Published:Updated:

ஐபிஎல், ஐஎஸ்எல் வரிசையில் வருகிறது பிவிஎல் - அசத்துமா சென்னை ஸ்பார்டன்ஸ்?

ஐபிஎல், ஐஎஸ்எல் வரிசையில் வருகிறது பிவிஎல் - அசத்துமா சென்னை ஸ்பார்டன்ஸ்?
ஐபிஎல், ஐஎஸ்எல் வரிசையில் வருகிறது பிவிஎல் - அசத்துமா சென்னை ஸ்பார்டன்ஸ்?

கிரிக்கெட், கால்பந்து, கபடி, பேட்மின்டன் வரிசையில், இந்தியாவில் அறிமுகமாகிறது வாலிபால் ப்ரோ லீக். இந்திய வாலிபால் கூட்டமைப்பு மற்றும் பேஸ்லைன் இந்தியா நிறுவனம் வழங்கும் முதலாவது ப்ரோ வாலிபால் லீக், பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது. ஐபிஎல், ஐஎஸ்எல் ஹிட் அடித்தது போல, வாலிபால் லீக் தொடரும் இந்தியாவில் ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


சென்னை ஸ்பார்டன்ஸ், அகமதாபாத் டிஃபெண்டர்ஸ், காலிகட் ஹிரோஸ், யூ மும்பை வாலி, ஹைதராபாத் ப்ளாக்ஹாக்ஸ், கொச்சி ப்ளூஸ்பைக்கர்ஸ் என 6 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் தலா ஒரு முறை லீக் சுற்றில் போட்டியிட வேண்டும். லீக் சுற்றின் முடிவில், முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குத் தகுதிபெறும்.  ஒவ்வொரு அணியிலும் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் உட்பட 12 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 

இந்நிலையில், இன்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், சென்னை ஸ்பார்டன்ஸ் அணி வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். மேலும், அணியின் சீருடை, வலைத்தளம் ஆகியவையும் வெளியிடப்பட்டது. இந்திய நட்சத்திர வீரர் அகின், தமிழகத்தைச் சேர்ந்த நவீன், ராஜா ஜேக்கப் ஆகியோரும் அணியில் தேர்வாகியுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் போலவே, மஞ்சள் நிற ஜெர்சியைக் கொண்டுள்ள சென்னை ஸ்பார்டன்ஸ் அணி, ப்ரோ வாலிபால் தொடரில் கலக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 2-ம் தேதி தொடங்கும் வாலிபால் ப்ரோ லீக் போட்டிகள், கொச்சி ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கத்திலும், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்திலும் நடைபெற உள்ளன.