Published:Updated:

அஜித் சுடப் பயன்படுத்துறது இந்த ரியல் கன்தான்! | Asian Air Gun Ashwin | சம்திங் different

Asian Air Gun Ashwin

"ஆங்கிலேயர் காலத்தில் அவர்களின் துப்பாக்கி முதலிய ஆயுதங்களில் ஏற்படும் பழுதினை சரிபார்ப்பவராக என் கொள்ளு தாத்தா பணிபுரிந்தார்." - Asian Air Gun Ashwin

அஜித் சுடப் பயன்படுத்துறது இந்த ரியல் கன்தான்! | Asian Air Gun Ashwin | சம்திங் different

"ஆங்கிலேயர் காலத்தில் அவர்களின் துப்பாக்கி முதலிய ஆயுதங்களில் ஏற்படும் பழுதினை சரிபார்ப்பவராக என் கொள்ளு தாத்தா பணிபுரிந்தார்." - Asian Air Gun Ashwin

Published:Updated:
Asian Air Gun Ashwin
ஆனந்த விகடன் யூடியூப் சேனலின் சம்திங் டிப்ஃரண்ட் நிகழ்ச்சிக்காக ஏசியன் ஏர் கன்ஸின் உரிமையாளரான அஸ்வின் அவர்களைச் சந்தித்து உரையாடினோம். பல தலைமுறைகளாக துப்பாக்கிகளுடன் புழங்கி வரும் குடும்பம் அஸ்வினுடையது. இதுமட்டுமல்லாமல் இவர் துப்பாக்கி சுடுதலில் தேசிய அளவிலான சாம்பியன்.
அவருடனான உரையாடலில் இருந்து சில துளிகள்.

இந்த பிசினஸை உங்கள் குடும்பத்தினர் எப்போதிலிருந்து செய்துவருகிறார்கள்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

Asian Air Gun Ashwin
Asian Air Gun Ashwin

"ஆங்கிலேயர் காலத்தில் அவர்களின் துப்பாக்கி முதலிய ஆயுதங்களில் ஏற்படும் பழுதினைச் சரிபார்ப்பவராக என் கொள்ளு தாத்தா பணிபுரிந்தார். அவரிடம் இருந்து என்னுடைய தாத்தாவும் இத்தொழிலை தொடந்தார். இதை ஓர் அதிகாரபூர்வ உரிமத்துடன் 1960-களில் கடையாக அமைத்தவர் சம்பந்தம் அவர்கள். நான் இக்கடையை முழுமையாக பார்த்துக்கொள்ள தொடங்கி சுமார் ஆறு வருடங்கள் ஆகிவிட்டன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இக்கடையை பொறுத்தவரையில் ஏர் கன்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. ஏர் கன் வகைகளை வாங்க வாடிக்கையாளர்களிடம் எந்த ஓர் உரிமமும் கட்டாயமில்லை. அவர்களின் ஏதாவதொரு அடையாள அட்டை மட்டும் போதுமானது."

Asian Air Gun Ashwin
Asian Air Gun Ashwin

நீங்கள் ஒரு தேசிய அளவிலான சாம்பியன். துப்பாக்கியுடனான உங்கள் உறவு எந்த வயதில் தொடங்கியது?

"என் தாத்தா, அப்பா எல்லோருமே தேசிய அளவிலான வீரர்கள். அதனால் துப்பாக்கிகளை என் சிறுவயதில் இருந்து நான் மிக இயல்பாகவே பார்த்துவந்தேன். எனக்கு நினைவு தெரிந்த வயதில் இருந்து என் அப்பா இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்க இரவு பகலாக பயிற்சி செய்வதை பார்த்திருக்கிறேன்."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நடிகர் அஜித் குமார் உபயோகிப்பது ஏர் கன் வகையை சேர்ந்ததா அல்லது ரியல் கன்னா?

"துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் இரு வகை துப்பாக்கிகளையும் பயன்படுத்துவது உண்டு. அதிலும் ஏர் கன் வகைகளை விட ரியல் கன்களிலேயே பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுவது உண்டு. நான் கலந்துக்கொண்டு வென்று ரியல் கன் பிரிவில். அஜித் சாரை பொறுத்தவரையில் இரண்டு வகை துப்பாகிகளையும் அவர் பயன்படுத்துவார்."

நடிகர் அஜித் பயன்படுத்தும் கன் குறித்த விவரமும், மேலும் பல சுவாரஸ்யங்களும் கீழுள்ள வீடியோவில்...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism