தொடர்கள்
Published:Updated:

தனபால் கணேஷ் - “தமிழர்கள் தூக்கிப்பிடித்த தமிழன்டா!”

தனபால் கணேஷ் - “தமிழர்கள் தூக்கிப்பிடித்த தமிழன்டா!”
பிரீமியம் ஸ்டோரி
News
தனபால் கணேஷ் - “தமிழர்கள் தூக்கிப்பிடித்த தமிழன்டா!”

மு.பிரதீப் கிருஷ்ணா, படங்கள்: பா.காளிமுத்து

மிழகக் கால்பந்து அணியின் செல்லப் பிள்ளை தனபால் கணேஷ்!

இரண்டாவது முறையாக ‘இந்தியன் சூப்பர் லீக் சாம்பியன்’ பட்டத்தை வென்று கெத்துகாட்டியிருக்கிறது நம்ம சென்னை. எப்போதும்  வெற்றிக்கான கிரெடிட்டை வெளிநாட்டு வீரர்களே எடுத்துக்கொள்ளும் நிலையில், ஆனால் இந்த முறை வெற்றியில் சென்னை மைந்தன் கணேஷ்தான் ஸ்டார் அட்ராக்‌ஷன்.


`#nammapaiyan’ தனபால் கணேஷைச் சந்தித்தேன்.

``சென்னை அணிக்கு நான் புதுசு கிடையாது. சென்னையின் எஃப்.சி அணியில் இது எனக்கு மூன்றாவது ஆண்டு. முதல் வருடம், காயம் காரணமாக அணியில் விளையாட முடியவில்லை. அடுத்த ஆண்டு, அணிக்குள் விளையாட இடம் கிடைக்கவில்லை. மூன்றாவது மற்றும் கடைசி வாய்ப்பாக இந்த சீஸனை நான் எடுத்துக்கொண்டேன். இந்த சீஸனின் முதல் போட்டியிலேயே மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது சென்னை அணி. அதனால் இரண்டு ஆண்டுகளாக வெளியே உட்காரவைக்கப்பட்ட எனக்கு, முதன் முறையாக ஆடும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பைத் தவறவிடக் கூடாது என்பதில் மிக மிகக் கவனமாக இருந்தேன். ‘நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி’க்கு எதிரான போட்டி,  நான் ஆடும் முதல் போட்டியும்கூட. ஆனால், எந்தப் பதற்றமுமின்றி கூலாக விளையாடினேன். அணிக்குள் நான் டிஃபென்சிவ் மிட்ஃபீல்டர். எதிரணி வீரர்கள் என்னைத் தாண்டிப் போய்விடக் கூடாது என என் முழு உழைப்பையும் கொடுத்து விளையாடினேன். என் ஆட்டத்தைப் பார்த்து என்னை நிரந்தரமாக பிளேயிங் லெவனுக்குள் சேர்த்துக் கொண்டனர்.’’

தனபால் கணேஷ் - “தமிழர்கள் தூக்கிப்பிடித்த தமிழன்டா!”

``பெயருக்குச் சென்னை அணியாக இருந்தாலும், நீங்கள் மட்டும்தான் அணியின் ஒரே சென்னை வீரர். எப்படி உணர்ந்தீர்கள்?’’

``தமிழ்நாட்டு வீரர்கள் இல்லை என்பது ஒரு குறைதான். ஆனால், இந்த முறை எனக்கு ரசிகர் களிடமிருந்து கிடைத்த ரெஸ்பான்ஸை நான் எதிர்பார்க்க வேயில்லை. `தமிழன்டா’ என்ற ஸ்லோகனுடன் கேலரியெங்கும் என்னுடைய போட்டோ பதித்த பேனர்களைப் பார்த்த தருணம் என்னுடைய வாழ்க்கையில் பொன்னான தருணம். டிவிட்டரில்  `#NammaPayan’ என்ற ஹேஷ்டேக் எல்லாம் பார்த்து மிரண்டுவிட்டேன். இப்படிப் பட்ட தருணத்துக்காகத் தான் பல வருடங்கள் காத்திருந்தேன். சென்னை வியாசர்பாடியில் வெறுங்காலில் பழைய பந்தை உதைத்துக் கொண்டிருந்தவன் நான். வறுமைதான் எங்கள் வீட்டின் அடையாளம். அப்பா பெயின்டர்.  எனக்கு ஃபுட்பால் கிட் வாங்கித் தரும் அளவுக் கெல்லாம் வசதியில்லை. சீனியர் பிளேயர்கள் தூக்கி வீசும் கிழிந்த பூட்ஸ் அணிந்துகொண்டுதான் விளையாடுவேன்.

தனபால் கணேஷ் - “தமிழர்கள் தூக்கிப்பிடித்த தமிழன்டா!”

ஆனால், என் ஃபுட்பால் ஆர்வத்தையும் திறமையையும் பார்த்து, எனக்காக ரொம்பவே மெனக்கெடுவார் அப்பா. முதன்முதலா அவர் எனக்குப் புது பூட் வாங்கித் தந்தபோது நான் அழுதுவிட்டேன். ஒருகட்டத்தில் பிரச்னைகள் அதிகமானது. செலவுகளும் மிக அதிகமானபோது யாராவது வேலைக்குப் போக வேண்டும் என்கிற நிலை. என் இரு அண்ணன்களும் படிப்பை விட்டுவிட்டு வேலைக்குப் போனார்கள். அவர்களும் கால்பந்து வீரர்கள்தான். அவர்களின் தியாகங்கள்தான் என்னை ஒரு கால்பந்து வீரனா மாத்துச்சு. கால்பந்து மூலமா இப்போது சம்பாதித்திருக்கும் பணத்தில் சொந்த வீடு கட்டியிருக்கிறேன். குடும்பம் இப்போது நிறைவாக இருப்பதாக உணர்கிறேன்.’’

தனபால் கணேஷ் - “தமிழர்கள் தூக்கிப்பிடித்த தமிழன்டா!”

``கேரளா, கோவா, மேற்குவங்கம் போல கால்பந்து வீரர்கள் இங்கு பெரிய அளவில் உருவாகவில்லையே, ஏன்?’’

``கால்பந்தை இங்கு தொழில்முறை விளையாட்டாகத் தேர்ந்தெடுக்க, பலரும் தயங்குகிறார்கள். அதற்கு முக்கியக் காரணம், வருமானம். கிரிக்கெட்போல கால்பந்து வீரர்களுக்குப் பணம் கிடைப்பதில்லை. ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் அரசு வேலை கிடைக்கும் வரை விளையாடிவிட்டு, சாதாரணமான வாழ்க்கைக்குத் திரும்பிவிடுகிறார்கள். அதன் பிறகு கால்பந்து அவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. ஆனால், நான் அப்படிப் பின்வாங்கவில்லை. ராமன் விஜயன், மோகன்ராஜ், ராவணன் மாதிரி நிறைய தமிழ்நாட்டு வீரர்கள் கால்பந்து விளையாட்டில் சாதித்திருக்கிறார்கள். பொருளாதார ரீதியாகவும் அவர்கள் நல்ல நிலையில் இருந்திருக்கிறார்கள். அவர்களைப் பார்த்துப் பார்த்து வளர்ந்தவன் நான். அவர்கள் மாதிரியே வர முடியும் என எனக்கு நம்பிக்கை இருந்தது. அதனால் என் மனதில் வேறு ஆப்ஷனே இல்லை. ஃபுட்பால் மட்டும்தான்.”