தமிழர்களின் உயிர் நாடியாக விளங்கும் நாட்டுப்புறக் கலைகளில் இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆகாஷ் அதிரடி ஆட்டமாடி அசத்துகிறார்... நாகநாதபுரம் டி.டி.விநாயகர் மேல்நிலைப் பள்ளியில் எஸ்.ஆகாஷ் 13, எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

ஆகாஷின் அப்பா லோக சுப்பிரமணியன் ஜவஹர் மன்றத்தில் திட்ட அலுவலராக வேலை பார்க்கிறார். இவர் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் கிராமியக் கலைநிகழ்ச்சிகளுக்கு அவ்வப்போது தனது மகனையும் அழைத்துச் செல்வார்... அங்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்று ஆடுவதைப் பார்த்ததும் ஆகாஷுக்கும் இக்கலைகள்மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அதைப் புரிந்து கொண்ட ஆகாஷின் அப்பா அவரை அந்தந்தக் கலைகளில் சிறந்து விளங்குகின்ற கலைஞர்களிடம் ஆகாஷையும் சேர்த்து விட்டுருக்கிறார்.

ஐந்து வயதிலிருந்து ஆடத்தொடங்கிய ஆகாஷுக்கு ஆர்வம், ஈடுபாடு, மூத்த கலைஞர்களின் அறிவுரைகள் என கிடைத்து, கடந்த எட்டு வருடத்தில் இராமநாதபுர மாவட்டத்தின் ‘`ஆட்ட நாயகனாக’’ வலம் வர உதவியிருக்கிறது.

“பொய்க்கால்குதிரை, கட்டக்காலுடன் கரகம், சிலம்பம், கட்டக்காலுடன் சக்கரம் சுற்றுவது, இதைத்தவிர கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பம், பறை, சுருள்வாள், ரெட்டை கம்பு, சக்கரத் தீப்பந்தம், ஸ்டார் பந்தம், போன்ற கலைகளில் தொடர்ந்து ஒவ்வொன்றிலும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆடும் திறமை படைத்தவர் ஆகாஷ்!

ஆகாஷின் அப்பாவே சிறந்த கிராமப்புறக் கலைஞர் என்பதால் அவர்தான் ஆகாஷுக்குப் ‘பயிற்சியாளர்’ மற்றும் `ரோல் மாடல்.’

ஆகாஷ் மாவட்ட அளவில் 10, மாநிலத்தில் 20 தேசிய அளவில் 2 விருதுகள் உள்பட, ஷீல்டுகள், பரிசுக் கோப்பைகள், சான்றிதழ்கள் என் வீட்டின் வரவேற்பறையை நிரப்பி வைத்திருக்கிறார்.

2015-ல் தேசியக் குழந்தைகள் தின விழாவில் கலந்து கொண்டு தனது திறமைகளை வெளிப்படுத்தியதற்காக மத்திய அமைச்சர் ஸ்மிருதிராணி அவர்களிடமிருந்து சிறந்த சிலம்பாட்டக் கலைஞருக்கான சான்றிதழ் பெற்றுள்ளார்.

2015-2016 ஆண்டுக்கான மாவட்டக் கலைப்பண்பாட்டுத்துறை சார்பாக ‘கலை இளமணி’ விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

ஆகாஷ் படிப்பிலும் கெட்டிதான். படித்துப் பெரியவனானதும் இராணுவத்தில் பணி புரிய வேண்டும் என்பது இலட்சியம்.

இன்னும் ஆகாஷ் பற்றிச் சொல்ல நிறைய இருக்கிறது... ஆனால், ஆகாஷ் ஏதோ சொல்ல வருகிறார் என்னன்னு கேட்போமா?

“நம்முடைய நாட்டுப்புறக்கலைகள் பற்றிய விழிப்பு உணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்... தமிழரின் கலைகளை எல்லோருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். இதுபோன்ற கலைகளை மக்களும் ஊக்குவிக்க வேண்டும்... தமிழர்களின் கலைகள் வளர்ச்சியடைவதற்குத் தமிழர்களாகிய நாம் எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும்.” என்கிறார்.