2017மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை முடிந்தபோது, மொத்த தேசமும் இந்தியப் பெண்கள் அணியைக் கொண்டாடினார். கேப்டன் மிதாலி ராஜ் பெரிய ஸ்டாராகத் தெரிந்தார். ஒரு வருடம் கழித்து... இப்போது டி-20 உலகக் கோப்பை முடிந்தபோது, இந்திய மகளிர் அணியைச் சுற்றிப் பல சர்ச்சைகள், பல குற்றச்சாட்டுகள். இப்போதும் மிதாலிதான் டாக் ஆஃப் தி நேஷன்!

டி-20 உலகக் கோப்பையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் காயம் காரணமாக ஒருநாள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ஆடவில்லை. அந்தப் போட்டியில் அவர் இல்லாமலேயே வெற்றி பெற்றது இந்தியா. இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியிலும் மிதாலி ராஜ் இல்லாமல் களமிறங்கியது இந்திய அணி. “முந்தைய போட்டியில் வெற்றி பெற்ற அணியை மாற்றவில்லை” என்று பதில் சொன்னார் டி-20 கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர். மோசமாக விளையாடி அந்தப் போட்டியில் இந்தியா தோற்றதும், ‘மிதாலி இல்லாததுதான் தோல்விக்குக் காரணம்’ என்று கொதித்தார்கள் இந்திய ரசிகர்கள். ஆரம்பத்தில் மிதாலி - ஹர்மன்ப்ரீத் பிரச்னையாக இருந்தது, மெள்ள மெள்ள அது ரமேஷ் பொவார் - மிதாலி மோதலாக உருவெடுத்தது.

கடந்த வாரம் இந்தியா திரும்பியதும் பயிற்சியாளர் ரமேஷ் பொவார்மீது குற்றம் சாட்டி, பி.சி.சி.ஐ-க்கு மிதாலி கடிதம் எழுத, பதிலுக்கு பொவார் மிதாலிமீது புகார்களை அடுக்க, பிரச்னை சூடுபிடித்தது. “ஓப்பனிங் இறக்காவிட்டால், ஓய்வுபெற்றுவிடுவதாக மிதாலி பிளாக் மெயில் செய்தார்” என்கிறார் பொவார். “நான் அணியில் இல்லை என்பதை டாஸ் போடும்வரை சொல்லவே இல்லை. ஒரு சீனியர் பிளேயரை இப்படியா நடத்துவது” என்று வருந்துகிறார் மிதாலி. இந்திய கிரிக்கெட் சங்கம் விசாரணைகளை நடத்திக்கொண்டிருக்க, கடந்த வியாழக்கிழமையுடன் முடிவுக்கு வந்த ரமேஷ் பொவாரின் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை. இப்போது மீண்டும் புதிய பயிற்சியாளரைத் தேடப்போகிறார்கள். இந்த ஆண்டின் மூன்றாவது பயிற்சியாளர்..!

சில மாதங்களுக்கு முன்பே, பயிற்சியாளருடன் வீராங்கனைகளுக்குப் பிரச்னை இருந்தது. அப்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தவர் துஷார் அரோத்.

ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் தொடர், முத்தரப்புத் தொடர், ஆசியக் கோப்பை ஆகியவற்றில் இந்தியா சொதப்ப, பயிற்சியாளரின் அணுகுமுறையில் அதிருப்தி தெரிவித்தார்கள் இந்திய வீராங்கனைகள். ஒரு நாளுக்கு, காலை இரண்டரை மணி நேரம், மாலை இரண்டரை மணி நேரம் என இரண்டு செஷன்களாக அவர் பயிற்சிக்கு வரச்சொன்னது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதை அவரிடம் முறையிட்டபோது, அவர் மாற்றிக்கொள்ள மறுத்திருக்கிறார். பிரச்னையை சீனியர் வீராங்கனைகள் போர்டுக்கு எடுத்துச்சென்று நெருக்கடி ஏற்படுத்த, ஜூலை மாதம் பதவி விலகினார் பயிற்சியாளர். அரோத் என்ற பெயர் தெரியாத நபர் வெளியேறியபோது எந்த சலசலப்பும் இல்லை. இப்போது மிதாலி ராஜ் எனும் நட்சத்திரத்துக்கு சங்கடம் ஏற்பட்டதால், இந்த விஷயம் இவ்வளவு கவனம் பெற்றிருக்கிறது. அவ்வளவுதான்.

பிரச்னை அவர்கள் இருவருக்குள் மட்டும் இல்லை. பொவார் - மிதாலி இடையிலான ஈகோ மோதல் சைலன்ட்டாக நிகழ்ந்துகொண்டிருக்க, ‘அணித் தேர்வில் நாங்கள் தலையிட முடியாது. அது எங்கள் தலைவலி இல்லை’ என்று அறிக்கை விட்டார் COA (Committee of Administrators) உறுப்பினர் டயானா எடுல்ஜி. மிதாலி அவர்மீதும் பாயத் தவறவில்லை. அதோடு நிற்கவில்லை எடுல்ஜி மீதான குற்றச்சாட்டு. “இப்போது இப்படிப் பேசும் எடுல்ஜி, ஆசியக் கோப்பை அணியில் பூஜா வஸ்த்ராகரைத் தேர்வு செய்யாதது பற்றி என்னை ஏன் கேள்வி கேட்டார்?” என்று கிளம்பினார் முன்னாள் பயிற்சியாளர் அரோத். இரண்டு முனைகளில் மட்டுமல்ல, இந்திய மகளிர் கிரிக்கெட்டுக்குத் திரும்பும் இடமெல்லாம் கூர்மையான கத்திகள் தொங்கிக்கொண்டிருக்கின்றன!

மிதாலி ராஜ், ஹர்மன்ப்ரீத் கௌர், ரமேஷ் பொவார், டயானா எடுல்ஜி... யார்மீது தவறு என்பதை ஆராய்வதைவிட முக்கியமான ஒரு விஷயம், எதனால் இந்தப் பிரச்னைகள் கிளம்புகின்றன என்பதை ஆராய வேண்டியது அவசியம்.

2017 உலகக் கோப்பைக்கு முன் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் இப்படியான பிரச்னைகள் எழவில்லை. மிதாலி, ஹர்மன், ஸ்மிரிதி என வீராங்கனைகளைக் கொண்டாடத் தொடங்கினோம், மீண்டும் கோலி - கும்பிளே நிகழ்வுபோல், கிரெக் சேப்பல் - கங்குலி நிகழ்வுபோல் ஒன்று நிகழ்ந்துள்ளது.

‘பயிற்சி முறைகள் எங்களுக்கு சரிவரவில்லை’ - கும்பிளேவைப் பற்றி கோலி சொன்னது. இதுபோலதான், 4 மாதங்களுக்கு முன் அரோத் பற்றி, இந்திய சீனியர் வீராங்கனைகள் சொன்னார்கள். ‘அவர் நான் எதிர்பார்க்கும் ஒத்துழைப்பைக் கொடுக்கவில்லை’ - கங்குலி பற்றி சேப்பல் சொன்னது. இப்போது மிதாலி பற்றி பொவார் சொல்வதும் கிட்டத்தட்ட அதே கதைதான். ‘அவர் எனக்கான மரியாதையைக் கொடுக்கவில்லை. என்னை ஒழித்துக்கட்டப் பார்க்கிறார்’ - என சேப்பல் பற்றி கங்குலி சொன்னதற்கும், இப்போது பொவார் பற்றி மிதாலி சொல்வதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

தவறான புரிதல், டெக்னிக்கல் பிரச்னை, அணிக்காக எடுக்கப்பட்ட முடிவு என்பதெல்லாம் இங்கு சிக்கல் இல்லை. எல்லாமே ஒவ்வொருவரின் ஈகோவாலும் எழுந்த பிரச்னைகளே. இது இந்திய கிரிக்கெட் ஒவ்வொரு வீரருக்கும், நிர்வாகிக்கும் தண்ணீர் ஊற்றி வளர்த்திக்கொண்டிருக்கும் குணம். கொஞ்சம் பெயரெடுத்துவிட்டால், இங்கு தனி மரியாதை கொடுக்கப்பட்டே ஆகவேண்டும். இல்லையென்றால், கேப்டன் மாற்றம், பயிற்சியாளர் மாற்றம் எல்லாமே நிகழும். ஈகோவைத் தவிர இங்கு வேறு எந்தப் பிரச்னையும் இல்லை.

ரமேஷ் பொவார் - நிச்சயம் பிரச்னைகளை சரியாகக் கையாண்டிருக்க வேண்டும். 20 ஆண்டுகளாக இந்திய அணிக்கு விளையாடும் ஒரு வீரரை அவ்வளவு மரியாதைக் குறைவாக நடத்தியிருக்கக் கூடாது. என்னதான் ஒரு வீரர் பிடிவாதமாக இருந்தாலும், இவர் அதை சரிசெய்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, மிதாலி வலைப்பயிற்சிக்கு வந்தால் அங்கிருந்து செல்வது, முகம் பார்க்காமல் நடந்துகொள்வது, ஓர் அணிக்கு ஆரோக்கியமானது அல்ல.

ஜெமிமா ராட்ரிக்யூஸ், ராதா யாதவ் போன்ற வீராங்கனைகள் பிறப்பதற்கு முன்பே இந்திய அணியின் உடை அணிந்து விளையாடியவர் மிதாலி. மிதாலியை அணியில் எடுப்பது, எடுக்காமல் இருப்பது போன்ற முடிவை எடுக்கும் உரிமை அவருக்கும் இருக்கிறது. ஆனால், மிதாலி அரையிறுதியில் ஆடவில்லை என்பதை, டாஸ் போடுவதற்கு முன்புவரை சொல்லாமல் இருந்ததை ஏற்க முடியாது.

‘20 ஆண்டுகளில் இதுபோல் நான் வருந்தியதில்லை’ என்கிறார் மிதாலி. 20 ஆண்டுகளில் ஒருமுறை கூடவா பயிற்சியாளருடன் பிரச்னை ஏற்பட்டிருக்காது? 20 ஆண்டுகளில் அணிக்குள்ளான பிரச்னையை, அவர்களுக்குள்ளாகவே எப்படித் தீர்த்துக்கொள்வது என்பதைக் கற்றுக்கொள்ளாமல் விட்டுவிட்டாரா? இங்கிலாந்துடனான அரையிறுதியில் இந்தியா தோற்றவுடன், தன் மேனேஜர், டி-20 கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌரைத் திட்டி ட்வீட் செய்ததுக்கு, மிதாலி வருத்தம் தெரிவிக்கவில்லை. ஏன் மிதாலி?

அதுமட்டுமல்லாமல், பி.சி.சி.ஐ-க்கு அவர் எழுதிய கடிதத்தில், பொவாரின் திட்டத்துக்கு ஹர்மன்ப்ரீத் சம்மதித்ததற்காக வருத்தம் தெரிவித்தார் மிதாலி. அந்தக் கடித்தத்தில் ‘என்ன இருந்தாலும், ஒருநாள் கேப்டனாக, ஹர்மனை முக்கியமான வீராங்கனையாகப் பார்க்கிறேன்’ என்று ஒரு வரி எழுதியிருக்கிறார். நடக்கும் பிரச்னைகளுக்குச் சம்பந்தம் இல்லாத அந்த வரியில் ‘இன்னும் நான்தான் ஒருநாள் அணியின் கேப்டன்’ என்ற தொனி!

இன்னொருபுறம், மிதாலி அரையிறுதியில் ஆடவில்லை என்பதை கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர், துணைக் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா முந்தைய நாளே அறிந்திருந்தும், அவர்கள் ஏன் மிதாலியிடம் அதைத் தெரிவிக்கவில்லை? பயிற்சியாளர்கள் தாண்டி, பிளேயர்களுக்கு இடையிலேயும் ஒரு பனிப்போர் நடந்துகொண்டிருப்பதையும் உணர முடிகிறது.

சேப்பல் - கங்குலி, கும்ப்ளே - கோலி வரிசையில் பொவார் - மிதாலி பிரச்னையும் இந்திய கிரிக்கெட்டின் கறுப்புப் பக்கத்தில் எழுதப்படும். ஒவ்வொருவரையும் நாம் கொண்டாடிக் கொண்டாடி நட்சத்திரமாக்க, ஈகோ என்ற விஷம், அந்தக் கறுப்புப் பக்கங்களை நிரப்பிக்கொண்டே இருக்கும்!

மு.பிரதீப்கிருஷ்ணா