்டு, ஹாக்கியில் ஏன் ஜெயிப்பதில்லை என்று புலம்பினால் எதுவும் நடக்காது!