Published:Updated:

ஒலிம்பிக்:பேட்மிடன், வில்வித்தையில் இந்தியா தோல்வி!

ஒலிம்பிக்:பேட்மிடன், வில்வித்தையில் இந்தியா தோல்வி!
ஒலிம்பிக்:பேட்மிடன், வில்வித்தையில் இந்தியா தோல்வி!
ஒலிம்பிக்:பேட்மிடன், வில்வித்தையில் இந்தியா தோல்வி!

லண்டன்: லண்டனில் ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற  ஆடவர் வில்வித்தைப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது.

ஆடவர் குழு வில்வித்தை தகுதிச் சுற்றுப் போட்டியின் டை பிரேக்கரில் 29-27 என்ற  புள்ளிகள் கணக்கில் ஜப்பான் அணி வெற்றி பெற்றது.

இன்று காலை நடைபெற்ற தகுதிச் சுற்று ஆட்டத்தில ஜப்பான் அணியுடன் இந்திய  வீரர்கள் மிக அபாரமாக தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இதனால் இரு  அணிகளுமே ஆட்டத்தின் நிறைவில் 214 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்தது.

இதனையடுத்து வெற்றி தோல்வியை தீர்மானிக்க நடத்தப்பட்ட டை பிரேக்கர் ஆட்டத்தில்  ஜப்பான் அணி 29 புள்ளிகளை எடுத்து வெற்றி பெற்றது.இந்திய அணி 27 புள்ளிகளைப்  பெற்றது.

##~~##
பேட்மிடனிலும் தோல்வி
இதனிடையே லண்டன் ஒலிம்பிக் தொடரின், பேட்மிடன் குரூப் சி பிரிவின் துவக்க  ஆட்டத்தில் ஜூவாலா கட்டா ஜோடி தோல்வியடைந்தது.
ஜூவாலா கட்டா - டிஜூஜோடி, டென்மார்க்கின் கமீலா ஜூஹில் - தாமஸ் லேபார்ன்  ஜோடியை எதிர்கொண்டது. இந்த போட்டியில்,இந்திய ஜோடி தோல்வியடைந்தது.  ஜூவாலா ஜோடிக்கு, கலப்பு இரட்டையர் பிரிவில் 2 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.