Published:Updated:

`உங்க அட்மின் யாரு ப்ரோ!' - ஐசிசியைக் கலாய்க்கும் நெட்டிசன்கள் #INDvSL

ஐசிசி
ஐசிசி

ஐசிசி ட்விட்டர் அட்மினின் தவறான பதிவைக் குறிப்பிட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரையும் 2 - 0 என்ற கணக்கில் வென்றது.

இந்திய அணி
இந்திய அணி
`ஜடேஜா ரன்அவுட் சர்ச்சை; ஃபீல்டிங்கில் 12வது ஆள்!' - சேப்பாக்கத்தில் 287 ரன்கள் சேர்த்த இந்திய அணி

சமூக வலைதளங்களில் தங்களின் செயல்பாடுகளால் பிரபலங்கள் பலர் விமர்சனத்துக்கு ஆளாவதுண்டு. அதேபோல், ஐசிசியும் தற்போது ட்வீட் ஒன்றால் நெட்டிசன்களின் கேலிக்கு உள்ளாகி வருகிறது. புனேவில் நடந்த இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான டி20 போட்டி குறித்த புகைப்படம் ஒன்று ஐசிசியின் அதிகாரபூர்வ ட்விட்டர் ஹேண்டிலில் பதிவிடப்பட்டிருந்தது.

அந்தப் போட்டோவின் கேப்ஷனில் பதிவிடப்பட்டிருந்த ஹேஷ்டேக்கே நெட்டிசன்களின் கேலிக்குள்ளாகியிருக்கிறது. இந்தியா - இலங்கை அணிகள் மோதிய போட்டி குறித்த புகைப்படத்துக்கு `if you know the struggle...' என்ற கேப்ஷனுடன் #INDvSA என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து, `இந்தியா விளையாடியது தென்னாப்பிரிக்காவுடன் அல்ல; இலங்கையுடன்...', `உங்க ட்விட்டர் ஹேண்டிலின் அட்மின் யாரு', `நீங்க போராடுறீங்கன்னு தெரியுது' உள்ளிட்ட பல்வேறு கேள்விகளோடு நெட்டிசன்கள் ஐசிசியைக் கலாய்த்து வருகின்றனர்.

ஐசிசியின் ட்வீட்
ஐசிசியின் ட்வீட்

மேலும், `இங்கிலாந்து டெஸ்ட் தொடரை இழக்க இதுவே காரணம். ஏனென்றால் எங்களின் டாப் வீரர்கள் அனைவரும் இங்கு விளையாடிக்கொண்டிருந்தனர்' என்று தென்னாப்பிரிக்க ரசிகர் ஒருவர் பதிவிட்டிருக்கிறார். ட்வீட் பதிவிடப்பட்டு 16 மணிநேரத்தைக் கடந்தும் இதுவரை அந்த ட்வீட் ஐசிசியின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் இருந்து நீக்கப்படவில்லை.

ஷிகர் தவான், கே.எல்.ராகுல்
ஷிகர் தவான், கே.எல்.ராகுல்

புனேவில் நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி, 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது. தொடக்கவீரர்களான கே.எல்.ராகுல் 54 ரன்களும் ஷிகர் தவான் 52 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 123 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அடுத்த கட்டுரைக்கு