Published:Updated:

பர பர பல்சக்கர ஆட்டம் !

சந்தோஷ் குமார் ஜெ.வேங்கடராஜ்

பர பர பல்சக்கர ஆட்டம் !

சந்தோஷ் குமார் ஜெ.வேங்கடராஜ்

Published:Updated:

 மாடல்: தாய் சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளி    
சுட்டிகள், சாலிகிராமம், சென்னை-93.

##~##

* இந்த விளையாட்டுக்கான பொருட்கள், பிரபல விளையாட்டுப் பொருட்கள் விற்கும் கடைகளிலும் இணையதளங்களிலும் கிடைக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...  

இந்த முறை நாம் விளையாடப்போவது காக்வொர்க்ஸ் (ரிஷீரீஷ்ஷீக்ஷீளீs). 'காக்’ (சிஷீரீ) என்றால், பல பற்கள்கொண்ட சக்கரம் என்று பொருள். வொர்க்ஸ் (ஷ்ஷீக்ஷீளீs) என்றால், வேலை. இந்த விளையாட்டுக்கு சக்கரங்களே முக்கியம்.

இந்த ஆட்டத்தை இரண்டு பேர் அல்லது இரண்டு குழுக்கள் மட்டுமே விளையாடலாம். எட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் விளையாடக்கூடிய இந்த ஆட்டம், உங்கள் மூளையைப் பல்சக்கரம் போல சுழலவைக்கும். இந்த விளையாட்டை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 'டாக்டர் வூட்ஸ்’ என்ற பிரபல விளையாட்டு நிறுவனம் உருவாக்கியது.

இந்த விளையாட்டை ஆடும் பலகை, முக்கோண வடிவில் இருக்கும். 18 சிவப்புச் சக்கரங்கள், 18 நீலச் சக்கரங்கள், ஒரு மஞ்சள் நிறச் சக்கரம் இருக்கும். முதல் நபர், நீல நிறத்தையும் மற்ற நபர் சிவப்பு நிறத்தையும் தேர்ந்தெடுக்க வேண்டும். சக்கரங்கள், பலகையில் பொருத்துவதற்கு ஏதுவாக இருக்கும்.

பர பர பல்சக்கர ஆட்டம் !

உங்களது ஆட்டத்தை ஒரு சக்கரத்தைக்கொண்டு பலகையின் ஒரு மூலையில் தொடங்க வேண்டும். அந்தச் சக்கரத்துக்கு 'பேஸ் வீல்’ என்று பெயர். மற்றவரும் அதுபோல அவர்களின் மூலையில் இருந்து தொடங்குவர். இந்த இரண்டு பேஸ் சக்கரங்களையும் மற்றொரு மூலையில் இருக்கும் மஞ்சள் நிற சக்கரத்தையும் ஆட்டத்தின் நடுவில் நகர்த்த முடியாது. புதிதாக ஒரு சக்கரத்தைப் பலகையில் வைக்காமல், ஏற்கெனவே இருக்கும் சக்கரத்தை இடம் மாற்றியும் வைக்கலாம். ஆனால், நீங்கள் தேர்ந்தெடுத்த நிற சக்கரத்தைத்தான் நகர்த்த முடியும். ஆட்டம் முடியும் வரை பேஸ் சக்கரங்கள் சுலபமாகச் சுழல வேண்டும். இல்லையென்றால், நீங்கள் தோற்றவராகிவிடுவீர்கள்.

இந்த விளையாட்டின்போது உங்களின் குறிக்கோள், பின்வரும் இரண்டில் ஒன்றாக இருக்க வேண்டும்.  

1. ஒவ்வொரு சக்கரமாகப் பொருத்தி, உங்களுடைய பேஸ் சக்கரத்துக்கும், மஞ்சள் நிற சக்கரத்துக்கும் சங்கிலித் தொடர் அமைப்பது.

2. மற்றவர் அமைக்கும் சங்கிலித் தொடருக்கு நீங்கள் தடங்கல் (தீறீஷீநீளீ) செய்வது. அந்தச் சக்கரத் தொடர், பேஸ் சக்கரம் முதல் மஞ்சள் நிற சக்கரம் வரை தடையில்லாமல் சுற்ற வேண்டும். அப்படிச் சுற்றினால், அவர்களே வெற்றிபெற்றவர். இல்லையென்றால், சக்கரங்களைச் சுழற்ற முடியாமல் தடுத்து நிறுத்தியவர் வென்றவராவர். நீங்கள் சங்கிலித் தொடர்

பர பர பல்சக்கர ஆட்டம் !

அமைக்கும்போது மற்றவரின் சக்கரத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பொதுவாக, ஒருவருக்கு இரண்டு சக்கரங்கள் இருந்தால், அவர்களுடைய இன்னொரு சக்கரத்தை அதன் அருகில் வைத்து பிளாக் செய்வார்கள். ஒருவர் உங்களை பிளாக் செய்துவிட்டால், நீங்கள் உங்களது ஒரு சக்கரத்தை மாற்றிப் பொருத்தி, தடங்கலில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். ஆனால், ஒரு சமயத்தில் நீங்கள் ஒரு சக்கரத்தை மட்டும்தான் நகர்த்த முடியும். இரண்டு தடங்கலை மற்றவர் உருவாக்கிவிட்டால், நீங்கள் தொடர்ந்து ஆட முடியாது.

கடைசி இரண்டு விதிகள். பேஸ் சக்கரத்தைச் சுற்றியோ,   மஞ்சள் நிற சக்கரத்தைச் சுற்றியோ, உங்களது இரண்டு சக்கரங்களை வைக்கக் கூடாது. மேலும் மூன்று சக்கரங்கள் சேர்ந்ததுபோல பலகையில் எங்குமே இருக்கக் கூடாது.

சற்றே கடினமான விளையாட்டு போல உள்ளதா? விளையாடிப் பாருங்கள். சுவாரஸ்யம் பற்றிக்கொள்ளும். அடுத்தமுறை உங்களுக்காக ஜாலியான விளையாட்டு காத்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism