Published:Updated:

`இப்போ தேசிய சாம்பியன்... இனி இன்டர்நேஷனல் மெடல்!’ தடகள வீராங்கனை தபிதா இலக்கு

`இப்போ தேசிய சாம்பியன்... இனி இன்டர்நேஷனல் மெடல்!’ தடகள வீராங்கனை தபிதா இலக்கு

``போட்டி நடக்கும்போது வேற தபிதாவா மாறிடுவேன். ஜெயிக்கணுன்ற வெறி மட்டும்தான் மனசுல இருக்கும். முடிச்சு வெளில வர்றப்போ, இயல்பா சிரிச்சிட்டு இருப்பேன். அதனாலதான் `என்னை எல்லாரும் பைத்தியம்னு கூப்பிடுவாங்க’னு நாகராஜ் சார் சொன்னார்.’’

`இப்போ தேசிய சாம்பியன்... இனி இன்டர்நேஷனல் மெடல்!’ தடகள வீராங்கனை தபிதா இலக்கு

``போட்டி நடக்கும்போது வேற தபிதாவா மாறிடுவேன். ஜெயிக்கணுன்ற வெறி மட்டும்தான் மனசுல இருக்கும். முடிச்சு வெளில வர்றப்போ, இயல்பா சிரிச்சிட்டு இருப்பேன். அதனாலதான் `என்னை எல்லாரும் பைத்தியம்னு கூப்பிடுவாங்க’னு நாகராஜ் சார் சொன்னார்.’’

Published:Updated:
`இப்போ தேசிய சாம்பியன்... இனி இன்டர்நேஷனல் மெடல்!’ தடகள வீராங்கனை தபிதா இலக்கு

`பஸ் ஸ்டாண்டுக்குள்ள போயி லெஃப்ட் எடுத்தா, சந்துக்குள்ள இருக்கு நீங்க கேட்ட கிரவுண்ட்’ என அட்ரஸ் சொன்னார் ஒரு ஆட்டோக்காரர். `பஸ் ஸ்டாண்டுல கிரவுண்டா?’ எனத் தயக்கத்துடனேயே உள்ளே சென்றால், ஒரு சின்ன சந்து. அதைக் கடந்து உள்ளே நுழைந்தால், அப்படியொரு கிரவுண்ட்! சென்னையில் பள்ளிகளில் கூட அப்படியொரு கிரவுண்ட் இருக்காது போல. நாங்கள் சென்றது மாலை நேரம் என்பதால், எங்கு பார்த்தாலும் 50-க்கும் மேற்பட்டவர்கள் ஜெர்ஸி, டிராக் சகிதமாக பிராக்டீஸ் செய்து கொண்டிருந்தனர். இதை ஓரத்திலிருந்து நோட்டமிட்டுக்கொண்டே, டிப்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தார் பயிற்சியாளர் நாகராஜ்.

காயத்ரி, பிரேம் என அவ்வப்போது நாகராஜ் பாசறையிலிருந்து புறப்படும் ஒரு வீரர் தேசிய அளவில் கவனம் ஈர்ப்பது வாடிக்கை. அந்தப் பட்டறையில் புதிதாக இணைந்திருக்கிறார் தபிதா. விளையாட்டுத்தனமா சுத்திட்டு இருந்த பொண்ணு இப்ப `விளையாட்டில்’ கில்லி. சமீபத்தில் நெய்வேலியில் நடந்த பள்ளிகளுக்கு இடையிலான மாநில அளவிலான 100 மீ, 100 மீ தடை ஓட்டம்,  நீளம் தாண்டுதல், டிரிபிள் ஜம்ப் எனப் பங்கேற்ற நான்கு பிரிவிலும் தங்கம் வென்றிருக்கிறார். அடுத்து சர்வதேச அளவில் பதக்கம் வெல்லும் முனைப்புடன் பயற்சி எடுத்துக்கொண்டிருந்தவரை பச்சையப்பன் விளையாட்டுத் திடலில் சந்தித்தோம்.

ஓட்டம், ஜம்ப் இரண்டும் தபிதாவுக்குத் தண்ணி பட்ட பாடு என்றாலும், நீளம் தாண்டுதலில் ஜஸ்ட் லைக் தட் என ரெக்கார்டு படைத்துள்ளார். 16 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய அளவிலான போட்டிகளில், ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த ரெனுபாலா 5.80 மீட்டர் தாண்டியதே சாதனையாக இருந்தது. தற்போது அதை முறியடித்துள்ள தபிதா, `அடுத்து நடக்க இருக்கும் பள்ளிகளுக்கு இடையிலான தேசிய தடகளப் போட்டியில் தங்கம் வெல்வது உறுதி’ என்கிறார் நாகராஜ். ``5.90 மீட்டர் மார்க்கை இப்போ தபிதாவால் எளிதாகக் கடக்க முடியுது. சீக்கிரம் 6 ப்ளஸ் மார்க்கை தாண்டி சாதனை படைப்பார்” என்றார் கோச்.

