Published:Updated:

`இந்திய அணிக்கு எது தேவையோ, அதைத்தான் செய்தார் தோனி!' - சச்சின்

தோனி`
தோனி`

`தோனிதான் காரணம் கிரிக்கெட்டின் கடவுள் சச்சினே சொல்லிவிட்டார் அடபோங்கப்பா' என்கிறார்கள் ஒருதரப்பினர்.

வங்கதேச அணிக்கு எதிராகப் பெற்ற வெற்றியின் மூலம் இந்திய அணி உலகக் கோப்பைத் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்தப் போட்டியிலும் தோனியின் இன்னிங்ஸ் குறித்து விமர்சனங்கள் எழுந்தன. உலகக் கோப்பைத் தொடரில் தோனியின் ஸ்லோ இன்னிங்ஸ் தொடர்பாக சச்சின் டெண்டுல்கர் விமர்சனம் செய்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ஒரு குறிப்பிட்ட போட்டியில் தோனி விளையாடியது குறித்துதான் டெண்டுல்கர் விமர்சனம் செய்தார். ஆனால், அதற்கு அடுத்த போட்டியில் தோனி ஆடிய விதத்தை அவர் பாராட்டினார்.

சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர்

தோனிக்குப் பதிலாக ரிஷப் பண்ட்டை அணியில் சேர்க்கக் கூறும் பலரும் தினேஷ் காரத்திக் குறித்து வாய் திறப்பதே இல்லை. அனுபவ வீரர் இக்கட்டான பல சூழ்நிலையைக் கையாண்டு அணிக்கு வெற்றியைத் தேடித்தந்துள்ள தினேஷ் கார்த்திக்கை பலரும் மறந்துவிட்டனர். சீனியர் வீரரான ஜடேஜா குறித்தும் பேசுவதில்லை. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஜடேஜா பிடித்த கேட்ச்தான் அந்த அணியை 337 ரன்களில் அடக்கியது. வாவ் ஜடேஜா என்ற ஹேஷ்டேக்குடன் அதைக் கடந்துவிடுகின்றனர்.

தோனி குறித்து கிரிக்கெட் விமர்சகர்கள் முதல் நெட்டிசன்கள் வரை பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். `இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சேஸிங் செய்த இந்திய அணி முதல் 10 ஓவர்களில் வீணடித்த பந்துகள் ( டாட் பால்கள்) குறித்து பேசாதவர்கள் தோனியின் இன்னிங்ஸ் குறித்து மட்டும் விமர்சனம் செய்யத் தொடங்கிவிட்டனர். அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி, கச்சிதமாகப் பந்துவீசியது. இங்கிலாந்தின் ஃபீல்டிங் அபாரமாக இருந்தது. பவுண்டரி லைனில் பல பந்துகளைத் தடுத்தனர். இதனால் 4 ரன்கள் கிடைக்க வேண்டிய இடத்தில் எல்லாம் ஓரிரு ரன்களே கிடைத்தன.

இங்கிலாந்து ஃபீல்டிங்
இங்கிலாந்து ஃபீல்டிங்

முதல் 10 ஓவர்களில் வீணடித்த பந்துகள், இங்கிலாந்தின் கச்சிதமான பந்துவீச்சு, ஃபீல்டிங் இவையெல்லாம்தான் தோல்விக்குக் காரணம். இதைக் கோலியே ஒப்புக்கொண்டும் இவர்கள் தோனியின் தலையை உருட்டுகின்றனர்'' என்பது ஒருதரப்பினரின் வாதம். அதேநேரம், `தோனிதான் காரணம் கிரிக்கெட்டின் கடவுள் சச்சினே சொல்லிவிட்டார் அடபோங்கப்பா' என்கிறார்கள் மற்றொரு தரப்பினர்.

ஆப்கான் போட்டிக்குப் பின்னர் சச்சின் பேசுகையில்,``கேதர் ஜாதவ் - தோனி ஆடிய விதம் திருப்திகரமானதாக இல்லை. மிகவும் பொறுமையாக விளையாடினர். அனுபவ வீரரான தோனி இப்படி விளையாடியது ஏமாற்றமளிக்கிறது. ஸ்பின்னர்களுக்கு எதிராக நாம் 119 ரன்களைத்தான் இந்தப் போட்டியில் எடுத்துள்ளோம்'' என்றார்.

தோனி
தோனி

இதன் பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தோனி ஆடிய விதமும் கடைசி ஓவரில் 16 ரன்களை எடுத்ததையும் சச்சின் பாராட்டி பேசியிருந்தார்.

நேற்று வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் தோனி ஸ்லோ இன்னிங்ஸ் ஆடுகிறார் எனச் சிலர் விமர்சித்தனர். தோனி சிக்ஸரே விளாசவில்லை என்றெல்லாம் விமர்சனங்கள் இருந்தன. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 338 ரன்களை சேஸ் செய்த இந்திய அணியில் தோனி ஒருவர்தான் சிக்ஸர் அடித்திருந்தார்.

தோனி
தோனி

வங்கதேச அணிக்கு எதிரான போட்டி குறித்து பேசியுள்ள சச்சின், ``பர்மிங்ஹாமில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் தோனி ஆடிய இன்னிங்ஸ் இந்தியாவுக்கு முக்கியமானது. இந்தியாவுக்கு என்ன தேவையோ அதைத்தான், தோனி செய்துள்ளார்'' எனக் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு