Published:Updated:

சிக்கிக் கொண்டார் விஜேந்தர்சிங் - ஒலிம்பிக் பதக்கம் பறிபோகும் அபாயம்

சண்டிகார்: குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் 12 முறை போதை மருந்து பயன்படுத்தியுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் அவரது ஒலிம்பிக் பதக்கம் பறிமுதல் செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஒலிம்பிக் பதக்கம் வென்ற குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங்கும், பஞ்சாப் போலீசை சேர்ந்த குத்துச் சண்டை வீரர் ராம்சிங்கும் போதை பொருள் ஹெராயின் பயன்படுத்திய சர்ச்சையில் சிக்கி உள்ளனர்.

இது குறித்து பஞ்சாப் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இந்த நிலையில்  விஜேந்தர் சிங்கும், ராம்சிங்கும்  கனடா நாட்டைச் சேர்ந்த இந்திய வம்சாவளியும், போதை மருந்து வியாபாரியுமான அனூப் சிங் கலோன் என்கிற ரூபி, குல்வந்த் சிங் மற்றும் ராக்கியிடம் இருந்து பலமுறை ஹெராயின் வாங்கியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

##~~##
இவர்களில் விஜேந்தர் சிங் மட்டும் 12 முறையும், ராம்சிங் 5 முறையும் அந்த போதை மருந்தை பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளது.
போதை மருந்து வியாபாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயினின் சர்வதேச மதிப்பு ரூ.121 கோடி என்றும். சில்லறை விலை சுமார் ரூ.484 கோடி என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.