Published:Updated:

ஸ்விங்...யார்க்கர்...பௌன்சர்...மிரட்டும் மூவர் கூட்டணி! ஸ்போர்ட்ஸ் விகடன் - டிசம்பர்!

ஸ்விங்...யார்க்கர்...பௌன்சர்...மிரட்டும் மூவர் கூட்டணி! ஸ்போர்ட்ஸ் விகடன் - டிசம்பர்!
News
ஸ்விங்...யார்க்கர்...பௌன்சர்...மிரட்டும் மூவர் கூட்டணி! ஸ்போர்ட்ஸ் விகடன் - டிசம்பர்!

ஸ்விங்...யார்க்கர்...பௌன்சர்...மிரட்டும் மூவர் கூட்டணி! ஸ்போர்ட்ஸ் விகடன் - டிசம்பர்!

ஸ்போர்ட்ஸ் விகடன் டிசம்பர் ஸ்பெஷல்

இந்திய கிரிக்கெட்டுக்கு உச்சத்தில் தொடங்கியிருக்கிறது 2019. 72 ஆண்டுகளில் முதல்முறையாக ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் தொடரை வென்றிருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. இவ்வளவு ஆண்டுகளில் இதுதான் ஆஸ்திரேலியாவின் மிக மோசமான அணி என்கிற குற்றச்சாட்டுகள் இருந்தாலும், ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது மிகப்பெரிய சாதனையே.

இந்த மாத ஸ்போர்ட்ஸ் விகடன் இதழை டவுன்லோடு செய்ய http://bit.ly/2FpyZ6q

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

7 இன்னிங்ஸ்களில், ஆஸ்திரேலியாவின் 67 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்த வெற்றிக்கு மிகப்பெரிய பங்காற்றியிருக்கிறது இந்திய பௌலிங் கூட்டணி. ஜஸ்ப்ரித் பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார் என மிரட்டலான பௌலிங் படை. இந்தியாவின் இந்த வரலாற்று வெற்றியின் பின்னால் நிற்கிறது. அதிலும் குறிப்பாக இஷாந்த், பும்ரா, ஷமி அடங்கிய மூவர் கூட்டணி, விக்கெட் வேட்டையில் 90-களின் வெஸ்ட் இண்டீஸ் பௌலிங்கையே விஞ்சியிருக்கிறது. 

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் மட்டுமல்ல 2018 முழுக்க மிகவும் சிறப்பாகப் பந்து வீசி ஆச்சர்யப்படுத்தியது பும்ரா - இஷாந்த்- ஷமி எனும் மூவர் கூட்டணி. வேகப்பந்து வீச்சில்தான் இந்தியா சுமார் என்கிற விமர்சனங்களை மொத்தமாகத் துடைத்தெறிந்துவிட்டது இந்த மூவரின் பந்துவீச்சும். பெர்த் டெஸ்ட்  தோல்விக்குப் பிறகு 1-1 என டெ ஸ்ட் தொடர் சமநிலைக்கு வந்துநிற்க, மெல்போர்னில் மிரட்டினார் பும்ரா. முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள், இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகள் என பும்ராவின் பந்துவீச்சு ஆஸ்திரேலியாவின் பேட்டிங் ஆர்டரை ஒன்றும் இல்லாமல் ஆக்கியது. பேட்டிங், ஸ்பின் மட்டுமல்லாமல் வேகப்பந்து வீச்சிலும் இந்தியா உச்சத்தைத் தொட்டிருக்கிறது என்று மகிழ்ச்சியோடு சொல்லலாம். அந்த பௌலிங் கூட்டணியை கோலி எப்படி மெருகேற்றினார் என்பதுதான் இந்த இதழின் கவர் ஸ்டோரி. 

கிரிக்கெட்டைத் தாண்டி 2018 இந்திய விளையாட்டு உலகத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் மிகச் சிறப்பான ஆண்டு. கிரிக்கெட், கால்பந்து, செஸ், வில்வித்தை, டேபிள் டென்னிஸ் என விளையாட்டின் அத்தனை வெரைட்டிகளிலும் வென்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த 10 தமிழர்களைப் பற்றிய சிறப்புக் கட்டுரையும் இந்த இதழில் இடம்பிடித்திருக்கிறது. கடந்த ஆண்டு விளையாட்டு உலகில் சாதித்த 10 பெண்கள் பற்றிய கட்டுரை இந்த இதழின் இன்னொரு ஸ்பெஷல். கால்பந்து, டென்னிஸ், பேட்மின்டன், மோடோ ஜி.பி, கபடி, ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் என ஒட்டுமொத்தமாக 2018-ம் ஆண்டை ரீவைண்ட் செய்துள்ளோம். அதுமட்டுமல்லாமல், கடந்த ஆண்டின் பெஸ்ட் மொமன்ட்ஸ், சிறந்த `quotes' உங்களை நாஸ்டால்ஜியாவில் மூழ்கடிக்கும். 

இந்த மாத ஸ்போர்ட்ஸ் விகடன் இதழை டவுன்லோடு செய்ய http://bit.ly/2FpyZ6q

2018 ரீவைண்ட் தவிர்த்து, ஸ்போர்ட்ஸ் விகடன் ஸ்பெஷல் கட்டுரைகளும் இந்த இதழில் உண்டு. `All or Nothing' - கட்டாயம் படிக்கவேண்டிய ஒரு கட்டுரை. கால்பந்து உலகின் மோஸ்ட் வான்டட் மேனேஜரான பெப் கார்டியாலோவின் மான்செஸ்டர் சிட்டி அணி பற்றிய டாகுமென்டரி. 90 நிமிடங்கள் களத்தில் ஆடுவதன் பின்னால், ஒரு கால்பந்து அணி எப்படியெல்லாம் இயங்குகிறது என்பதைச் சொல்லும் டாகுமென்டரியை உங்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளோம். அது தவிர, டக்வொர்த் லூயிஸ், டைம் அவுட், ஷூட் தி கேள்வி என ஸ்போர்ட்ஸ் விகடனின் அத்தனை சிறப்புகளும் இந்த இதழிலும் தொடர்கிறது. 

ஸ்போர்ட்ஸ் விகடனைப் பற்றிய உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுத மறக்காதீர்கள். 
sports@vikatan.com உங்கள் இ-மெயில்களுக்காகக் காத்திருக்கிறது!

இந்த மாத ஸ்போர்ட்ஸ் விகடன் இதழை டவுன்லோடு செய்ய http://bit.ly/2FpyZ6q