Published:Updated:

`Once an MI always an MI'; ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பொல்லார்ட்!

பொல்லார்ட்
News
பொல்லார்ட்

'ஒரு முறை மும்பை இந்தியன்ஸ் என்றாகிவிட்டால் கடைசிவரை மும்பை இந்தியன்ஸ்தான் (Once an MI always an MI)' -ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பொல்லார்டின் நெகிழ்ச்சிப் பதிவு.

Published:Updated:

`Once an MI always an MI'; ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பொல்லார்ட்!

'ஒரு முறை மும்பை இந்தியன்ஸ் என்றாகிவிட்டால் கடைசிவரை மும்பை இந்தியன்ஸ்தான் (Once an MI always an MI)' -ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பொல்லார்டின் நெகிழ்ச்சிப் பதிவு.

பொல்லார்ட்
News
பொல்லார்ட்

ஐபிஎல் போட்டிகளில் வேறு எந்த அணியிலும் விளையாடாமல் மும்பை அணிக்காக கடந்த 13 தொடர்களில் விளையாடியவர் வெஸ்ட் இண்டீஸ் வீரனான பொல்லார்ட். மும்பை அணி ஐந்து ஐபிஎல் கோப்பைகளையும், மூன்று சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளையும் பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர். இந்நிலையில் மும்பை அணியில் பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் என நல்ல ஆல்ரவுண்டராக மும்பை அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்த பொல்லார்ட் தற்போது ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது பற்றி பொல்லார்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்னும் சில வருடங்கள் விளையாட விரும்புவதால் இது எளிதான முடிவு அல்ல. இருப்பினும், மும்பை இந்தியன்ஸ் உடனான கலந்துரையாடலுக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் இந்த முடிவை எடுத்துள்ளேன். இது அற்புதமான அணி, இன்னும் பல சாதனைகளையும் மாற்றங்களையும் பெறும். நான் இனி மும்பை இந்தியன்ஸ் (MI) க்காக விளையாடவில்லை என்றால், MIக்கு எதிராகவும் என்னால் விளையாட முடியாது. 'ஒருமுறை மும்பை இந்தியன்ஸ் என்றாகிவிட்டால் கடைசிவரை மும்பை இந்தியன்ஸ்தான் (Once an MI always an MI)'. இது மும்பை இந்தியன்ஸ்க்கு மிகவும் உணர்ச்சிகரமானத் தருணம் என்பதை அறிவேன். இருப்பினும், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும், MI எமிரேட்ஸ் உடன் விளையாடவும் நான் ஒப்புக்கொண்டுள்ளேன். எனது கிரிக்கெட் வாழ்க்கையின் இந்த அடுத்த அத்தியாயம் உண்மையிலேயே உற்சாகமானது" என்று கூறியுள்ளார்.