ரேஸர்களுக்கு தங்களின் வெற்றி எப்போதும் பெஸ்ட் மொமன்ட்டாக இருக்கும். அதிலும் போராடி அடைந்த வெற்றி என்றால் ‘பெஸ்ட்டு பெஸ்ட்டு பெஸ்ட்டு’ என்று ஜாலியாக ஆட்டம் போடுவார்கள். ஆனால், ரசிகர்களுக்கு தங்களை சந்தோஷப்படுத்திய, கோபப்படுத்திய, வெறியேற்றிய, சிலிர்க்க வைத்த மொமன்ட்ஸ் மட்டுமே பெஸ்ட்டாக இருக்கும்.

ஒரு நொடி குதித்திருப்பார்கள், கத்தியிருப்பார்கள், திட்டியிருப்பார்கள், ட்வீட் போட்டிருப்பார்கள், ஸ்டேட்டஸ் வைத்திருப்பார்கள். அப்படி அந்த நாள் முழுவதும் அவர்களை பின் தொடர்ந்திருக்கும் அந்த மொமன்ட். அப்படி இந்த ஆண்டு ரசிகர்களின் மனதில் தங்கிவிட்ட பெஸ்ட் மொமன்ட்கள் இங்கே!

யாகுப் கார்ன்ஃபில் ஜம்ப்

சிரிப்பதா, ஆச்சர்யப்படுவதா என்று தெரியவில்லை. லீமான்ஸ் சர்க்யுட்டில் ரேஸ் முடிய 2 லேப்களே இருக்கும் நிலையில் முதல் 5 இடங்களுக்கு கடும் போட்டியாக இருந்தது. ஒருவருக்கொருவர் இடைவெளி இல்லாமல் சென்றுகொண்டிருந்தனர்.

கார்னர் செய்யும்போது பாஸ்ட்டியானி கீழே விழ அவர் பைக் மீது ஏறி பறந்து டிராக்கின் வெளியே லேண்ட் ஆகி கால் கூட தரையில் படாமல் ரேஸுக்குள் மீண்டும் நுழைந்தார் யாகுப் கார்ன்ஃபில். இப்படியும் நடக்குமா என ஆச்சர்யம். மோட்டோ ஜீபி-யில் பார்க்க மிக அரிதான சம்பவங்களில் ஒன்று. அதனாலேயே இந்த ஆண்டின் சிறந்த மொமன்ட்டில் வந்துவிட்டது கார்ன்ஃபில்லின் மெகா ஜம்ப்.

லொரன்ஸோ வெற்றி

லொரன்ஸோவின் கரியர் ரோலர் கோஸ்டர்போல ஏறி இறங்கி கிடக்கிறது. 3 முறை உலக சாம்பியன் பட்டம் வாங்கிவிட்டு டுகாட்டியில் அடியெடுத்து வைத்தபிறகு ஒரு வெற்றி கூட இல்லாமல் தவழ்ந்து கொண்டிருந்தவர் இந்த ஆண்டு முதல் 5 ரேஸ்கள் அப்படியே இருந்தார். ஆனால், லீமான்ஸ் ரேஸூக்கு பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை முகல்லோவில் தனது முதல் வெற்றியை பதிவுசெய்துவிட்டார்.

அடுத்து கேட்டலூனியாவிலும் வெற்றி. ஆஸ்த்ரியாவிலும் வெற்றி. ஆஸ்த்ரியாவில் மார்க்கஸூக்கும், லொரன்ஸோவுக்கும் இடையே 0.130 நொடிகள் மட்டுமே வித்தியாசம். ஒவ்வொரு கார்னரிலும் மார்க்கஸும், லொரன்ஸோவும் ஒருவரையொருவர் முந்திக்கொண்டிருக்க கடைசி லேப்பின் கடைசி கார்னரில் டிஃபெண்ட் செய்து, கார்னர் முடிந்தவுடன் த்ராட்டிலை முறுக்கி நுட்பமாக வென்றிருப்பார். இந்த ஆண்டு மனதில் நின்ற வெற்றிகளில் அதுவும் ஒன்று.

