சினிமா
ஆன்மிகம்
பேட்டி - கட்டுரைகள்
இலக்கியம்
Published:Updated:

தோனி... ஸ்வீட் மெமரீஸ்!

தோனி
பிரீமியம் ஸ்டோரி
News
தோனி

விளையாட்டு

எம்.எஸ்.தோனி. 12 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் கண்டெடுத்த குறிஞ்சிப்பூ! ஜோகன்னஸ்பெர்க் நகரில் டி-20 உலகக் கோப்பையோடு அவர் நிற்கும் புகைப்படம் இன்னும் கண்ணைவிட்டு அகலவில்லை, அதற்குள் ஓய்வு குறித்துப் பேசத் தொடங்கிவிட்டார்கள். ஓய்வு பெற்றுவிட்டால்தான் என்ன... ஸ்கோர் போர்டில் மட்டும்தானே பெயர் இருக்காது. ஹீரோக்களின் பெயர்கள் நினைவில் இருந்து மறைந்துவிடுமா என்ன... ஆரம்பக்கால ஃபங்க் முடி தொடங்கி, கிரவுண்டில் பைக் ஓட்டும் குறும்புத்தனம் உட்பட விகடனின் பார்வையில் அந்த ஜாம்பவானைச் சிறைபிடித்த தருணங்கள் இவை!

தோனியின் ஆரம்பக்கால அடையாளமே அவரது முடிதான். ஐ.டி வேலைக்குச் செல்லும் இளைஞர்களைப்போல் கிளீன் ஷேவ் சகிதமாக இந்திய வீரர்கள் இருக்க, தன் ஃபங்க் ஸ்டைலால் கவனத்தைக் கவர்ந்தார் எம்.எஸ். அதன்பிறகு பல ஹேர் ஸ்டைல்கள் மாற்றிவிட்டார். அட்டாக், அண்டர் கட், மொஹாவ்க் எனப் பல ஸ்டைல்கள். மொட்டைபோட்டுக்கூட ஆடினார். இருந்தாலும் அந்த ஃபர்ஸ்ட் லுக்தான் அவரது பெஸ்ட். ஒவ்வொரு முறையும் தொப்பியை அகற்றி, முடியைச் சரிசெய்த சீன்கள் எந்த தோனி ரசிகராலும் மறக்க முடியாதவை.

Dhoni
Dhoni
தோனி... ஸ்வீட் மெமரீஸ்!

கோப்பையை வென்ற பிறகு, கில்லி விஜய்போல் பின்னாடி நின்றுகொள்வதெல்லாம் இப்போதுதான். அப்போதெல்லாம் அது வேற தோனி. பிரசன்டேஷனுக்குப் பிறகு அத்தனை அட்டகாசம் செய்வார். ஒருவர் விடாமல் பீரில் அபிஷேகம் செய்துவிடுவார். `தொடர் நாயகன்’, `ஆட்ட நாயகன்’ விருதுகளுக்கு பைக், காரெல்லாம் கொடுத்துவிட்டால் அவ்வளவுதான். கிரவுண்டிலேயே அனைவரையும் ஏற்றிக்கொண்டு டெஸ்ட் டிரைவ் செய்துவிடுவார். அந்த தோனியைப் பார்த்து யுகங்களே ஆகிவிட்டதுபோல் இருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் - அணியைப் பிரபலப்படுத்த விஜய், நயன்தாரா என பிராண்ட் அம்பாஸிடர்களாகப் பலரையும் பயன்படுத்தினார்கள். 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தியாவின் நம்பர் 1 கிளப், உலகிலேயே நம்பர் 1 கிரிக்கெட் கிளப்பாக உயர்ந்திருக்கிறது சி.எஸ்.கே. ஆனால், இதன் நிரந்தர அம்பாஸிடர்... தோனி மட்டும்தான்!

தோனி... ஸ்வீட் மெமரீஸ்!

என்னதான் கிரிக்கெட்டில் ராஜாவாகிவிட்டாலும், தன் ஆரம்பக்காலக் காதலான கால்பந்தைத் தொடர்ந்து விளையாடிக்கொண்டும் ரசித்துக்கொண்டுமே இருக்கிறார் தோனி. ஸ்டார் கால்பந்து லீகில், இந்திய கிரிக்கெட்டர்களின் ஸ்டார் பிளேயர் இவர்தான். சென்னையோடு கிரிக்கெட் சொந்தம் மட்டும் போதாது என்று கால்பந்து அணியையும் வாங்கி, பந்தத்தை பலப்படுத்திக்கொண்டிருக்கிறார்!

தோனி... ஸ்வீட் மெமரீஸ்!
தோனி... ஸ்வீட் மெமரீஸ்!
தோனி... ஸ்வீட் மெமரீஸ்!
தோனி... ஸ்வீட் மெமரீஸ்!

உலகக் கோப்பை! தோனியும் உலகக் கோப்பையும் பிரிக்க முடியாத ஒன்று. கேப்டனாகத் தன் முதல் தொடரிலேயே இந்தியாவை டி-20 உலகக் கோப்பைக்கு வழிநடத்திச் சென்று, மொத்த தேசத்துக்கும் செல்லப்பிள்ளை ஆனவர், 2011 உலகக் கோப்பைக்குப் பின் ஜாம்பவானாகவே உருவெடுத்தார். தோனி கிரிக்கெட்டிலிருந்து விலகினாலும், அடுத்தடுத்த தலைமுறைகள் பல வந்து சாதித்தாலும், இந்த இரு வெற்றிகளும் இவரது பெயரைப் பறைசாற்றிக்கொண்டே இருக்கும்!