Published:Updated:

விளையாட்டு விஞ்ஞானம்!

விளையாட்டு விஞ்ஞானம்!


01-05-2008
விளையாட்டு விஞ்ஞானம்!
கலையும் கூடாரம்!

தேவை கி 4 அளவு தாள்கள், மேசை.

செய்முறை கி 4 அளவுள்ள ஒரு தாளை இரண்டாக மடித்து, ஒரு கூடாரம் போல் செய். மேசையின் விளிம்பு அருகே கூடாரத்தை வை. கூடாரத்தின் திறந்த பகுதிக்கு நேரே கிடைமட்டமாக, உன் வாயை வைத்து நன்றாக மூச்சை உள்ளேஇழுத்து வேகமாக காற்றை ஊது. இப்போது என்ன நிகழும்..?!

விளையாட்டு விஞ்ஞானம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கூடாரம் மேசை மீது படிந்து தட்டையாகி விடும் அதிசயத்தை காணலாம்.

இந்த அதிசயத்துக்கு என்ன காரணம்..?!

கூடாரத்தின் திறந்த பகுதி வழியே வேகமாக காற்றை ஊதும் போது அங்கு காற்றழுத்தம் குறைகிறது. ஆனால் கூடாரத்துக்கு வெளியேயுள்ள வளிமண்டல அழுத்தம் அதிகமாக இருப்பதால் காற்று கூடாரத்தை கீழ்நோக்கி அழுத்தி தட்டையாக ஆக்கி விடுகிறது.

"எங்கு ஒரு திரவம் அல்லது வாயுவின் திசைவேகம் அதிகமாக இருக்கிறதோ, அங்கு அழுத்தம் குறைவாக இருக்கும்" என்பதுதான் 'பெர்னோலி தத்துவம்'.

இதன் அடிப்படையில்தான் கூடாரம் கலைந்து தட்டையா கிறது.

மேலெழும்பும் தாள்!

தேவை இரண்டு கி 4 அளவு தாள்கள்.

விளையாட்டு விஞ்ஞானம்!

செய்முறை இரண்டு கி 4 தாள்களுக்கு இடையில் ஒரு விரல் அளவு இடைவெளி இருக்குமாறு தாள்களை கிடைமட்டமாக பிடி. மேலேயுள்ள தாள் மடங்காமல் விறைப்பாக இருக்குமாறும், கீழேயுள்ளதாள் கீழ்நோக்கி தொங்கிக் கொண்டு இருக்குமாறும் வைக்கவேண்டும். இரண்டு தாள்களுக்கும் இடையில் காற்றை வேகமாக ஊது. இப்போது என்ன நிகழ்கிறது..?!

அட, என்ன ஆச்சரியம்?! கீழே தொங்கிக் கொண்டிருக்கும் தாள் மேலெழும்பி கிடைமட்டமாக இருக்கும் தாளுக்கு இணையாக வருவதை நீ பார்க்கலாம்.

இது எப்படி சாத்தியமாகிறது என்றால்,

தாள்களுக்கு இடையே காற்றை வேகமாக ஊதும்போது, அங்கு காற்றழுத்தம் குறைகிறது. தொங்கும் தாளுக்குப் பின்னால் உள்ள வளிமண்டல காற்றழுத்தம் அதிகமாக இருப்பதால் தாள் மேல்நோக்கி எழும்பி மேலே உள்ள தாளுக்கு இணையாக வருகிறது.

இயற்கை விளைவு திடீரென வீசும் சூறாவளியால் ஓலை கூரைகள் பிய்த்துக்கொண்டு தூக்கியெறியப் படுவதை நீ பார்த்திருப்பாய்.

சூறைக் காற்றால் காற்றின் திசைவேகம் அதிகமாகும் போது, கூரையின் மேற்பரப்பில் காற்றழுத்தம் குறைகிறது. அதனால் கூரையின் கீழ்ப்பரப்பில் உள்ள காற்றழுத்தமானது, மேலே உள்ளதைவிட அதிகமாக இருக்கும். இதனால்தான் கூரைகள் எளிதாக தூக்கி எறியப்படுகின்றன!