Published:Updated:

இது அசராத அணி!

இது அசராத அணி!
பிரீமியம் ஸ்டோரி
இது அசராத அணி!

மு.பிரதீப் கிருஷ்ணா

இது அசராத அணி!

மு.பிரதீப் கிருஷ்ணா

Published:Updated:
இது அசராத அணி!
பிரீமியம் ஸ்டோரி
இது அசராத அணி!

மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று `இந்தா வந்துட்டோம்ல!’ என கெத்து கூட்டியிருக்கிறது தோனி அண்ட் கோ!

`சூதாட்டம் செய்தவர்கள்’, `அதிகாரத்தைப் பயன்படுத்தி வென்றவர்கள்’ என இரண்டு ஆண்டுகளில் எத்தனையோ பழிப்பேச்சுகள். அப்படிப்பட்ட நிலையில் சி.எஸ்.கே-வின் இந்தக் கம்பேக் அவ்வளவு எளிதாக இல்லை.

இது அசராத அணி!

ஆப்கானிஸ்தான், நேபாளம் நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், இந்தியாவின் அண்டர்-19 வீரர்கள் என மற்ற அணிகள் போட்டி போட்டுக்கொண்டு ஏலத்தில் இளம் வீரர்களாக வாங்கிக் குவித்தனர். சென்னை அணியோ ஷேன் வாட்சன், இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங் என 30+ வீரர்களாக வாங்கிக்கொண்டிருந்தது. `அங்கிள்களின் அணி’ என ஸ்லீப்பர் செல்கள் மீம்களாகப் போட, சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுமே கொஞ்சம் பயந்துதான்போயிருந்தார்கள். டேர் டெவில்ஸ், கிங்ஸ் லெவன், சன்ரைஸர்ஸ் போன்ற அணிகள் எல்லாம் முன்பைவிட பலமான டீமை உருவாக்கியதால் சென்னை மீதான நம்பிக்கை, தொடர் ஆரம்பிக்கும் முன்பே சரிந்திருந்தது.

சந்தேகம் எல்லாம் தொடர் தொடங்கி ஒரு நாள்கூட நீடிக்கவில்லை. மும்பை இந்தியன்ஸை அதன் சொந்த மண்ணில் போட்டுத்தள்ளி, கம்பேக் கணக்கைத் தொடங்கியது சி.எஸ்.கே. அதற்குப் பிறகு ‘அங்கிள்களின் அணி’யை யாராலும் தடுத்து நிறுத்தமுடியவில்லை. இளம் அணிகளை எல்லாம் ஓடவிட்டு அடித்தனர்.

போராட்டங்களால் சென்னையிலிருந்து போட்டிகள் புனேவுக்கு மாறின. பல முக்கிய வீரர்கள் எல்லாம் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினர். அடுத்தடுத்து சவால்கள் வரவே செய்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது அசராத அணி!

`அணியின் வேகப்பந்துவீச்சு மிகவும் சுமாராக இருக்கிறது. அது சென்னை அணிக்கு மிகப்பெரிய பலவீனம்’ என்று தொடர் தொடங்கும் முன் பலரும் விமர்சித்திருந்தார்கள். அதற்கு ஏற்ப மார்க் வுட், டேவிட் வில்லி போன்றோரும் சொதப்ப, இரண்டு முறை `பர்ப்பிள் கேப்’ வென்றவரான பிராவோ ரொம்பவே தடுமாறினார். டெத் ஓவர்களில் அதிகமாக ரன் விட்டுக்கொடுத்தார்கள். அதற்கும் விரைவில் பதில் கண்டுபிடித்தார் கேப்டன் கூல். தீபக் சஹாரைத் தன் ஆஸ்தான பவர்பிளே பௌலர் ஆக்கினார். துணைக்கண்ட ஆடுகளங்களில் ஆடிப் பழக்கமில்லாத எங்கிடிக்கு வாய்ப்புகள் வழங்க, பிராவோவின் இடத்தை நிரப்பினார் அந்த இளம் தென்னப்பிரிக்க வீரர். குவாலிஃபயர், ஃபைனல் என இரண்டு போட்டிகளிலும் சன்ரைஸர்ஸ் அணியைப் பதம்பார்த்தது இந்த சவுத் ஆப்பிரிக்கன் ஸ்னைப்பர்!

இந்த சீஸனில் தோனியின் மீள்வருகைதான் மிகப்பெரிய ஆச்சர்யம். பழைய தோனியாக எதிரணிப் பந்துவீச்சை தன் ஹெலிகாப்டர் ஷாட்களால் மிரளவைத்தது ரசிகர்களுக்கு செம விருந்து!

தொடர் முழுக்க மற்ற அணிகளெல்லாம் சன்ரைஸர்ஸ் அணியின் பந்துவீச்சைக் கண்டு அலறின. லீக் சுற்றில் ரஷீத், கௌல், புவி, பசில் தம்பி ஆகியோர் பட்டையைக் கிளப்ப, அவர்களுக்கு எதிராக 150 ரன் எடுப்பதே பெரும்பாக்கியம் என நினைத்தார்கள். ஆனால், சென்னையிடம் சன்ரைஸர்ஸின் பருப்பு வேகவேயில்லை. அதுவும் நான்கு போட்டிகளிலும்...

இது அசராத அணி!

எத்தனை முறை மோதினாலும் சன்ரைஸர்ஸை நசுக்கி `நான் ராஜா!’ என்று கெத்தாக காலரைத் தூக்கி நடந்தது சிஎஸ்கே. அதுவும் இறுதிப்போட்டியில் கொஞ்சம்கூடப் பாரபட்சம் இல்லாமல் சன்ரைஸர்ஸ் பௌலிங்கைப் பந்தாடினார் 35 வயது சீனியர் சிட்டிசன் வாட்சன்! சொல்லப்போனால், இந்த ஐ.பி.எல் தொடரில் மற்ற ஏழு அணிகளையும் வீழ்த்திய ஒரே அணி, சூப்பர் கிங்ஸ் மட்டும்தான்.

அவர்களை ஏமாற்றுக்காரர்கள் என்ற போது அவர்கள் அமைதியாக இருந்தனர், அவர்களை வயதானவர்கள் என்று கேலி செய்தபோது மௌனம் காத்தனர். எல்லா விமர்சனங்களுக்கும் அவர்களுடைய பதில் எளிதாக இருந்தது. அவர்கள் கோப்பையை வென்றனர்! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism