Published:Updated:

விஜய் குமாருக்கு சுபேதார் மேஜராக பதவி உயர்வு!

விஜய் குமாருக்கு சுபேதார் மேஜராக பதவி உயர்வு!
விஜய் குமாருக்கு சுபேதார் மேஜராக பதவி உயர்வு!
விஜய் குமாருக்கு சுபேதார் மேஜராக பதவி உயர்வு!

புது டெல்லி: ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற விஜய் குமாருக்கு சுபேதார் மேஜராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஜய் குமாருக்கு பதவி உயர்வையும், ரூ.30 லட்சம் ரொக்கப் பரிசையும் ராணுவ தலைமைத் தளபதி விக்ரம் சிங் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து விக்ரம் சிங் கூறியதாவது:-

விஜய் குமார் அதிகாரி நிலையிலான பதவி உயர்வு பெறுவதற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். அதிகாரி நிலையிலான பதவிக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும். பல்வேறு விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். அவர் அந்தப் பதவியைப் பெறுவதற்கு தகுதியானவர்' என்றார்.

இதுதொடர்பாக விஜய் குமார் கூறுகையில், "பதவி உயர்வு கிடைத்ததில் மகிழ்ச்சியே. இருப்பினும் அதிகாரி நிலையிலான பதவி எனக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறேன். கடந்த 6 மாதங்களாக அந்தப் பதவிக்காகக் காத்திருக்கிறேன். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் அந்தஸ்திலான பதவி உயர்வு அளிக்கப்படும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மாக்கன் உறுதியளித்துள்ளார். அதை எதிர்பார்த்துள்ளேன்.

ராணுவத்துடன் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. ராணுவத்தால்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். ராணுவத்தில் இருந்து நான் வெளியேறப் போவதாக வெளியான செய்தியில் உண்மையில்லை. ஊடகங்கள்தான் அவ்வாறு தவறான செய்தியை வெளியிட்டன' என்றார்.