சென்னை விருகம்பாக்கம் ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் தபிதா, 11 வயது முதலே தடகளப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆட்டோ ஓட்டுநரான தந்தை பிலிப் மகேஷ்வரன், தாய் மேரி கோகிலாதான் தபிதாவின் எனர்ஜி! தினம் 6 மணி நேரம் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ளும் தபிதாவுக்கு, பள்ளிக்கூட சிக்கல், பயணச் சிரமங்களை எளிதாக்கி, ஊக்கம் அளித்து வருகின்றனர் அவரது பெற்றோர்.

``பாட்டு, டான்ஸ்னு ஏதும் செட் ஆகாததால, கடைசியில விளையாட்டுப் பயிற்சிக்கு அனுப்பினோம். நாகராஜ் சார் பத்தி கேள்விப்பட்டு, இங்க சேர்த்துவிட்டோம். தினமும் 16 கிலோ மீட்டர் டிராவல் பண்ணணும். இதையெல்லாம் பொருட்படுத்தாம விளையாட்டுல அவ காட்டுன ஆர்வம், நாகராஜ் சாரை ஆச்சர்யப்பட வெச்சுது. 5 வருஷத்துல சாதனை படைச்சுட்டா...” எனப் பெருமைப்பட்டார் பிலிப் மகேஷ்வரன். 

வார்ம் - அப் முடித்துவிட்டு நம்மிடம் பேசினார் தபிதா. `முடியாது’ என்ற வார்த்தையே அவரிடம் இருந்து வரவில்லை. 16 வயது மாணவிக்கு உள்ள மன தைரியம், விளையாட்டு ஆர்வம் ஆச்சர்யப்படுத்தியது. இன்னும் விளையாட்டுத்தனமாய் இருப்பதே தபிதாவின் பிளஸ். தோல்விகளையும், காயங்களையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்ட தபிதா, கேலி கிண்டல்களைப் பொருட்படுத்துவதே இல்லை. தபிதாவை சக போட்டியாளர்கள் ``பைத்தியம்” என்றுதான் அழைப்பார்களாம்!

ஆரம்பத்தில் மனமுடைந்த அவர், அப்படி அழைப்பதற்கான காரணத்தை அறியும் போது, தபிதா பல ரெக்கார்டுகளைப் படைத்திருந்தார். ``போட்டி நடக்கும்போது வேற தபிதாவா மாறிடுவேன். ஜெயிக்கணுன்ற வெறி மட்டும்தான் மனசுல இருக்கும். முடிச்சு வெளில வர்றப்போ, இயல்பா சிரிச்சிட்டு இருப்பேன். அதனாலதான் `என்னை எல்லாரும் பைத்தியம்னு கூப்பிடுவாங்க’னு நாகராஜ் சார் சொன்னார். அதைப்பத்திக் கவலை இல்லை. எவ்ளவோ பண்ணிட்டோம், இதைப் பண்ண மாட்டோமா!” என்று கூலாகப் பேசினார்.

``படிப்பைவிட விளையாட்டுல ஆர்வம் அதிகம். எல்லா அத்லெட் போலவும் எனக்கும் ஒலிம்பிக்தான் கனவு. அகாடமியிலேயே தங்கி பயிற்சி எடுத்துட்டு இருக்கேன். என்னுடைய ரெக்கார்டை ஒவ்வொரு முறையும் நானே முறியடிக்கணும்னு போராடுவேன். ஒவ்வொரு நாளும் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளத் தேவையான ரெக்கார்டை கொண்டு வர முயற்சி பண்றேன்” என்றார்.

``தபிதாவின் நீளம் தாண்டுதல் ரெக்கார்டு, தேசிய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் பல பதக்கங்களைப் பெற்றுத்தரும். உடலளவிலும், மனதளவிலும் ஃபிட்டாக உள்ள தபிதா, ஒலிம்பிக்ஸ் கனவை துரத்தி வெல்வார். இந்த வயதில், இந்த ரெக்கார்டு சாத்தியமில்லை. அதனால்தான்,  தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றார் என்ற ஆசை தபிதாவால் நிறைவேறும் என்ற நம்பிக்கை அதிகமாக உள்ளது” என்றார் பயிற்சியாளர் நாகராஜ்.