சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“எந்த ஐ.பி.எல் டீமையும் ஆதரிக்க மாட்டேன்!”

“எந்த ஐ.பி.எல் டீமையும் ஆதரிக்க மாட்டேன்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“எந்த ஐ.பி.எல் டீமையும் ஆதரிக்க மாட்டேன்!”

கிரிக்கெட்மு.பிரதீப் கிருஷ்ணா

ஸ்மிரிதி மந்தனா - இந்திய கிரிக்கெட்டின் இன்றைய சென்சேஷன்! தோனி, கோலி ஆகியோருக்கு மட்டுமே விசில் அடித்துக்கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களை, தன் அதிரடி ஆட்டத்தால் மகளிர் கிரிக்கெட் பக்கம் திருப்பியுள்ளது இந்த இளம் புயல்.

அப்பா, அண்ணன் இருவரும் மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியவர்கள். அண்ணன் விளையாடுவதைப் பார்த்து கிரிக்கெட் மீது ஆர்வம்கொண்டு பள்ளிக் காலத்திலேயே பேட் பிடிக்கத் தொடங்கினார். 9 வயதிலேயே, 15 வயதுக்குட்பட்டோர் மகாராஷ்டிரா அணிக்குத் தேர்வானவருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கதவுகள் 16 வயதில் திறந்தன. கிரிக்கெட் வாழ்க்கையை நிதானமாகத் தொடங்கியவர், கடந்த இரண்டு ஆண்டுகளில் வேற லெவல் ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார்.

“எந்த ஐ.பி.எல் டீமையும் ஆதரிக்க மாட்டேன்!”

மித்தாலி ராஜ், ஜுலன் கோஸ்வாமி தவிர்த்து இந்திய வீராங்கனைகள் யாரும் லைம்லைட்டில் இருந்ததில்லை. ஆனால், 2017-ம் ஆண்டு மகளிர் உலகக்கோப்பை யின்போது இரண்டே போட்டிகளில் மொத்த தேசத்தின் கவனத்தையும் பெற்றார் ஸ்மிரிதி. உலகக்கோப்பையின் முதல் போட்டியில் இவர் அடித்த 90 ரன், பலம் வாய்ந்த இங்கிலாந்தை வீழ்த்த உதவியது. அடுத்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அதிரடி சதம் அடிக்க, `யார் இந்த மந்தனா?’ என்று அவரின் வரலாற்றைப் புரட்டத் தொடங்கினார்கள் கிரிக்கெட் வெறியர்கள்.

“எந்த ஐ.பி.எல் டீமையும் ஆதரிக்க மாட்டேன்!”


பொதுவாக இந்திய வீராங்கனைகள் மெதுவாகவே விளையாடும் தன்மையுடை யவர்கள். டி-20 போட்டி என்றாலும்கூட செட்டிலாக அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள். ஆனால், மந்தனா வழி தனி வழி. எதிர் அணியைப் பற்றியோ, பௌலரைப் பற்றியோ துளியும் அலட்டிக்கொள்ள மாட்டார். பேட்டிங் கிரீஸுக்குள் நின்றாலே அதிரடி சரவெடிதான். ஆஃப் சைடில் போட்டால் அடிக்கும் கட் ஷாட்களும், லெக் சைடு பந்துகளைக் காணாமல்போகச் செய்யும் புல் ஷாட்களும், `இவர் ஐ.பி.எல்-லிலேயே விளையாடலாம்’ எனச் சொல்லவைக்கும் அளவுக்கு அவ்வளவு அழகு!

உலகக் கோப்பையின் கடைசிக்கட்டத்தில் சொதப்பியவர், பிப்ரவரி மாதம் தொடங்கிய தென்னாப்பிரிக்கத் தொடரில் விஸ்வரூபம் எடுத்தார். முதல் போட்டியில் 84, அடுத்த போட்டியில் 135 என வெளுத்துவாங்கியவர், இந்தியாவில் நடந்த இங்கிலாந்துத் தொடர், முத்தரப்புத் தொடர் எல்லாவற்றிலும் பட்டையைக் கிளப்பினார். இந்தியா ஜெயிக்கிறதோ இல்லையோ, மந்தனா ஜொலிப்பார். கிட்டத்தட்ட எல்லா போட்டிகளிலும் தன் டிரேட்மார்க் அதிரடியால் இந்தியாவுக்கு நல்ல ஓப்பனிங் தந்துவிடுகிறார் இந்த அதிரடிச் சூறாவளி.

“எந்த ஐ.பி.எல் டீமையும் ஆதரிக்க மாட்டேன்!”

அதுவும் கடைசி 10 போட்டிகளில் 7 அரைச்சதங்கள் எடுத்து மெர்சல் ஃபார்மில் இருக்கிறார். இந்திய ஒருநாள் கேப்டன் மித்தாலி ராஜ், இன்னும் ஓரிரு ஆண்டுகளில் ஓய்வுபெற்றுவிடுவார் என்பதால், `இனி மந்தனாதான் இந்திய மகளிர் கிரிக்கெட்டின் எதிர்காலம்’ என இப்போதே இவரைக் கொண்டாடத் தொடங்கிவிட்டார்கள்.

இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் மிகமுக்கிய இடம் பெற்றிருக்கும் மும்பையில், இந்த மகளிர் கிரிக்கெட்டின் எதிர்காலத்தைச் சந்தித்தேன். களத்தில் இருப்பதற்கு நேர் எதிர். பொறுமையாக, அமைதியாகப் பேசுகிறார்.

“எந்த ஐ.பி.எல் டீமையும் ஆதரிக்க மாட்டேன்!”

``16 வயதிலேயே இந்திய கிரிக்கெட் அணியில் நுழைந்துவிட்டீர்கள். அந்த அனுபவம் எப்படியிருந்தது?”

``ரொம்பவே சந்தோஷமா இருந்துச்சு. அதுக்காக ஆரம்பத்துல இருந்தே கஷ்டப்பட்டு உழைச்சேன். அதுக்கான ரிசல்ட் சீக்கிரமா கிடைச்சப்போ, அதை எப்படி வெளிக்காட்டுறதுனே தெரியலை. அவ்ளோ சந்தோஷம். என்னதான் இளம் வயதுலேயே உள்ளே வந்துட்டாலும் சர்வதேசப் போட்டிகள்னு இறங்கிட்டா, கன்சிஸ்டெண்ட்டா நல்லா விளையாடியே ஆகணும். அந்த ப்ரஷர் எனக்குப் பிடிச்சிருந்தது”

``உலகக்கோப்பையில தொடர்ந்து நல்லா விளையாட முடியாமத் திணறினீங்க. ஆனா, இந்த வருஷம் நல்லா பெர்ஃபார்ம் பண்றீங்க. எப்படி?”

``உலகக்கோப்பை, இந்திய அணிக்கு நல்ல அனுபவமா இருந்தாலும், பர்சனலா எனக்கு ரொம்ப ஏமாற்றமாத்தான் இருந்துச்சு. கடைசி ஏழு மேட்ச்ல சரியா ஆடலை. என் கிரிக்கெட் வாழ்க்கையில அப்படிப்பட்ட மோசமான நாள்களை நான் சந்திச்சதே இல்லை. எனக்கு அது மிகப்பெரிய பாடம். அப்புறம் என்னோட பேட்டிங் stance-ஐ மாத்தினேன். open stance ஃபாலோ பண்ண ஆரம்பிச்சேன். டெக்னிக்கலான சில விஷயங்களையும் மாற்றினேன். அது தென்னாப்பிரிக்க தொடர்லயும் இந்தியாவுலயும் நல்ல மாற்றத்தைக் கொடுத்துச்சு”.

“எந்த ஐ.பி.எல் டீமையும் ஆதரிக்க மாட்டேன்!”

``ஒரு போட்டியில் எப்படிப்பட்ட சூழ்நிலையில் களமிறங்கினாலும் முதல் பந்திலிருந்தே அதிரடியா ஆடுறீங்களே!”

(சிரித்துக்கொண்டே) ``உண்மையைச் சென்னால், நான் போட்டி சூழ்நிலையைப் பார்த்து என் ஆட்டத்தை நிர்ணயிச்சது கிடையாது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 80 பந்துகள்ல அரைச்சதம் அடிச்சிருப்பேன். அது என்னோட அணுகுமுறையே இல்லை. ஆனா, அந்த ஆடுகளம் அப்படி இருந்துச்சு. ஆடுகளத்தோட தன்மை மட்டும்தான் என் ஆட்டத்தை நிர்ணயிக்கும்.”

``அர்ஜுனா விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளீர்கள். எப்படி உணர்றீங்க?”

``மகிழ்ச்சியாவும் நெகிழ்ச்சியாவும் இருக்கு. பி.சி.சி.ஐ இவ்ளோ சீக்கிரம் என் பெயரைப் பரிந்துரைப்பாங்கன்னு நான் நினைக்கலை. இது, என்மீது இருக்கும் பொறுப்புகளை அதிகப்படுத்தியிருக்கு; இன்னும் நல்லா விளையாடணும்கிற உத்வேகத்தைக் கொடுத்திருக்கு.”

“எந்த ஐ.பி.எல் டீமையும் ஆதரிக்க மாட்டேன்!”

``இந்திய அணியில் உங்களின் நெருங்கிய தோழி யார்? உங்களின் நட்பு வட்டம் பற்றி...”

``நாங்க எல்லோருமே நல்ல ஃப்ரெண்ட்ஸ்தான். சொல்லப்போனால் இது ஒரு குடும்பம் மாதிரிதான். ஷிகா ஷர்மா, ஹர்மன்ப்ரீத்னு எல்லோருமே ஜாலியானவங்க.”

``எந்த ஐ.பி.எல் அணிக்கு உங்களின் ஆதரவு?”

``எந்த அணிக்கும் ஆதரவு இல்லை. எனக்குப் பிடிச்ச வீரர்கள் ஒவ்வொரு டீம்லயுமே இருக்காங்க. அதனால இதுதான் என் ஃபேவரைட் டீம்னு சொல்ல முடியாது. ஆர்.சி.பி இதுவரை கப் ஜெயிச்சதே இல்லை. அதனால, இந்த முறை அவங்க ஜெயிச்சா நல்லாயிருக்கும்.”