Published:Updated:

``வலி அதிகமானது என்றாலும், நோய் சரி செய்யக்கூடியது"- புற்றுநோயால் பாதிக்கப்பட்ட டென்னிஸ் வீராங்கனை

மார்டினா நவ்ரட்டிலோவா
News
மார்டினா நவ்ரட்டிலோவா

பிரபல டென்னிஸ் வீராங்கனை மார்டினா நவ்ரட்டிலோவா தொண்டை மற்றும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Published:Updated:

``வலி அதிகமானது என்றாலும், நோய் சரி செய்யக்கூடியது"- புற்றுநோயால் பாதிக்கப்பட்ட டென்னிஸ் வீராங்கனை

பிரபல டென்னிஸ் வீராங்கனை மார்டினா நவ்ரட்டிலோவா தொண்டை மற்றும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மார்டினா நவ்ரட்டிலோவா
News
மார்டினா நவ்ரட்டிலோவா
1970 மற்றும் 80 களில் டென்னிஸ் உலகின் தலைசிறந்த  வீராங்கனையாக திகழ்ந்த  மார்டினா நவ்ரட்டிலோவா இதுவரை 59 முறை கிராண்ட்ஸ்லாம்  பட்டம்  வென்றிருக்கிறார்.

டென்னிஸ் போட்டிகளில் அதிக முறை தனி நபர் மற்றும் இரட்டையர் பிரிவு பட்டங்களை வென்ற வீராங்கனை என்ற சாதனையை தன்னகத்தே வைத்திருக்கும் மார்டினா நவ்ரட்டிலோவா தற்போது தொண்டை மற்றும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். 

நவ்ரட்டிலோவா
நவ்ரட்டிலோவா

டி.வி மற்றும் ரேடியோவில் டென்னிஸ் விளையாட்டைத் தொகுத்து வழங்கும் மார்டினா, தனது உடல்நிலை காரணமாக இந்த ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகளுக்காக மெல்போர்னுக்குச் செல்ல மாட்டார். ஆனால் தொலைதூரத்தில் இருந்து நடைபெறும் ஒளிபரப்புகளில் பங்களிப்பார் என்று கூறப்படுகிறது. இந்த மாத இறுதியில் சிகிச்சையை தொடங்க நியூயார்க் செல்ல உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  

தனது புற்றுநோய் குறித்து தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்த அவர், "இரண்டு புற்றுநோய்களும் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு விட்டது. வலி அதிகமானது என்றாலும், என்னுடைய நோய் சரி செய்யக்கூடியது என்று நம்புகிறேன். நான் இந்த நோயைப் போராடி வெற்றி பெறுவேன்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஏற்கனவே  கடந்த 2010ம் ஆண்டு மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மார்டினா நவ்ரட்டிலோவா சிகிச்சை மேற்கொண்டு இயல்பு நிலைக்கு திரும்பி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.