மலேஷியா ரேஸ்

மலேஷியாவில் வழக்கமாக ராஸி கொடிதான் பறக்கும். இந்த முறை மக்கள் மார்க்கஸ் மயமாக இருந்தார்கள். ரேஸ் ஆரம்பித்த முதல் 2 கார்னர்களிலேயே ராஸி எல்லோரையும் கடந்து முதல் பொசிஷனுக்கு சென்றுவிட்டார். மார்க்கஸ் இரண்டாம் இடத்தில் அவரை பின்தொடர்ந்தார். ராஸி, மார்க்கஸ் இருவருக்கும் இடையில் இருந்த இடைவெளி குறைந்துகொண்டே வந்தது.

3-வது இடத்துக்கு டேனி பெட்ரோஸா, அலெக்ஸ் ரின்ஸ், ஜார்க்கோ, டோவிசியோசோ, மேவரிக் வினேல்ஸ் போட்டிபோட்டுக் கொண்டிருந்தார்கள். ராஸியை நெருங்கியிருந்தார் மார்க்கஸ். ஆனால், ஓவர்டேக் செய்யவில்லை. ராஸியின் கம்பேக் இதுதான் என்று முடிவுசெய்து காத்திருந்தோம். ரேஸ் முடிவதற்கு இன்னும் இரண்டு கார்னர்களே இருக்கும் நிலையில் ராஸி விழுந்துவிட்டார். ராஸி ரசிகர்கள் எல்லோரும் தலையில் கைவைத்து அமைதியாக உட்கார்ந்துவிட்டார்கள். ராஸி தவறு செய்வார் என்று கணித்திருந்தார் போல மார்க்கஸ்.

டேனி பெட்ரோஸா ஓய்வு

டேனி பெட்ரோஸா இந்த ஆண்டு தனது மோட்டோ ஜீபி கரியரை முடித்துக்கொண்டார். 10 ஆண்டுக்கான டாப் 5 மோட்டோ ஜீபி ரேஸர்கள் என்று பட்டியல் எடுத்தால் அதில் பெட்ரோஸாவின் பெயர் நிச்சயம் இருக்கும். கடந்த இரண்டு அண்டுகளாக பெட்ரோஸாவால் ஒரேயொரு வெற்றியை மட்டுமே பதிவுசெய்ய முடிந்தது. இந்த ஆண்டு ஒரு வெற்றி கூட இல்லை. டேனி பெட்ரோஸாவை யமஹா வாங்க திட்டமிட்டிருந்தது.

ஆனால், ஆரம்பம் முதல் ஹோண்டாவில் இருப்பதால் டேனி இதற்கு சம்மதிக்கவில்லை. தனது கரியரை ஹோண்டாவிலேயே முடித்துக்கொண்டார். மோட்டோ ஜீபி-யின் சாம்பியன்கள் எல்லோருமே இவருடன் போட்டிபோடுவது கஷ்டம் என்று சொல்கிறார்கள். சாம்பியன் பட்டம் வாங்கவில்லை என்றாலும் மோட்டோ ஜீபி இவரை லெஜண்டு என்று அறிவித்து மரியாதையோடு வழியனுப்பி வைத்திருக்கிறது.

கேன் ஆன்கு

மோட்டோ ஜீபி-யின் மிக நெகிழ்ச்சியாக சம்பவம் கேன் ஆன்குவின் வெற்றி. 15 வயதில் மோட்டோ 3 போட்டியில் வெற்றி பெற்று மோட்டோ ஜீபி வரலாற்றிலேயே இளம் வயதில் வென்ற வீரர் என்று பெயர்வாங்கிவிட்டார்.

மோட்டோ 3 ரேஸில் போடியம் வென்ற முதல் துருக்கி வீரர் இவர்தான். அதுமட்டுமில்லை, தனது முதல் போட்டியிலேயே போடியம் ஏறிய இளம் வீரரும் இவர்தான். வைல்டு கார்டு என்ட்ரியாக வந்து முதலிடம் பிடித்த இளம் வீரரும் இவர்தான்.

