Published:Updated:

ஒலிம்பிக் குத்துச்சண்டை: இந்திய வீராங்கனை மேரிகோம் வெண்கலம் வென்றார்!

லண்டன்: ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீராங்கனை மேரிகோம் அரையிறுதியில் தோல்வியடைந்தபோதிலும்,  வெண்கலப் பதக்கதைக் கைப்பற்றியுள்ளார்

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை மேரிகோம் 51 கிலோ எடைபிரிவில் இடம்பெற்றார். இன்று நடந்த அரையிருதிப் போட்டியில் பிரிட்டன் வீராங்கனை ஆடம்ஸை எதிர்கொண்டார்.

தொடக்கம் முதலே தடுமாறிய மேரிகோம், பிரிட்டன் வீராங்கனையிடம் வீழ்ந்தார். அவர் 3-1, 2-1, 3-2, 3-2 என்ற செட் கணக்கில் தோல்விய தழுவிய மேரிகோம் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். 

ஏனினும் இறுதி வரை போராடிய மேரிகோமுக்கு இந்தியா முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

ஒலிம்பிக் குத்துச்சண்டை பிரிவில் ஒரு இந்திய வீராங்கனை பதக்கம் வெல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.