Published:Updated:

தயான்சந்த் விருது வென்ற மதுரை மாற்றுத்திறனாளிகள் பயிற்சியாளர்... சாதித்தது எப்படி?!

கோச் ரஞ்சித்
News
கோச் ரஞ்சித்

"முடங்கிக் கிடக்கும் மாற்றுத்திறனாளிகள் வெளியே வந்து இன்னும் பல்வேறு சாதனைகள் படைக்க வேண்டும்" என்கிறார் மாற்றுத்திறனாளிகள் பயிற்சியாளர் ரஞ்சித்.

மேஜிக் மேன், நிலவொளி ஆட்டக்காரர் என்று போற்றப்படும் மாபெரும் ஹாக்கி விளையாட்டு வீரர் தயான் சந்த். இவரது புகழைப்போற்றும் வகையில் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது இந்திய அரசால் தயான் சந்த் பெயரில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2002-ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்தாண்டுக்கான தயான் சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பயிற்சியாளர் ஜெ.ரஞ்சித்துக்கு வழங்கப்பட்டுள்ளது. விருது வென்ற மகிழ்ச்சியோடு மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்துப் பெறவந்திருந்த ரஞ்சித்திடம் பேசினேன்.

மாரியப்பன் மற்றும் ரஞ்சித்
மாரியப்பன் மற்றும் ரஞ்சித்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

"எனக்கு பிறந்ததில் இருந்தே இரண்டு கால்களும் செயல்படாது. பள்ளிப்படிப்புகளை முடித்தவுடன் குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்குப் போனேன். டெலிபோன் பூத், டிராவல் ஏஜென்சி என்று உட்கார்ந்து வேலை செய்யும் பல இடங்களில் வேலை செஞ்சேன். நண்பர்களின் யோசனையால் விளையாட்டுத் துறையில் டிப்ளமோ படித்தேன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அப்படித்தான் விளையாட்டுத்துறைக்கு வந்து கடுமையான பயிற்சி எடுத்துக்கிட்டேன். எனது உடல் வாகுக்கு ஈட்டி எறிதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் போன்ற விளையாட்டுகள் சரியாக இருக்கும்னு அவற்றைக் கத்துக்கிட்டேன். 2001-ல் இந்திய மாற்றுத்திறனாளிகள் தேசிய போட்டியில் 3 தங்கப்பதக்கங்கள் வென்றேன். அப்போதுதான் இந்தியாவின் பார்வை என் மீது விழத்தொடங்கியது.

கோச் ரஞ்சித்
கோச் ரஞ்சித்

அதனைத்தொடர்ந்தே 2002 சர்வதே அளவிலான பசுபிக் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அங்கே மூன்று போட்டிகளிலும் பங்கேற்றேன். அதில் டிஸ்கஸ் த்ரோவில் வெண்கலப் பதக்கம் வெல்ல முடிந்தது. அதற்குப்பிறகு பல சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றேன். சர்வதேச விளையாட்டுகளில் 10 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் வென்றிருக்கிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்திய அளவில் மொத்தம் 38 தங்கப்பதக்கங்களை வென்றிருக்கிறேன். குறிப்பாக 2002 முதல் 2014 வரை தொடர்ந்து சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றேன். 2012-ல் பிரணாப் முகர்ஜி கையால் விருதும் பெற்றேன். மேலும் பிரதமர் வாஜ்பாய், முதல்வர் கலைஞர் மற்றும் ஜெயலலிதா அவர்கள் கைகளாலும் விருது பெற்றுள்ளேன். 2014 முதல் மதுரையில் பயிற்சியாளராக இருந்துவருகிறேன். மாற்றுத்திறனாளியாகவே இருப்பதால் மாற்றுத்திறனாளிகளின் வலியை உணர்ந்து அவர்களுக்கு எளிமையாக என்னால் பயிற்சி அளிக்க முடிகிறது. பல்வேறு மாற்றுத்திறனாளிகளை ஊக்குவித்து 100-க்கும் மேற்பட்ட வீரர்களை சர்வதேச அளவிலும், 400-க்கும் மேற்பட்ட வீரர்களை இந்திய அளவிலும் போட்டியில் பங்கேற்க வைத்து அதில் பலரையும் பரிசுகள் பெற வைத்துள்ளேன். தொடர்ந்து என்னுடைய மாணவர்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறேன். தற்போது இந்தியாவில் உயரிய விருதுகளில் ஒன்றான தயான் சந்த் விருது எனக்கு வழங்கப்பட்டுள்ளதில் மிகுந்த மகிழ்ச்சி.

கோச் ரஞ்சித்
கோச் ரஞ்சித்

என்னுடன் தங்க மகன் மாரியப்பனுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைத்த விருதாகப் பார்க்கிறேன். முடங்கிக் கிடக்கும் மாற்றுத்திறனாளிகளும் வெளியேவந்து இன்னும் பல்வேறு சாதனைகளைப் படைக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளால் விளையாட்டுத்துறையில் பல மாற்றங்களை செய்யமுடியும். நான் இப்போதும் தொகுப்பு ஊதியத்தில்தான் பணி செய்கிறேன். என்னுடைய நிலையை அரசு கருத்தில் கொண்டு பணி நிரந்தர ஆணை வழங்க வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டார் பயிற்சியாளர் ரஞ்சித்.