Published:Updated:

தலைநிமிர்ந்த தமிழர்கள்!

தலைநிமிர்ந்த தமிழர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
தலைநிமிர்ந்த தமிழர்கள்!

தலைநிமிர்ந்த தமிழர்கள்!

தலைநிமிர்ந்த தமிழர்கள்!

தலைநிமிர்ந்த தமிழர்கள்!

Published:Updated:
தலைநிமிர்ந்த தமிழர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
தலைநிமிர்ந்த தமிழர்கள்!

15 தங்கம்... 24 வெள்ளி... 30 வெண்கலம் என ஆசிய விளையாட்டுப் போட்டியில் 69 பதக்கங்கள் வென்று அசத்தியிருக்கிறது இந்திய அணி. இதுவரை இல்லாத அளவுக்கு நம் தமிழக இளைஞர்கள் தேசியக்கொடியை இந்தோனேஷியாவில் பறக்கவிட்டு சாதனை படைத்துள்ளனர். அப்படிப் பட்டையைக் கிளப்பியவர்களின் பயோடேட்டா இது.

தலைநிமிர்ந்த தமிழர்கள்!

தருண் அய்யாசாமி - தடகளம்

21
வயது திருப்பூர் பையன், இந்தோனேஷியாவில் இரட்டை வெள்ளி வென்றிருக்கிறார். 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தேசிய சாதனையோடு வெள்ளி வென்றவர், 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் வெள்ளிப் பதக்கம் வென்று திரும்பியுள்ளார். ரியோ ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு காயத்தால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்தவர், தன் விடா முயற்சியால் சீக்கிரமே முழு உடல் தகுதியுடன் டிராக்கில் குதித்தார். 400 மீட்டர் தடை ஓட்டத்தை 49 நொடிகளில் முடித்த முதல் இந்திய வீரர் இவர்தான். “வெள்ளி வென்றதைவிட, டைமிங் நல்லா பண்ணுனது ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று தன் எதிர்காலத்தை நோக்கி ஓடத் தொடங்கிவிட்டார் தருண்.

தலைநிமிர்ந்த தமிழர்கள்!

வர்ஷா கௌதம் - பாய்மரப் படகோட்டுதல்

சியப்போட்டியில் தேர்வானவர்களெல்லாம் வெற்றிக்காகப் பயிற்சி பெற்றுக்கொண்டிருக்க, வாய்ப்புக்காக நீதிமன்ற வாசலில் காத்திருந்தார் வர்ஷா. இரண்டு பேர் பங்கேற்கும் பாய்மரப் படகோட்டுதல் வீராங்கனையான வர்ஷாவுக்கு, இந்திய யாச்டிங் கூட்டமைப்பே எதிரியாக அமைந்தது. தகுதி வாய்ந்த தங்கள் அணிக்குப் பதிலாக, வேறொரு இணையை அவர்கள் தேர்வு செய்ய, நீதிமன்றக் கதவுகளைத் தட்டி வெற்றிபெற்றார். இரண்டு வாரங்கள்கூட ஆசியப் போட்டிக்கென்று தனிப் பயிற்சி இல்லை. ஆனால், வெற்றி பெறவேண்டும் என்ற தாகம் ஆசியப்போட்டியில் வெள்ளிப்பதக்கத்தைப் பரிசளித்திருக்கிறது இருவருக்கும்.

தலைநிமிர்ந்த தமிழர்கள்!

ஆரோக்கிய ராஜிவ் - தடகளம்

நீ
ளம் தாண்டுதலில் தன் விளையாட்டுப் பயணத்தைத் தொடங்கியவர், இப்போது 400 மீட்டர் ஸ்பெஷலிஸ்ட். 400 மீட்டர் ஓட்டத்தில் 0.14 விநாடிகளில் வெண்கலப் பதக்கத்தை இழந்தார். ஆனால், அடுத்தடுத்த ரேஸ்களில் அந்தத் தோல்வியைத் துரத்தினார். 4X400 மீட்டர் கலப்பு தடை ஓட்டத்திலும், 4X400 மீட்டர் ஆண்கள் தடை ஓட்டத்திலும் வெள்ளி வென்று அசத்தியுள்ளார் இந்தத் திருச்சி இளைஞர். ஒரு வருடத்துக்கு முன்பே திருமணம் நிச்சயிக்கப்பட, “இந்தோனேஷியாவில் நடக்கும் உலக சாம்பியன்ஷிப்பில் சாதிச்சிட்டுத்தான் கல்யாணம்” என்று பயிற்சிக்குக் கிளம்பிவிட்டார்.

தலைநிமிர்ந்த தமிழர்கள்!

பிரஜ்னேஷ் கன்னேஸ்வரன் - டென்னிஸ்

மு
ன்னணித் தமிழக வீரர் ராம்குமார் மூன்றாவது சுற்றோடு வெளியேற, டென்னிஸ் ரசிகர்கள் எதிர்பார்த்த பதக்கத்தை, ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்று கொடுத்துள்ளார் பிரஜ்னேஷ் கன்னேஸ்வரன். 2018-ம் ஆண்டு பிரஜ்னேஷின் ஆகச்சிறந்த ஆண்டு. டேவிஸ் கோப்பைப் போட்டியில் சீனாவுக்கு எதிராக அமர்க்களப்படுத்தியவர், மெர்சிடீஸ் ஓப்பனில் 28-ம் நிலை வீரர் டெனிஸ் ஷபவலோவை வென்று ஷாக் கொடுத்தார். கடந்த சில மாதங்களாக நல்ல ஃபார்மில் இருந்தாலும், இந்தத் தொடருக்கு அவர் கொடுத்த விலை மிகப்பெரியது. எந்த டென்னிஸ் வீரருக்கும் கிராண்ட் ஸ்லாம் விளையாடுவது கனவு. இவருக்கும் அதுதான் மிகப்பெரிய கனவு. அமெரிக்க ஓப்பன் தகுதிச் சுற்று வாய்ப்பை... தன் முதல் கிராண்ட் ஸ்லாம் வாய்ப்பை மறுத்து ஆசிய விளையாட்டுப் போட்டியில் களமிறங்கினார் பிரஜ்னேஷ். கொடுத்த விலைக்குக் கிடைத்தது வெண்கலம்!

தலைநிமிர்ந்த தமிழர்கள்!

தீபிகா பல்லிகல், ஜோஷ்னா சின்னப்பா, சுனன்யா குருவிலா - ஸ்குவாஷ்

தலைநிமிர்ந்த தமிழர்கள்!2014
ஆசியன் கேம்ஸின் பர்ஃபாமன்ஸை அப்படியே ரிப்பீட் செய்துள்ளார் தீபிகா பல்லிகல். ஒற்றையர் பிரிவில் வெண்கலம். பெண்கள் அணிப் பிரிவில் வெள்ளி என மீண்டும் அதே இரண்டு பதக்கங்கள். கடந்த முறை காலிறுதியில் தீபிகாவிடம் வீழ்ந்த ஜோஷ்னா இப்போது தனி நபர் பிரிவில் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். பலம் வாய்ந்த மலேசிய அணியை அரையிறுதியில் எதிர்கொண்டபோது, தங்கள் அனுபவத்தைப் பயன்படுத்தி இவர்கள் ஆடிய ஆட்டம் அபாரம். இவர்களோடு இப்போது இந்திய ஸ்குவாஷ் அரங்கில் இன்னொரு இளம் நம்பிக்கை புதுவரவு அளித்துள்ளது. 19 வயது சுனன்யா குருவிலா. ஆசியப் போட்டிகளின் தொடக்கத்தில் இரண்டாவது சாய்ஸாக சிறிய அணிகளுக்கு எதிராகக் களமிறக்கப்பட்டவர், தன் அதிரடி பர்ஃபாமன்ஸால் நாக் அவுட் சுற்றில் நிரந்தர இடம் பிடித்தார். ஹாங் காங் அணிக்கெதிரான லீக் போட்டியில் அனுபவ வீராங்கனைகள் தோற்ற போதிலும், நம்பிக்கையோடு விளையாடி, தரவரிசையில் தன்னைவிட 50 இடங்கள் முன்னிருக்கும் ஹாங் காங் வீராங்கனையை வீழ்த்தி சர்ப்ரைஸ் கொடுத்தார்!

தலைநிமிர்ந்த தமிழர்கள்!

சரத் கமல், சத்யன், அமல்ராஜ் - டேபிள் டென்னிஸ்

லம் வாய்ந்த ஜப்பான் அணியை வீழ்த்தி ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் டேபிள் டென்னிஸ் பதக்கத்தை வென்று கொடுத்திருக்கிறது 3 தமிழர்கள் அடங்கிய ஆண்கள் அணி. குரூப் பிரிவில் பலம் வாய்ந்த சீன தைபே அணிக்கு எதிராகப் போராடித் தோற்றபோதும் லைக்ஸ் அள்ளினார்கள். ஆனால், காலிறுதியில் யாரும் எதிர்பாராத வகையில் ஜப்பானை வீழ்த்தினர். இளம் சென்னை வீரர் சத்யன் தன் இரண்டு போட்டிகளிலும் ஜப்பான் வீரர்களை வீழ்த்த, 60 ஆண்டுக்கால வரலாற்றில் இந்த விளையாட்டின் மூலம் முதல் வெண்கலப் பதக்கம் உறுதியானது. தென்கொரிய அணியை வீழ்த்தியிருந்தால் தங்கத்துக்கு மோதியிருக்கலாம். ஆனால், இந்தச் செயல்பாடே இந்திய அணிக்கு ஆயிரம் வாட்ஸ் நம்பிக்கை. இந்தப் பதக்கம் மட்டுமல்லாமல், மானிகா பத்ராவோடு, கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார் சரத் கமல்.

மு.பிரதீப் கிருஷ்ணா