கட்டுரைகள்
சுட்டி ஸ்டார் நியூஸ்!
புதிர் பக்கங்கள்
Published:Updated:

கோப்பைகளின் கதைகள்

கோப்பைகளின் கதைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
கோப்பைகளின் கதைகள்

கோப்பைகளின் கதைகள்

கிரிக்கெட் உலகக்கோப்பை உற்சாகமாக ஆரம்பித்தாயிற்று. 1983, 2011 ஆண்டுகள் போல 2019 ஆம் ஆண்டு  உலகக்கோப்பையை  இந்தியா வெல்லும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் ரசிகர்கள். வெற்றி உற்சாகத்துடன் வீரர்கள் கையில் ஏந்தும் அந்தக் கோப்பையைப் பார்க்கையில், நாமே, நம் கைகளில் ஏந்துவது போன்ற உணர்வு ஏற்படும்.

கோப்பைகளின் கதைகள்

கிரிக்கெட் உலகக்கோப்பை தொடங்கப்பட்ட 1975 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை ஸ்பான்சர்கள் மாறியுள்ளனர். எனவே, ஒவ்வோர் உலகக்கோப்பையின் போதும் அந்தந்த ஸ்பான்சர்களின் பெயரிலேயே  உலகக்கோப்பை தொடர்கள் நடத்தப்பட்டன.

அந்தக் கோப்பைகள் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களைப் பார்ப்போம்.

ப்ருடென்ஷியல் கோப்பை (1975 - 79 - 83)

லண்டனை மையமாகக் கொண்ட ப்ருடென்ஷியல் நிதி நிறுவனம் முதல் மூன்று உலகக்கோப்பைக்கான ஸ்பான்சராக இருந்ததால், 1975, 1979, 1983 பதிப்புகள் ப்ருடென்ஷியல் கோப்பை என்றே அழைக்கப்பட்டது. மற்ற உலகக்கோப்பைகளுடன் ஒப்பிடும்போது, ப்ருடென்ஷியல் கோப்பை மிகவும் பெரிதாகவும், கோப்பையின் இரு பக்கங்களிலும் கைப்பிடியுடனும் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த வெள்ளி உலகக்கோப்பை 47 செ.மீ உயரமும், 2.5 கிலோ எடையும் கொண்டது.

கோப்பைகளின் கதைகள்

இங்கிலாந்தில் நடைபெற்ற முதல் இரண்டு உலகக்கோப்பை தொடர்களையும் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றது. 1983 இறுதிப் போட்டியில், வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி  இந்திய அணி சாம்பியனானது.

ரிலையன்ஸ் உலகக்கோப்பை (1987)

கோப்பைகளின் கதைகள்

1987 ஆம் ஆண்டு உலகக்கோப்பையின் ஸ்பான்சராக இந்திய தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இருந்தது. இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடந்த இந்தத் தொடரில், ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது.  தங்கம் பூசப்பட்ட முதல் கோப்பை இதுவே. கோப்பையின் உச்சியில் வைரக்கல்லும், தொடரில் பங்கேற்ற நாடுகளின் தேசியக்கொடிகளின் டிசைன்களும் பதிக்கப்பட்டன.

பென்சன் அண்டு ஹெட்ஜஸ் உலகக்கோப்பை (1992)

கோப்பைகளின் கதைகள்

1992 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பையை, பிரிட்டனின் ‘பென்சன் அண்டு ஹெட்ஜஸ்’ நிறுவனம் ஸ்பான்சர் செய்தது. மாறுபட்ட தோற்றத்தில் வெள்ளை நிற கிரிஸ்டலால் உருவாக்கப்பட்டது. தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள் அற்ற ஒரே உலகக்கோப்பை இது. இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி, பாகிஸ்தான் அணி, கோப்பையைத் தட்டிச்சென்றது.

வில்ஸ் உலகக்கோப்பை (1996)

கோப்பைகளின் கதைகள்

வில்ஸ் நிறுவனம் ஸ்பான்சர் செய்த இந்தக் கோப்பையை இலங்கை அணி வென்றது. நுணுக்கமான கலை வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்ட இதிலும்  பங்கேற்ற நாடுகளின் தேசியக்கொடிகள் பொறிக்கப்பட்டன. கிரிக்கெட் பேட்டை வைத்திருக்கும் பேட்ஸ்மேனின் மாதிரி உருவம், கோப்பையின் உச்சியில் பதிக்கப்பட்டிருக்கும். ஸ்பான்சர்களின் பெயர்கொண்ட கடைசி கோப்பை இது.

ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை (1999 முதல்)

1999-ம் ஆண்டு முதல், சர்வதேச கிரிக்கெட் ஆணையத்தால் நடத்தப்படும் கிரிக்கெட் உலகக்கோப்பை, ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை என்றே அழைக்கப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி கலந்து வடிவமைக்கப்படும்  இந்த உலகக்கோப்பை 60 செ.மீ உயரமும் 11 கிலோ எடையும்கொண்டது. பட்டையான மூன்று கோடுகள் கிரிக்கெட் ஸ்டம்ப்ஸையும், தங்கத்தால் பூசப்பட்ட க்ளோப் கிரிக்கெட் பந்தையும் குறிக்கிறது. கோப்பையின் அடிப்பாகத்தில், முந்தைய பதிப்புகளில் வெற்றிபெற்ற அணிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கும். லண்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற கராட் அண்டு கோ நிறுவனம், இரண்டே மாதங்களில் ஐசிசி உலகக்கோப்பையை வடிவமைத்துக் கொடுத்தது.

கோப்பைகளின் கதைகள்

சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு, ஐசிசியின் நிஜ கோப்பையைப் போன்று வடிவமைக்கப்படும் மாதிரி கோப்பையே வழங்கப்படுகிறது. சாம்பியனான அணிக்குக் கொடுக்கப்படும் கோப்பையில், முந்தைய பதிப்புகளில் வெற்றிபெற்ற அணிகளின் பெயர்கள் பொறிக்கப்படுவதில்லை.

கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்றுவர வாழ்த்துவோம்!

-கார்த்திகா ராஜேந்திரன்