Published:Updated:

அட்டகாசமான அப்வேர்ட்ஸ் ஆட்டம் !

சந்தோஷ் குமார் பா.கார்த்திக்

பிரீமியம் ஸ்டோரி

 மாடல்: சென்னை, எம்.ஜி.ஆர்.நகர் சுட்டிகள்

வணக்கம் நண்பர்களே...

##~##

இந்த இதழில் நாம் பார்க்கப்போகும் விளையாட்டு, 'அப்வேர்ட்ஸ்’ ((Upwords).  

இது பலகை விளையாட்டு (Board Game)   வகையைச் சார்ந்தது. Up என்றால், மேலே.  Words என்றால், வார்த்தைகள். அதாவது, நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள எழுத்துகளைக்கொண்டு, வார்த்தைகளை பலகையின் மேல் உருவாக்க வேண்டும். இதன் மூலம் நிறைய ஆங்கிலச் சொற்களை விளையாட்டாக அறிந்துகொள்ளலாம்.

இந்த விளையாட்டில் சதுரங்கம் போல 64 கட்டங்கள் உள்ள பலகை ஒன்று இருக்கும். அதேபோல, 64 ஆங்கில எழுத்துகள்கொண்ட பதிகற்களும் (BLOGS) இருக்கும்.

விளையாடுபவர்கள் பதிகற்களை சமமான எண்ணிக்கையில் பிரித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் ஓர் எழுத்தினை எடுக்க வேண்டும். யாருடைய எழுத்து, ஆங்கிலத்தின் முதல் எழுத்தான A-க்குப் பக்கத்தில் வருகிறதோ, அவர்கள் முதலில் ஆட்டத்தைத் தொடங்க வேண்டும்.

ஒவ்வோர் எழுத்துக்கும் இரண்டு மதிப்பெண்கள் உண்டு. முதலில் விளையாடுபவர், பலகையின் நடுவில் இருக்கும் நான்கு கட்டங்களில் இருந்து விளையாட வேண்டும். உங்களிடம் உள்ள எழுத்துகளைக்கொண்டு, ஒரு வார்த்தையை பலகையில் உருவாக்க வேண்டும்.

அட்டகாசமான அப்வேர்ட்ஸ் ஆட்டம் !

அடுத்து விளையாடுபவர், ஏற்கனவே உள்ள எழுத்துகளை உபயோகித்து வார்த்தைகளை அமைக்க வேண்டும். இதில் மிகவும் சுவாரஸ்யமான விதி என்னவென்றால், ஓர் எழுத்தின் மேல் இன்னோர் எழுத்தை வைக்கலாம். அப்படி வைத்தால், கீழே இருக்கும் எழுத்துக்கும் சேர்த்து, உங்களுக்கு மதிப்பெண்கள் கிடைக்கும்.

இப்படி ஒன்றின் மேல் ஒன்றாக வைப்பது, 5 அடுக்குகளுக்கு மேல் செல்ல கூடாது. மேலும்

அட்டகாசமான அப்வேர்ட்ஸ் ஆட்டம் !

நீங்கள் வைக்கும் ஒரு வார்த்தையில் ஓர் எழுத்து மட்டும்தான், ஒன்றின் மேல் ஒன்றாக வைக்கலாம். 'Q’  என்ற எழுத்துக்கு மட்டும் ஒரு விதிவிலக்கு. 'Q’ எழுத்து பெரும்பாலும் 'u’ எழுத்துடன் சேர்ந்தே வரும். ஆதலால், 'னி’ எழுத்துக்கு பதில், 'Qu’ என்ற எழுத்து இந்த விளையாட்டில் இருக்கும்.

ஆட்டம் முடியும்போது, ஒவ்வொருவரும் எவ்வளவு எழுத்துகளை வார்த்தைகள் அமையாமல் வைத்திருக்கிறார்களோ, அவ்வளவு மதிப்பெண்கள் அவர்களின் மொத்த மதிப்பெண்களிடம் இருந்து கழிக்கப்படும்.

விளையாடும்போது நீங்கள் உருவாக்கிய வார்த்தைகள், 'சரியா... தவறா?’ என்பதைத் தெரிந்துகொள்ள, அகராதி ((Dictionary) ) ஒன்றை வைத்துக்கொள்வது நல்லது.  

அடுத்த  இதழில் மற்றொரு புதிய  விளையாட்டுடன் சந்திப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு