பிரீமியம் ஸ்டோரி
##~##

 ''இன்றைய குழந்தைகள், சரியான  ஊட்டச் சத்து இல்லாமல் சிறு வயதிலேயே பல தொற்றுநோய்ப் பிரச்னைகளால் பாதிக்கப்படுகிறார்கள். சீரான உடல்வாகு அமைவது இல்லை. 'ஒபிசிட்டி’ (Obesity) எனப்படும் ஊளைச்சதை, உடல் பருமன் வந்துவிடுகின்றன. இதற்கு முக்கியக் காரணம், கலோரிகள் அதிகம் உள்ள உணவை எடுத்துக்கொள்வதுதான்'' என்கிறார், சென்னையின் பிரபல 'மேவரிக்’ உடற்பயிற்சி நிறுவனத்தின் உரிமையாளரான கீதா கிருஷ்ணராஜ்.

இவர், குழந்தைகள் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்கான நிகழ்ச்சிகளை பள்ளிகளில் நடத்திவருகிறார். உடலில் இருக்கும் அதிகப்படியான கலோரிகளை எரிக்க, வீட்டிலேயே செய்யக்கூடிய சில பயிற்சிகளை, செங்கல்பட்டில் உள்ள வித்யாசாகர் குளோபல் பள்ளிச் சுட்டிகளுக்கு செய்துகாட்டினார்.

முதலில், 'இண்டோர்’ பயிற்சிகள். பைசெப் கர்ல்ஸ், சிட் அப்ஸ், ஸ்டாண்ட் அப்ஸ், பிரஸ் அப்ஸ், ஸ்கிப்பிங், பாக் எக்ஸ்டன்ஷன் என ஒவ்வொன்றும் இசையுடன் ஜாலியாக இருந்தது. உடற்பயிற்சியில் பங்கேற்ற மாணவர்கள், ''மிஸ்... ஒன்மோர் ப்ளீஸ்’ என்றார்கள்.

அடுத்து, 'அவுட்டோர்’ பயிற்சி. ஒரு சிறிய இடைவேளைக்குப் பின்பு, மைதானத்தில்  ஏணி, பந்து, தலையணைகள் வந்துசேர, மாணவர்களுக்கு மீண்டும் குதூகலம் பெருகியது. பயிற்சிகளைக் காண, கே.ஜி. வகுப்பின் குட்டிச் சுட்டி மலர்களும் அழைத்து வரப்பட்டனர். அவர்களின் கரகோஷத்தோடு, உற்சாகமாகப் பயிற்சிகளைச் செய்தார்கள் மாணவர்கள்.

உடலினை உறுதி செய்!

''வேடிக்கை பார்க்க மட்டும்தானா? எங்களுக்கு விளையாட்டு இல்லையா?'' என்பது போல பார்த்த குட்டி மலர்களுக்கு,  'ரெட் லாரி, ப்ளூ லாரி, யெல்லோ லாரி’ என மாறி மாறி வேகமாகச் சொல்லும் பயிற்சியைத் தந்தபடியே, குழந்தைகளுக்கு இதுபோன்ற பயிற்சிகள், சுறுசுறுப்பை அளிக்கும். மூளை வளர்ச்சி மிகவும் உதவும்.  மிக விரைவில் நல்ல உச்சரிப்புடன் உரையாட முடியும்'' என்றார் கீதா கிருஷ்ணராஜ்.

உடலினை உறுதி செய்!
உடலினை உறுதி செய்!

ஆசிரியர்களின் ஆரோக்கியத்துக்கான பரிசோதனைகளும் செய்யப்பட்டன. அதற்குப் பிறகு, 'எதற்காக இந்த உடற்பயிற்சிகள்... இதன் நன்மைகள் என்ன?’ என்று பயிற்சியின் அவசியம் பற்றி மாணவர்களுக்கு சொல்லப்பட்டது.

''எக்சர்சைஸ்னா ரொம்பக் கஷ்டம், போரிங்னு நினைச்சுட்டிருந்தேன். ஆனா, இங்கே செஞ்ச ஒவ்வொண்ணும் ஈஸியாவும் இன்ட்ரஸ்டிங்காவும் இருந்தது. இனிமே தினமும் வீட்டிலேயே செய்யப்போறேன். உடம்பை கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வெச்சுப்பேன்'' என்றாள் ஒரு மாணவி.

''யாராவது நம்மகிட்டே வம்புக்கு வந்தாங்கன்னா... ஒரே அடி'' என்று மிரட்டலுடன் சொல்லிவிட்டு, புஷஅப்ஸ் எடுக்க ஆரம்பித்தான் ஒரு சுட்டி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு