Published:Updated:

இவள் இயற்கையின் மகள்! - கேஸ்டர் செமன்யா

இவள் இயற்கையின் மகள்! - கேஸ்டர் செமன்யா
பிரீமியம் ஸ்டோரி
இவள் இயற்கையின் மகள்! - கேஸ்டர் செமன்யா

உறுதிகொண்ட நெஞ்சினாய்...சிவ.உறுதிமொழி

இவள் இயற்கையின் மகள்! - கேஸ்டர் செமன்யா

உறுதிகொண்ட நெஞ்சினாய்...சிவ.உறுதிமொழி

Published:Updated:
இவள் இயற்கையின் மகள்! - கேஸ்டர் செமன்யா
பிரீமியம் ஸ்டோரி
இவள் இயற்கையின் மகள்! - கேஸ்டர் செமன்யா

`இறுதிச்சுற்று’ திரைப்படத்தில் ஒரு காட்சியில் மாதவன், `விளையாட்டுத் துறையில் உள்ள அரசியலை எறிந்துவிடுங்கள். தெருவுக்குத்தெரு சாதனையாளர்கள் கிடைப்பார்கள்' என ஒரு வசனம் பேசுவார். அதே அரசியலுக்குள் சிக்கி மீண்டெழுந்து, மறுபடியும் சாதனைகள் புரிந்துகொண்டிருப்பவர்தான் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கேஸ்டர் செமன்யா. உடல் சார்ந்த அரசியலை இவர் கடந்து வந்தவிதம், போராடும் ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை அளிக்கும்.

1991 ஜனவரி 7 அன்று பிறந்தவர் செமன்யா. கால்பந்து விளையாட்டிலிருந்த ஆர்வம், ஓட்டப்பந்தயத்தின் பக்கம் திரும்பியது. படிப்படியாக முன்னேறிய செமன்யா, தேசியப் போட்டிகளிலும் பின்னர், சர்வதேச அளவிலும் சாதிக்க ஆரம்பித்தார்.

இவள் இயற்கையின் மகள்! - கேஸ்டர் செமன்யா

2008-ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் பெற்ற இவருக்கு, அந்த வெற்றி உவப்பானதாக அமையவில்லை. 1:55.45 என்கிற கால அளவில் அந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்தார் செமன்யா. அதற்கு ஒரு மாதத்துக்கு முன்பாக நடந்த ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் ஓடியதைவிட நான்கு நொடிக்கு முன்பாகவே வெற்றி இலக்கை நிறைவுசெய்த காரணத்தால், இவரது பாலினம் குறித்தும் ஹார்மோன்கள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன. 1,500 மீட்டர் போட்டியில் 25 நொடி முன்னேறியிருக்கிறார். 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 8 நொடி முன்னேறியிருக்கிறார். இத்தகைய திடீர் மாற்றங்கள் ஊக்கமருந்து உட்கொள்வதால்கூட வரலாம். எனவே, `மிக அரிதாக நடைபெற்ற ஒரு சில உடல் அளவிலான மாற்றங்கள், நியாயமற்ற நன்மைகளை மற்றவர்களிடமிருந்து இவருக்குப் பிரித்து வழங்கியிருக்கலாம்’ எனப் பூசிமெழுகிய சர்வதேச தடகள அமைப்பு, இவரை ஹார்மோன் பரிசோதனைக்கும் பாலினப் பரிசோதனைக்கும் உள்ளாக்கியது. அதோடு, 2009 நவம்பரில் பதக்கத்தையும் திரும்பப் பெற்றுக்கொண்டது.

பரிசோதனை முடிவுகள் பொதுவெளிக்குக் கொண்டுவரப் படாமல் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தாலும், `இது உடல் சார்ந்த விஷயம் மட்டுமே அல்ல, பாலினப் பரிசோதனை மூலமாக இனப்பெருமையையும் ஏகாதிபத்தியத்தையும் மீண்டும் விளையாட்டுக்குள் செலுத்தும் முயற்சி' என்று கூறி தென்னாப்பிரிக்க அரசும் மக்களும் போராடினார்கள். செமன்யாவின் பதக்கம் 2010 ஜூலையில் திரும்பக் கிடைத்தது.

அதன்பிறகு தொடர்ந்த செமன்யாவின் வெற்றிகள், உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தன. எந்தப் பெண்ணின் பதக்கங்களைப் பறிக்க நினைத்தார்களோ, அதே பெண்தான் 2012 ஒலிம்பிக் போட்டியில் தன் நாட்டு தேசியக்கொடியை கம்பீரமாக ஏந்தியபடி அணிவகுப்பில் முன்நின்றார்.

இவள் இயற்கையின் மகள்! - கேஸ்டர் செமன்யா

கடந்த இரண்டு ஒலிம்பிக் போட்டி களிலும் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் செமன்யாவுக்கே தங்கம். கடந்த ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும், இந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியிலும் தங்கப்பதக்கங்கள் பெற்றுள்ளார் செமன்யா.

இப்போது செமன்யாவின் வழியில் மேலும் ஒரு தடைக்கல் நிற்கிறது. `800 மற்றும் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்குபெறும் பெண் வீராங்கனைகள், உடலில் டெஸ்டோஸ்டீரானின் (தசையின் நிறை அளவு, வலிமை மற்றும் ஹுமோகுளோபின் அளவு ஆகியவற்றை அதிகரிக்க உதவும் சுரப்பி) அளவு பரிசோதிக்கப்பட வேண்டும்.இவர்களின் உடலில் அளவுக்கு அதிகமாக டெஸ்டோஸ்டீரான் சுரந்தால், அதைக் குறைக்க மருந்து உட்கொள்ள வேண்டும் அல்லது இவர்கள் ஆண் போட்டியாளர்களுடன் போட்டியிட வேண்டும்’ என்று சர்வதேச தடகள வாரியம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இது நடைமுறைக்கு வரும் எனும்பட்சத்தில், மீண்டும் செமன்யா போராட்டத்தில் இறங்கியுள்ளார். 

``இயற்கைக்கு மாறான ஒரு செயலைச் செய்யச் சொல்கிறார்கள். என்னை இறைவன் எப்படிப் படைத்தாரோ, நான் அப்படியே வாழ விரும்புகிறேன். நான் காஸ்டர் செமன்யா. நான் ஒரு பெண். நான் வேகமானவள்” என்று வலிமையுடன் பேட்டியளித்திருக்கிறார் செமன்யா. தான் எப்படி இருக்கிறோமோ அதை மனதார ஏற்றுக்கொண்டு, அதன் வழியே போராடுவேன் என்று உறுதியோடு நிற்கிறார் இவர்.

வென்றுவா, செமன்யா!