பெலாரஸில் நடைபெற்ற மெட்வத் சர்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் ஒலிம்பிக் பதக்க வீராங்கனையான சாக்ஷி மாலிக் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
மின்ஸ்க் நகரில் நடைபெற்ற சர்வதேச மல்யுத்தப் போட்டியில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான சாக்ஷி மாலிக் இந்தியா சார்பில் பங்கேற்றார், 62 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற சாக்ஷி இறுதி ஆட்டத்தில் ஹங்கேரியின் மரியன்னா சாஸ்டினிடம் 2-6 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தார். இதனால் சாக்ஷிக்கு வெள்ளிப்பதக்கமே கிடைத்தது. 57 கிலோ எடைப் பிரிவில் மற்றொரு இந்திய வீராங்கனையான பூஜா தண்டா, வெண்கலப்பதக்கம் வென்றார்.