Published:Updated:

`பேட்டிங் ஃபர்ஸ்ட்.. நிறைய பேசினோம்.. ஆனால் அது மட்டும் போதுமா?’- டி20 தொடர் வெற்றி குறித்து கோலி

பெரிய டார்கெட் என்ற ப்ரஷர் வெஸ்ட் இண்டீஸ் பக்கம் இருந்ததை இந்திய பந்துவீச்சாளர்கள் கச்சிதமாகப் பயன்படுத்தி ஆரம்பத்திலே டாப் ஆர்டடை கழற்றினர்.

கோலி
கோலி ( AP )

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரை அமர்க்களமாக கைப்பற்றியுள்ளது `மென் இன் ப்ளூ’. டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியைக் கட்டுப்படுத்துவது என்பது கடினம். அதிலும் இந்தியாவில் நடைபெற்ற இந்தத் தொடரில் டாஸ் வென்று சேஸிங் எடுத்தால் வெற்றிதான் என்பதுபோல்தான் இருந்தது இரு அணிகளின் செயல்பாடுகளும். முதல் இரு போட்டிகளிலும் சேஸிங் அணிகள் வெற்றிபெற, சேஸிங்க்கு சாதகமான மும்பை வான்கடே மைதானத்தில் அனைவரது கவனமும் டாஸ் மீதுதான் இருந்தது.

ரோஹித் - ராகுல்
ரோஹித் - ராகுல்

டாஸை வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியபோது இந்திய ரசிகர்கள் கொஞ்சம் சோர்ந்துதான் போனார்கள். ஆனால், ரோஹித் மற்றும் ராகுல் அளித்த அதிரடியான தொடக்கம் ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தது. `அட, இவங்க எவ்ளோ ரன்கள் எடுத்தாலும், வெஸ்ட் இண்டீஸ் எளிதாக சேஸ் செய்துவிடும்’ என்றுதான் நினைக்கத் தோன்றியது. காரணம், இந்திய வீரர்களே 16 சிக்ஸர்களைப் பறக்கவிட்டனர். சிக்ஸர் அடிக்கவே பிறந்து கிரிக்கெட் விளையாட வந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை சொல்லவா வேண்டும். ஆனால், இந்திய அணி வைத்த டார்கெட் வெஸ்ட் இண்டீஸ் அணியை தொடக்கத்திலிருந்தே கட்டுக்குள் வைத்திருந்தது.

இந்திய அணிக்கு இறுதியில் கோலியின் ருத்ரதாண்டவம் கைகொடுக்க 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்தது. பெரிய டார்கெட் என்ற ப்ரஷர் வெஸ்ட் இண்டீஸ் பக்கம் இருந்ததை இந்திய பந்துவீச்சாளர்கள் கச்சிதமாகப் பயன்படுத்தி ஆரம்பத்திலே டாப் ஆர்டடை கழற்றினர். 17 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்திய அணி
இந்திய அணி

பின்னர் பொல்லார்டு மற்றும் ஹெட்மயர் ஆகியோரின் அதிரடியால் எங்களால் சவால் அளிக்க முடியும் என கம்பேக் கொடுத்தனர். ஆனால், எல்லாம் பொல்லார்ட் ஆட்டமிழக்கும் வரைதான். 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதன்மூலம் இந்திய அணி டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்தத் தொடரின் நாயகனாக அறிவிக்கப்பட்ட இந்திய அணியின் கேப்டன் கோலி, ``முதலில் பேட்டிங் செய்தும்வெற்றி பெறுவது குறித்து நிறைய பேசினோம். போட்டி தொடங்கும் முன்பு, பேசியதை செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. முதலில் பேட்டிங் செய்து நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம் அது கூடுதல் மகிழ்ச்சி தருகிறது. எங்கள் இரண்டாவது திருமண நாளில் மிகச் சிறப்பாக செயல்பட முடிந்தது கூடுதல் மகிழ்ச்சி.

கோலி
கோலி

டி20, ஒருநாள், டெஸ்ட் என அனைத்து ஃபார்மெட்டிலும் விளையாடுவது பற்றி கேட்கிறார்கள். எல்லாம் ஒரு மனநிலைதான். அதைச் சரியாக பொருத்திவிட்டால் வெற்றிதான். டி20 உலகக் கோப்பை தொடரும் வருகிறது. கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் செயல்பட வேண்டும்.

பிட்சை பொறுத்து நமது ஆட்டம் இருக்க வேண்டும். பிட்ச் சாதகமாக இருக்கும்போது நிச்சயம் பவுண்டரிகள் கிடைக்க வேண்டும். ஒரு 20-25 ரன்கள் கூடுதலாக இருந்தால் எப்போதும் அதிக நம்பிக்கையுடன் செயல்பட முடியும். அந்த வகையில் இந்தப் போட்டி ஒரு நல்ல பாடம். ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பை விளையாடுவது குறித்து அணிக்குள் ஆலோசனைகள் நடத்த வேண்டும்.

கோலி
கோலி

அங்குள்ள மைதானங்கள் பெரியது. அங்கு எப்படி இலக்குகளை நிர்ணயம் செய்வது என்பதை தெரிந்துகொள்வது அவசியம். மீண்டும் சொல்கிறேன், பேசுவது மட்டும் பலன் தராது. அதை களத்தில் சரியாக செய்து காட்ட வேண்டும்” என்றார்.