Published:Updated:

`அரசின் ஆதரவு இல்லாமல் நிறைய பேர் வாய்ப்பை இழந்துட்டாங்க!'- கராத்தேவில் தங்கம் வென்ற தமிழகச் சிறுமி

சு.சூர்யா கோமதி

சுபஶ்ரீ சிங்கப்பூரில் நடந்த உலகளவிலான கராத்தே போட்டியில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டு இந்தியாவிற்காகத் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை குவித்துள்ளார்.

`அரசின் ஆதரவு இல்லாமல் நிறைய பேர் வாய்ப்பை இழந்துட்டாங்க!'- கராத்தேவில் தங்கம் வென்ற தமிழகச் சிறுமி
`அரசின் ஆதரவு இல்லாமல் நிறைய பேர் வாய்ப்பை இழந்துட்டாங்க!'- கராத்தேவில் தங்கம் வென்ற தமிழகச் சிறுமி

உலகக் கோப்பை கிரிக்கெட் ஒரு பக்கம் பரபரப்பாக இருக்கிறது. கிரிக்கெட்டுக்குக் கிடைக்கும் அங்கீகாரம்  மற்ற விளையாட்டுகளுக்குக் கிடைக்கவில்லை என்றாலும், மற்ற துறை விளையாட்டு வீரர்களும் வெவ்வேறு நாடுகளுக்குச் சென்று தங்கள் திறமைகளை நிரூபித்து இந்தியாவிற்காகப் பதக்கங்களை குவித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த 10 வயதுச் சிறுமி சுபஶ்ரீ சிங்கப்பூரில் நடந்த உலகளவிலான கராத்தே போட்டியில் இந்தியாவின் சார்பாக கலந்துகொண்டு இந்தியாவிற்காகத் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை குவித்துள்ளார். இது குறித்து சுபஶ்ரீயிடம் பேசினோம்.

`அரசின் ஆதரவு இல்லாமல் நிறைய பேர் வாய்ப்பை இழந்துட்டாங்க!'- கராத்தேவில் தங்கம் வென்ற தமிழகச் சிறுமி

``நான் சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிச்சிட்டு இருக்கேன். என்னோட ஐஞ்சு வயசில் மாஸ்டர் ராஜா கிட்ட கராத்தே கத்துக்க ஆரம்பிச்சேன். ஆரம்பத்தில் என்னோட பாதுகாப்புக்காகத்தான் அப்பா என்னைக் கராத்தேவில் சேர்த்துவிட்டாங்க. ஆனால் கராத்தே கத்துக்க ஆரம்பிச்ச சில நாள்கள்லேயே எனக்குக் கராத்தே ரொம்ப பிடிச்சு போச்சு. கராத்தேவில் நம்முடைய திறமையை `பெல்ட்' என்ற அளவால்தான் குறிப்பிடுவாங்க. வெள்ளை, ஊதா, பச்சை, பர்பிள், பிரவுன் - 3, பிரவுன் - 2, பிரவுன் - 1, பிளாக் என்ற நிலைகளைக் கடந்து பிளாக் பெல்ட் டேன் என்ற பெல்ட்தான் இப்போ என்னுடைய குறியீடு. பொதுவா இந்த நிலைக்கு வர ஏழு வருஷமாவது ஆகும். ஆனால் நான் சீக்கிரமா கத்துக்கிட்டேன். ஆரம்பத்தில் மாவட்ட , மாநில அளவிலான கராத்தே போட்டிகளில் தான் கலந்துக்க ஆரம்பிச்சேன். அதில் கிடைத்த வெற்றிகள் இந்தியாவிற்காக விளையாடும் வாய்ப்பினைக் கொடுத்துச்சு. இதுவரை இந்தியாவிற்காக 4 முறை  உலக அளவிலான கராத்தே போட்டிகளில் கலந்துகிட்டு பரிசுகள் வாங்கியிருக்கேன். கராத்தேவில் கட்டா என்ற பிரிவுதான் என்னுடைய ஸ்பெஷல். இந்த முறை தங்கம் வாங்கிட்டு வந்ததும் சி.எம் அங்கிளை போய் பார்த்தோம். இந்தியாவிற்காக இன்னும் நிறைய பரிசுகள் வாங்கணும்னு சொல்லி ஊக்கப்படுத்துனாங்க.  

`அரசின் ஆதரவு இல்லாமல் நிறைய பேர் வாய்ப்பை இழந்துட்டாங்க!'- கராத்தேவில் தங்கம் வென்ற தமிழகச் சிறுமி

இந்தியாவிற்காக விளையாடுறது பெருமையா இருந்தாலும், அரசாங்கத்திலிருந்து எந்த சப்போர்ட்டும் கிடைக்கிறது இல்ல அக்கா. என் ஃப்ரண்ட்ஸ் நிறைய பேர் போதிய வசதி இல்லாமல் தேசிய அளவிலான வாய்ப்புகளைக் கூட இழந்துருக்காங்க. எங்களையும் தேசிய அளவிலான வீரர்களாக நினைத்து உதவி பண்ணா இன்னும் நிறைய பேர் இந்தியாவின் சார்பாகப் போட்டிட்டு தங்கம் வெல்ல தயாராக இருக்காங்க" என்று எதிர்பார்ப்புடன் முடிக்கிறார் சுபஶ்ரீ.

Vikatan