காமன்வெல்த் போட்டியில் பதினைந்து வயது அனிஷ் பன்வாலா தங்கம் வென்று தேசத்தின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பியுள்ளார்.

25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்று `மிக இளம் வயதில் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற இந்தியர்’ என்ற பெருமையைப் பெற்றுள்ள அனீஷ், ஹரியானா மாநிலம் சோனிபட்டில் பிறந்தவர். ஐந்து விளையாட்டுகளை உள்ளடக்கிய பென்டத்லான் போட்டிகளில் 10 வயதிலிருந்தே இந்தியாவுக்காக அண்டர் 12 போட்டிகளில் பங்கேற்றுவந்தார் அனிஷ். அந்த ஐந்து விளையாட்டுகளில் ஷூட்டிங் மிகவும் பிடித்துப்போக, அதையே தன் சாய்ஸாக மாற்றிக்கொண்டார்.

அவரது பெற்றோர் தங்கள் மகனின் ஆசையை நிறைவேற்றுவதில் தீவிரமாக இருந்தனர். துப்பாக்கி வாங்கித் தருவதிலிருந்து, துப்பாக்கிப் பயிற்சிக்காக டெல்லிக்குக் குடியேறுவது வரை தங்களால் முடிந்த அனைத்துப் பங்களிப்புகளையும் செய்தனர். அதற்குப் பலனாக, அவர்களுக்கும் பெருமை சேர்த்துவிட்டார் அனிஷ்.

துப்பாக்கிச் சுடுதலில் மட்டுமே கவனம் செலுத்தாமல் படிப்புக்கும் சம முக்கியத்துவம் கொடுக்கிறார் இவர். காமன்வெல் போட்டியில் பங்கேற்பதற்காக இவரின் தேர்வுகளைத் தள்ளிவைத்திருக்கிறது சி.பி.எஸ்.இ. ஆனாலும், கோல்டு கோஸ்ட் நகருக்குக் கிளம்பும்போது தன் டிராவல் பேகில் புத்தகங்களையும் எடுத்துச் சென்றிருக்கிறார். அந்த அளவுக்கு அனிஷ் சின்ஸியர்!

பொதுவாகவே, பர்ஃபெக்ஷன் உச்சத்தில் இருக்க வேண்டிய இந்தப் போட்டியில், 15 வயது அனிஷ் காட்டியது இன்னும் அசாத்திய முதிர்ச்சி. இதேபோல் எதிர்காலத்தில் இவர் மேலும் பல வெற்றிகளைக் குவிக்கப்போவது நிச்சயம்.