Election bannerElection banner
Published:Updated:

சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் தரவரிசைப் பட்டியல் - முதலிடம் பிடித்து மேரிகோம் அசத்தல்

சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் தரவரிசைப் பட்டியல்  - முதலிடம் பிடித்து மேரிகோம் அசத்தல்
சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் தரவரிசைப் பட்டியல் - முதலிடம் பிடித்து மேரிகோம் அசத்தல்

சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் தரவரிசைப் பட்டியல் - முதலிடம் பிடித்து மேரிகோம் அசத்தல்

சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் தரவரிசைப் பட்டியலில் 45-48 கிலோ எடைப் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார் இந்தியாவின் மேரிகோம்.

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருப்பவர். திருமணம் ஆகி மூன்று குழந்தைக்கு தாயான பின்னும், தனது அசாத்திய பயிற்சியால் குத்துச்சண்டை உலகுக்கு மீண்டும் வந்து, நான் இன்னும் உறுதியாக இருக்கிறேன் என உரக்கச் சொன்னவர். 

அவரது 2.0 வெர்ஷன் ஆட்டம், அனைவராலும் பாராட்டப்படவேண்டியது. கடந்த 2018 -ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற உலக மகளிர் சாம்பியன்ஷிப் குத்துச்சண்டைப் போட்டியில் 48 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில், உக்ரைனின் ஹானா ஒகோடாவை 5:0 என்ற கணக்கில் வீழ்த்தி, உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டைப் போட்டிகளில் 6 -வது முறையாகத் தங்கம் வென்று அசத்தினார்

இதன்மூலம், ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பிரிவுகளிலும் உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டைப் போட்டிகளில் அதிக தங்கம் (6 முறை) வென்றவர் என்ற சாதனையை கியூபாவின் ஃபெலிக்ஸ் சாவோனுடன் மேரிகோம் பகிர்ந்துகொண்டிருக்கிறார். 6 முறை உலக சாம்பியன்ஷிப் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையையும் தனதாக்கினார்.

இந்த நிலையில், சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் தரவரிசைப் பட்டியலில் 45-48 எடை பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார் மேரிகோம். நேற்று  சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் வெளியிட்ட பட்டியலில் 1700 புள்ளிகளுடன் அவர் முதலிடம் பிடித்தார். ஒகோடா 1100 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். இந்த ஆண்டு சிறப்பாக தொடங்கியுள்ளதாக மேரிகோமுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

அடுத்த ஆண்டு (2020) டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் 48 கிலோ பிரிவு சேர்க்கப்படவில்லை. இதனால் அவர் 51 கிலோ எடைப் பிரிவில் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது. எனினும் இன்னும் அதிகாரபூர்வமான தகவல் வெளியாகவில்லை. 

இந்தியாவின் தங்க மங்கை மேரி கோமுக்கு வாழ்த்துகள்... நீங்களும் உங்கள் வாழ்த்துகளை இங்கு பதிவு செய்யலாமே.....

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு