Published:Updated:

`தோனி பெயர் மிஸ்ஸிங்; டாப் கிரேடில் கோலி, ரோஹித் ஷர்மா!' - பிசிசிஐ-யின் வீரர்கள் ஒப்பந்தப் பட்டியல்

பிசிசிஐ வெளியிட்டுள்ள வீரர்களுக்கான வருடாந்தர ஒப்பந்தப் பட்டியலில், முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

தோனி
தோனி ( ICC )

கடந்த ஆண்டு நடைபெற்ற நியூஸிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டிக்குப் பின்னர் தோனி, இந்திய அணியில் இடம்பெறவில்லை. அதன்பின்னர், பல்வேறு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இந்திய அணி பங்கேற்றும், வீரர்கள் பட்டியலில் தோனியின் பெயர் இல்லை. இதனால், தோனி ஓய்வு முடிவை அறிவிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், இதுகுறித்து பிசிசிஐ தரப்பிலோ தோனி தரப்பிலோ எந்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் வெளியாகவில்லை.

ரோஹித் ஷர்மா, விராட் கோலி
ரோஹித் ஷர்மா, விராட் கோலி

இந்த நிலையில், பிசிசிஐ வெளியிட்டுள்ள வீரர்களுக்கான வருடாந்தர ஒப்பந்தப் பட்டியலில் மகேந்திரசிங் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. ஏ பிளஸ், ஏ, பி மற்றும் சி என நான்கு பிரிவுகளின்கீழ் வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2020-ம் ஆண்டு செப்டம்பர் வரையிலான காலகட்டத்துக்கான ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலின்படி, ஏ பிளஸ் கிரேடில் இருப்பவர்களுக்கு ஊதியமாக ரூ.7 கோடியும் ஏ கிரேடு ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்களுக்கு ரூ.5 கோடியும் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், பி பிரிவில் இருப்பவர்களுக்கு ரூ.3 கோடியும் சி பிரிவில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீரர்களுக்கு ஒரு கோடி ரூபாயும் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

‘அந்த 2 இன்ச் இடைவெளி.. தினமும் எனக்குள் எழும் கேள்வி!’- ரன் அவுட் குறித்து மனம் திறந்த தோனி

கிரேடு ஏ பிளஸ்

1. விராட் கோலி

2. ரோஹித் ஷர்மா

3. ஜஸ்ப்ரித் பும்ரா

இந்திய அணி
இந்திய அணி

கிரேடு ஏ

1. ரவிச்சந்திரன் அஷ்வின்

2. ரவீந்திர ஜடேஜா

3. புவனேஷ்வர் குமார்

4. புஜாரா

5. அஜிங்கியா ரஹானே

6. கே.எல்.ராகுல்

7. ஷிகர் தவான்

8. முகமது ஷமி

9. இஷாந்த் ஷர்மா

10. குல்தீப் யாதவ்

11. ரிஷப் பன்ட்

கிரேடு பி

1. விருத்திமான் சாஹா

2. உமேஷ் யாதவ்

3. யுஷ்வேந்திர சாஹல்

4. ஹர்திக் பாண்டியா

5. மயங்க் அகர்வால்

தோனி
தோனி

கிரேடு சி

1.கேதர் ஜாதவ்

2. நவ்தீப் சைனி

3. தீபக் சஹார்

4. மணீஷ் பாண்டே

5. ஹனும விஹாரி

6. ஷ்ரதுல் தாக்குர்

7. ஸ்ரேயாஸ் ஐயர்

8. வாஷிங்டன் சுந்தர்