Published:Updated:

எது நடந்ததோ, அது எதிர்பாராமல் நடந்தது!

எது நடந்ததோ, அது எதிர்பாராமல் நடந்தது!
பிரீமியம் ஸ்டோரி
எது நடந்ததோ, அது எதிர்பாராமல் நடந்தது!

மு.பிரதீப் கிருஷ்ணா

எது நடந்ததோ, அது எதிர்பாராமல் நடந்தது!

மு.பிரதீப் கிருஷ்ணா

Published:Updated:
எது நடந்ததோ, அது எதிர்பாராமல் நடந்தது!
பிரீமியம் ஸ்டோரி
எது நடந்ததோ, அது எதிர்பாராமல் நடந்தது!
எது நடந்ததோ, அது எதிர்பாராமல் நடந்தது!

ந்தியா ஃபிஃபா ரேங்கிங்கில் 97-வது இடத்தில் இருக்கிறது. கிரிக்கெட் மோகத்தில் மூழ்கிக்கிடக்கும் தேசத்தில் கால்பந்துக்கு என்று ஓர் உரிய இடம் உருவாகவில்லை. ஆனாலும் இந்தியர்கள் தவறாமல் கால்பந்து உலகக் கோப்பையைக் கவனிக்கிறார்கள், ரசிக்கிறார்கள். காரணம், இந்தத் தொடர் கொடுக்கும் பூரிப்பு,  ஆனந்தம், ஆச்சர்யம், அதிர்ச்சி!

கோப்பை வெல்லும் என நினைத்த அணிகள், முதல் வாரத்திலேயே பலத்த அடி வாங்குவதைப் பார்த்து ஸ்தம்பித்துக் கிடக்கிறார்கள் ரசிகர்கள். பிரேசில், ஸ்பெயின், அர்ஜென்டினா, ஜெர்மனி என யாருமே இந்த உலகக்கோப்பையை வெற்றியோடு தொடங்காததால், போட்டிக்குப் போட்டி விறுவிறுப்பு கூடிக்கொண்டேபோகிறது. இந்த அதிர்ச்சிகளோடு சில நெகிழ்ச்சியான சம்பவங்களும் உலகக்கோப்பையை இன்னும் அழகாக்கிக்கொண்டிருக்கின்றன.

எது நடந்ததோ, அது எதிர்பாராமல் நடந்தது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெறும் மூன்றரை லட்சம் மக்கள்தொகை கொண்ட மிகச்சிறிய நாடான ஐஸ்லாந்து, இந்தத் தொடரின் மிகப்பெரிய ஆச்சர்யம். இதுதான் அவர்கள் விளையாடும் முதல் உலகக்கோப்பை. இந்தத் தொடருக்குத் தேர்வானதையே மிகப்பெரிய சந்தோஷமாகக் கருதியவர்கள், முதல் போட்டியில் அர்ஜென்டினாவை அசரடித்தார்கள். ஜீனியஸ் மெஸ்ஸியை ஒரு கோல்கூடப் போடவிடாமல் ஆடிய ஆட்டத்துக்கு, மொத்த உலகமும் லைக்ஸ் கொட்டியது.

இதேபோல் முதன்முறையாக உலகக்கோப்பையில் களமிறங்கி, களத்தில் எமோஷன்களைக் கொட்டியது வட அமெரிக்க நாடான பனாமா. உலகக்கோப்பைக்குத் தகுதி பெற்றதற்கே தேசிய விடுமுறை அறிவித்தவர்கள், உலகக்கோப்பையில் ஆடுவதைக் கொண்டாடித் தீர்த்தார்கள். இப்படி ஒவ்வொரு மைதானத்தின் கேலரியையும் அழகாக்கியது என்னவோ, சிறிய நாடுகளின் ரசிகர்கள்தாம். அதிலும் மெக்ஸிகோ ரசிகர்கள் வேற லெவல்! நடப்பு சாம்பியன் ஜெர்மனியை யாரும் எதிர்பாராதவகையில் போட்டுத்தள்ளியது மெக்ஸிகோ. உலகின் தலைசிறந்த வீரர்கள் வரிசைகட்டி நிற்கும் அந்த அணிக்கு, 90 நிமிடமும் தங்கள் வீரர்கள் தண்ணிகாட்ட, மொத்த மைதானமும் கொண்டாடத் தொடங்கியது.

எது நடந்ததோ, அது எதிர்பாராமல் நடந்தது!

மெக்ஸிகோ வீரர் லொசானோ கோல் போட்டபோது, இவர்கள் தங்களின் ஸ்பெஷல் `மெக்ஸிகன் வேவ்’ செலிப்ரேஷன் செய்ய, மைதானமே பச்சை நிறக் கடல் அலையில் மூழ்கியதுபோல் இருந்தது. வெற்றியை நோக்கி மெக்ஸிகோ முன்னேறியபோது அந்தச் சத்தத்தின் தாக்கம் மைதானத்தையே அதிரவைத்தது. ஆனால், மெக்ஸிகோ ரசிகர்கள் அதிரவைத்தது மைதானத்தை மட்டுமல்ல, பூமியையும்தான். மெக்ஸிகோ நகரில் பெரிய ஸ்கிரீனில் இந்தப் போட்டியைப் பார்த்தவர்கள் உற்சாகத்தில் கொண்டாடத் தொடங்க, நில அதிர்வைக் கண்டறியும் சீஸ்மோமீட்டர் அதிர்வை உணர்ந்துள்ளது. அந்த அளவுக்குக் கொண்டாடினார்கள் அந்த வெறியர்கள். (செல்லமாகத்தான்!)

இப்படி கால்பந்தின் கத்துக்குட்டிகள் எல்லாம் கொண்டாடிக்கொண்டிருக்க, பெரும் தலைகள் எல்லாம் தலைநிமிர முடியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றன. அர்ஜென்டினா ஐஸ்லாந்திடம் டிரா, ஸ்பெயின் போர்ச்சுகலிடம் டிரா, பிரேசில் ஸ்விட்சர்லாந்திடம் டிரா, ஜெர்மனி மெக்ஸிகோவிடம் தோல்வி என எதிர்பாராத பல சம்பவங்கள் முதல் வாரத்திலேயே நடக்க, மிரண்டுபோனார்கள் அந்த அணிகளின் ஆதரவாளர்கள். கடந்த உலகக்கோப்பையில் ஸ்பெயின், இத்தாலி, இங்கிலாந்து எனப் பல முன்னணி அணிகள் முதல் சுற்றோடு வெளியேறியதால், அந்தப் பீதி இந்த ரசிகர்களையும் தொற்றிக்கொண்டது.

எது நடந்ததோ, அது எதிர்பாராமல் நடந்தது!

இப்படி அதிர்ச்சியில் கிடந்த கால்பந்து உலகத்துக்கு பயங்கரமாகத் தீனி போட்டது, 10 ஆண்டுகளாக நடந்துவரும் மெஸ்ஸி - ரொனால்டோ யுத்தம். முதல் போட்டியிலேயே பலமான ஸ்பெயின் அணிக்கு எதிராக கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடிக்க, ஐஸ்லாந்து அணியிடம் பெனால்டியையே தவறவிட்டார் அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி. போதாக்குறைக்கு அடுத்த ஆட்டத்தில்

எது நடந்ததோ, அது எதிர்பாராமல் நடந்தது!

குரோஷியாவிடமும் அர்ஜென்டினா கோலே அடிக்காமல் தோல்வியடைய, `அங்க அவன் அந்த அடி அடிக்கிறான். நீ என்னடான்னா இங்கே வேடிக்கை பார்த்துட்டிருக்க’ என மெஸ்ஸி ரசிகர்களே மனம் நொந்து மீம் போடும் அளவுக்கு ஆகிவிட்டது. இவர்களுக்கு அடுத்த இடத்தில் இருப்பவராகக் கருதப்படும் நெய்மர், கீழே விழுந்து புரண்டு நடிகர் திலகத்துக்கு சவால் சாகசங்கள் செய்துகொண்டிருக்க, மீம் க்ரியேட்டர்கள் 24 மணி நேரமும் பிஸியோ பிஸி!

இப்படி அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாகக் கழிந்த முதல் இரண்டு வாரங்களில் சர்ச்சைகள் எழாமலும் இல்லை. நடுவரின் தீர்ப்பைப் பரிசீலனைசெய்யும் VAR, அடிக்கடி விவாதப் பொருளானது. கால்பந்தில் அதிக தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவது இதுதான் முதல்முறை என்பதால், அதில் பெர்ஃபெக்‌ஷனை அடைய இன்னும் சில காலம் ஆகும். அதுவரை, கால்பந்து எந்தச் சிரமமும் இல்லாமல் கொண்டாட்டத்துக்கான எல்லா அம்சங்களையும் ரசிகர்களுக்குக் கொடுத்துக்கொண்டே இருக்கும்!

லெட்ஸ் ஃபுட்பால்!