ஆரகன் போட்டி

இந்த ஆண்டு ஆரகன் சர்யுட்டில் நடந்த போட்டி மோட்டா ஜீபி-யின் சிறந்த போட்டிகளில் ஒன்று. முதல் கார்னரிலேயே மார்க்கஸை ஓவர்டேக் செய்து கிராஷ் ஆகிவிட்டார் லொரன்ஸோ.

டோவிசியோஸோ, மார்க்கஸ், ஐயோனே, ரின்ஸ் என முதலிடத்துக்கு 5 பேர் போட்டியிட்டார்கள். ரேஸ் முடிய 10 லேப்களே இருக்கும் நிலையில் மார்க்கஸ் முந்தினார், அடுத்த கார்னரில் டோவி முந்தினார், அடுத்து மீண்டும் மார்க்கஸ், அடுத்த கார்னரிலேயே டோவி முந்தினார். சில கார்னர்கள் கழித்து மார்க்கஸை நடுவில் வைத்துக்கொண்டு டோவி, ஐயோனே இருவரும் ஓவர்டேக் செய்தார்கள். நீளமான ஸ்ட்ரெய்ட் வந்தவுடன் டோவி, மார்க்கஸ் இருவரும் விர்ர்ர்ரூம் என்று உறுமிக்கொண்டு ஐயோனேவை கடந்து சென்றுவிடுவார்கள்.

யார்தான் வெற்றிபெருவார்கள் என்று பரபரப்பாக காத்திருந்த நேரத்தில் மீண்டும் ஆரகனில் ஒரு ஸ்பானிஷ் ரைடர்தான் வென்றார். ஆரகனில் ஸ்பானிஷ் ரைடர்கள் மட்டுமே வெற்றபெருவார்கள் என்ற பெயர் மார்க்கஸ் மூலம் நிலைத்துவிட்டது. ஹாரர் படம் போல கவனம் சிதறாமல் இதய படபடப்புடன் பார்த்த ரேஸ் அது.

ராஸி மார்க்கஸ் சண்டை

‘GOAT ராஸி இல்லை மார்க்கஸ்தான்’ என்று மார்க் மார்க்கஸ் ஃபேன்ஸ் ஒரு பக்கம் சொல்லிக்கொண்டிருக்க, ‘39 வயசுல மார்க்கஸ்க்கு டஃப் கொடுக்குறான் பாரு எங்க ஆளுதான் லெஜண்டு’ என்று பதிலுக்கு ராஸி ஃபேன்ஸ் மல்லுக்கட்ட ரசிகர்கள் சண்டையெல்லாம் ஓரம்வைத்துவிட்டு, அர்ஜன்டினாவில் இவர்கள் இருவருமே களத்தில் சண்டைபோட்டனர்.

“Marquez has destroyed our sport” என்று ரேஸ் முடிந்தவுடன் சொன்னார் ராஸி. இதற்கு காரணம் அர்ஜன்டினாவில் மார்க்கஸின் சொதப்பல்கள். க்ரிட்டில் எதிர்திசையில் வந்ததால் பெனால்ட்டி வாங்கி ரேஸில் 19-வது இடத்துக்கு தள்ளப்பட்டார் மார்க்கஸ். வேகமாக முன்னேற வேண்டும் என்பதற்காக முதலில் அலெக்ஸ் எஸ்பேகரோ, பிறகு ஃபிரான்கோ மார்பிடெல்லி மீது உரசி சென்றார். கடைசியாக ராஸியை முந்தி செல்ல முயன்று அவரை டிராக்கை விட்டு ஒதுக்கி புள்தரையில் விழ வைத்தார். இதனால் ராஸி ஃபேன்ஸ் மட்டுமில்லை மோட்டோ ஜீபி ரசிகர்களே மார்க்கஸ் மீது கடுப்பானார்கள்.

- ரஞ்சித் ரூஸோ