Published:Updated:

கபடி... கபடி..!

கபடி... கபடி..!
பிரீமியம் ஸ்டோரி
கபடி... கபடி..!

போட்டி

கபடி... கபடி..!

போட்டி

Published:Updated:
கபடி... கபடி..!
பிரீமியம் ஸ்டோரி
கபடி... கபடி..!

வேலம்மாள் நெக்சஸ் (Nexus) பள்ளிக் குழுமம், புரோ கபடி லீக்கின் தமிழ்நாடு அணியான ‘தமிழ் தலைவாஸ்’ கபடி அணியுடன் இணைந்து, மாநில அளவிலான ஜூனியர் கபடிப் போட்டியை, சென்னை, மேலயனம்பாக்கம்  வேலம்மாள் வித்யாலயா இணைப்புப் பள்ளியில் நடத்தியது. 

முதற்கட்ட போட்டிகளில்  வெற்றிபெற்ற 15 மகளிர் கபடி அணிகள் மற்றும் 17 ஆண்கள் கபடி அணிகள், இந்தப் போட்டியில் பங்கேற்றன.

கபடி... கபடி..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த அணிகளுக்குத் தமிழ் தலைவாஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளரும் தற்போதைய தொழில்நுட்ப இயக்குநருமான பாஸ்கரன், பயிற்சி அளித்தார். இறுதிப் போட்டியின்போது, ஒட்டுமொத்தத் தமிழ் தலைவாஸ் அணியும் வந்திருந்து, மாணவ வீரர்களை உற்சாகப்படுத்தியது.

கபடி... கபடி..!


ஆண்கள் பிரிவில், தஞ்சாவூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கோப்பையைத் தட்டிச்சென்றது. சிறந்த ரைடராக சுரேஷ் குமார் (அரசு மே.நி.பள்ளி, விழுப்புரம்), சிறந்த டிஃபன்டராக ஸ்டீபன் (அரசு மே.நி.பள்ளி, தஞ்சாவூர்), தேர்வாகினர். பெண்கள் பிரிவில், சென்னை அமிர்தா வித்யாலயம் அணி கோப்பையை வென்றது. சிறந்த ரைடராக ஆராதனா, சிறந்த டிஃபன்டராக நர்மதா தேர்வாகினர். இருவரும், பாண்டிச்சேரி தந்தை பெரியார் பெண்கள் மே.நி.பள்ளியைச் சேர்ந்தவர்கள்.

வேலம்மாள் பள்ளியின் முதல்வர், “முதன்முறையாக வேலம்மாள் கல்விக் குழுமம் சார்பாக, மாநில அளவிலான கபடிப் போட்டியினை நடத்தியுள்ளோம். தனியார் பள்ளிகளைவிட அரசுப் பள்ளி மாணவர்களே சிறப்பாகச் செயல்பட்டு கோப்பையைத் தட்டிச்சென்றுள்ளனர்” என்றார் மகிழ்ச்சியுடன்.

- அ.தளபதி

படங்கள்: ராகேஷ்