Published:Updated:

அரை வயிற்று கஞ்சி... தச்சுவேலை... `அர்ஜுனா' வென்ற பாஸ்கரனின் சாதனைக் கதை!

Bodybuilder Baskaran
News
Bodybuilder Baskaran

பாடிபில்டர்களுக்கு நல்ல புரதச்சத்து நிறைந்த உணவு அவசியம் தேவை. ஆனால், பாஸ்கரன் வீட்டில் கஷ்ட ஜீவனம் என்பதால், பகுதி நேரமாகத் தச்சு வேலையில் ஈடுபட்டுள்ளார்.

சமீபத்தில் மத்திய அரசு அர்ஜுனா விருதுகளை அறிவித்தது. நீண்ட நெடுங்காலத்துக்குப் பிறகு, பாடி பில்டர் ஒருவருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த பாஸ்கரன்தான் இந்த முறை கௌரவமிக்க அந்த விருதைப் பெற்றவர். 1999-ம் ஆண்டு டி.வி பவுலி பாடி பில்டிங் பிரிவில் அர்ஜுனா விருதைப் பெற்றிருந்தார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு இதே பிரிவில் பாஸ்கரனுக்கு அர்ஜுனா விருது கிடைத்துள்ளது. இவர், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சேர்ந்தவர்.

Bodybuilder Baskaran
Bodybuilder Baskaran

பாஸ்கரனின் தந்தை சோமசுந்தரம் சாதாரண கூலித் தொழிலாளி. பாஸ்கரனுக்கு 3 சகோதரர்கள், 2 சகோதரிகள் எனப் பெரிய குடும்பம். தந்தை சோமசுந்தரம் தீப்பட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்தார். வறுமை தாண்டவமாட பிழைப்பு தேடி பாஸ்கரனின் குடும்பம் சென்னையில் குடியேறியது. இங்கே, ஓரளவுக்கு வாழ்க்கை ஓடத் தொடங்கியது. வறுமை காரணமாக 9-ம் வகுப்புக்கு மேல் பாஸ்கரன் படிக்கவில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

1999-ம் ஆண்டு முதல் பாஸ்கரன் பாடி பில்டிங்கில் ஈடுபட்டு வருகிறார். பாடி பில்டிங்கில் ஈடுபடுவதற்கு நல்ல புரதச்சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். மட்டன், முட்டை, மீன் போன்றவை பாடி பில்டிங்கில் ஈடுபடும் வீரர்களுக்கு அவசியத் தேவை. பொதுவாக, பாடி பில்டர்கள் ஒரு நாளைக்கு 6 முறை உணவு உட்கொள்வார்கள். ஒரே நேரத்தில் அதிக உணவு உட்கொள்வதைத் தவிர்ப்பார்கள். இதனால், உடலில் கொழுப்புச்சத்து சேராது. பாஸ்கரன் பாடி பில்டிங்கில் ஈடுபட்டபோது, மிகச் சாதாரண உணவு வகைகளையே உட்கொண்டு உடலை மெருகேற்றியுள்ளார். பகுதி நேரமாகத் தச்சு வேலையில் ஈடுபட்டுள்ளார். அதில், கிடைக்கும் வருவாயைக் கொண்டு சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வார். பாஸ்கரன் தன் பாடியை மெருகேற்றியது இப்படித்தான்.

Bodybuilder Baskaran
Bodybuilder Baskaran

பாடி பில்டிங்கில் பதக்கங்களைக் குவிக்க, ஐ.சி.எப் தொழிற்சாலையில் பாஸ்கரனுக்கு வேலை கிடைத்தது. அதற்குப் பிறகே பாஸ்கரனின் குடும்பம் தலையெடுக்கத் தொடங்கியது. 'நமக்குத்தான் வேலை கிடைத்துவிட்டதே...' என்று பாஸ்கரன் ஓய்ந்துவிடவில்லை. தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். 2010-ம் ஆண்டுக்குப் பிறகு, பாஸ்கரன் சுமார் 5 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால், பாடி பில்டிங்கில் ஈடுபடவில்லை. எனினும், கடந்த ஆண்டு தாய்லாந்தில் நடந்த உலக ஆணழகனுக்கான போட்டியில் 65 கிலோ எடைப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். புனே நகரில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப்பில் 60 கிலோ எடைப் பிரிவிலும் தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாஸ்கரன் தவிர ராஜேந்திரன் மணி என்ற மற்றொரு வீரரையும் விருதுக்கு பாடி பில்டிங் அசோசியேசன் பரிந்துரைத்திருந்தது. உலக மற்றும் ஆசியப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றது, பாஸ்கரன் அர்ஜுனா விருது பெற முக்கியக் காரணமாக அமைந்தது.

எனக்கு அர்ஜுனா விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. என் உழைப்புக்கு இப்போது அங்கீகாரம் கிடைத்துள்ளது.
பாடி பில்டர் பாஸ்கரன்

தற்போது சென்னை கே.கே.நகரில் வசித்து வரும் பாஸ்கரன் சொந்தமாக ஜிம் வைத்து நடத்துகிறார். 'தனக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டதன் மூலம் பாடி பில்டிங் இந்தியா முழுவதும் கவனம் பெற்றுள்ளதாக பாஸ்கரன் கூறுகிறார். அவருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்க்கையில் எதிர் நீச்சல் அடித்து சாதனை படைத்த பாஸ்கரனுக்கு வாழ்த்துகள்!