கட்டுரைகள்
புதிர் பக்கங்கள்
Published:Updated:

கைப்பந்து

கைப்பந்து
பிரீமியம் ஸ்டோரி
News
கைப்பந்து

சஞ்சனா

கைப்பந்து

டலுக்கு வலிமை தரும் விளையாட்டுகளில் கைப்பந்தும் ஒன்று. அந்த விளையாட்டு உருவான வரலாறு அறிவோம்!

1895ஆம் ஆண்டில் உருவான விளையாட்டு, கைப்பந்தாட்டம்  (Volleyball).

கைப்பந்து விளையாட்டின் தந்தை, வில்லியம் ஜி மார்கன் (William G. Morgan). இவர், YMCA-வின் உடற்கல்வி இயக்குநர்.

1934-ல் இதற்கென்ற நடுவர்கள் அங்கிகரிக்கப்பட்டனர். 1951-ல் 60 நாடுகளில் 5 கோடி பேர் விளையாடினர்.

1900-இல் இதற்கென்றே சிறப்புப் பந்து உருவானது. 198பில் மகளிருக்கான சிறப்புச் சங்கம் உருவானது.

உலக மக்கள் தொகையில் வாரத்தில் ஒருமுறை வாலிபால் விளையாடுவோர் எண்ணிக்கை 80 கோடிக்கும் அதிகம் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

கைப்பந்து

1916-இல் ‘செட் அண்டு ஸ்பைக்’ முறை, பிலிப்பைன்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டது.

9 இன்னிங்ஸ், ஒரு இன்னிங்ஸில் 3 முறை வெளியேறுவது, எவ்வளவு ஹிட்டும் அடிக்கலாம், என்பவைதாம் ஆரம்ப கால விதிமுறைகள்.

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தின் ஸ்பிரிங் ஃபீல்ட் கல்லூரியில் 1896 ஜூலை 27-ல், முதல் போட்டி நடைபெற்றது.

அமெரிக்காவில் இதற்கென்றே ஒரு தனிச் சங்கம் 1928-இல் உருவானது. இதுவே விதிகளை வகுத்து போட்டிகளை நடத்தியது.

மின்டோனெட் (Mintonette)என்பதுதான் ஆரம்பப் பெயர். வலையின் இருபுறமும் சரமாரியாக பந்து அடிக்கப்படுவதால், ‘வாலிபால்’என்றானது.

கைப்பந்து

1957-இல் ஒலிம்பிக்குக்கு அங்கீகரிக்கப்பட்டு, 1964-இல் டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டில் முதல் போட்டி நடந்தது.

தேசிய அளவில் YMCA சாம்பியன் ஷிப் போட்டி நியூயார்க் நகரில் 1922ஆம் ஆண்டு நடந்தது. 27 அணிகள் கலந்துகொண்டன.

பள்ளி/கல்லூரிகளில் உடற்பயிற்சிக் கல்வியில் 1917-ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது.