நாகை மாவட்டம், சீர்காழியில் உக்கடை என்னும் சிறிய கிராமத்திலிருந்து பல கஷ்டங்களுக்கு மத்தியில் எதிர்நீச்சல் போட்டு ஒலிம்பிக் வீரராக உருவாகிக்கொண்டிருக்கிறார் ஆர்.சி.கணேஷ்.

சீர்காழியில் உள்ள விவேகானந்தா தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் கணேஷ், சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற 17- வயதுக்குட்பட்டோருக்கான ஒலிம்பிக் போட்டியில் தடகளப் பிரிவில், தொடர் ஓட்டத்தில் 3-ம் இடமும் 200 மீட்டரில் 4-ம் இடமும் பிடித்துச் சாதித்துள்ளார். அவரைச் சந்தித்துப் பேசினோம்,

"என்னோட சொந்த ஊரு உக்கடை. அங்கு சரியான பேருந்து வசதி இல்லாததால கிராமத்துல இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊரில் தங்கியிருக்கோம். நான் 6-ம் வகுப்பு படிக்கும்போது டி.வி-யில ஒலிம்பிக் போட்டியைப் பார்த்தேன். அதில், ஓட்டப்பந்தயத்தில ஜெயிச்ச வீரர்கள் எல்லாம் ரொம்ப மகிழ்ச்சியா அவங்களோட வெற்றிய கொண்டாடுனாங்க. பிறகுதான் ஒலிம்பிக் போட்டிகள் பற்றித் தெரிந்துகொண்டேன். அதிலிருந்து நானும் ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்துல சாதிக்கணும் என்கிற எண்ணம் வந்தது. எங்க பள்ளியில ஒவ்வொரு வருடமும் விளையாட்டு தினத்தன்று போட்டிகள் நடத்தி விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்வாங்க. நான் 6-ம் வகுப்புல இருந்து முயற்சி செய்தேன். ஆனா, 8-ம் வகுப்பில்தான் தேர்வாக முடிந்தது. அந்த வருடம்தான் சிவக்குமார் சார் இந்தப் பள்ளிக்குத் தடகளப் பிரிவு பயிற்சியாளராக வந்தார். அதுக்குப் பிறகு நான் மாவட்டப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற ஆரம்பிச்சேன். அப்படியே கொஞ்சங் கொஞ்சமா மாநிலப் போட்டிகள்ல கலந்துகிட்டு வெற்றி பெற்றதால எனக்கு இளைஞர் ஒலிம்பிக்ல விளையாடுற வாய்ப்புக் கிடைத்தது. ஆரம்பத்தில், நான் கலந்துக்கிற ஒவ்வொரு போட்டியிலேயும் என்னோட சக போட்டியாளர்களப் பார்த்தா எனக்குப் பயமா இருக்கும். அப்படிப் பயந்த எந்தப் போட்டிலேயுமே நான் ஜெயிச்சது இல்ல. அப்போ என்னேட அப்பா, `நீ போட்டியில ஜெயிக்கிறது முக்கியம் இல்ல. வெற்றிக்காக உன்னோட சிறந்த முயற்சியக் கொடுத்தாமட்டும் போதும்னு’ சொன்னாரு. அதுக்குப் பின்பு நடந்த ஒரு போட்டியில நான் என்னோட சக போட்டியாளர் யாரையுமே கவனிக்கலை. என்னோட சிறந்த முயற்சியை வெளிப்படுத்தணும் என்கிற எண்ணம் மட்டும்தான் இருந்தது. அத மனசுல வெச்சு ஓடி முதல் பரிசு வாங்குனேன். இதுல ஜெயிச்ச பிறகுதான் என் சக போட்டியாளர்களைப் பார்த்தேன். எல்லாரும் என்னை விட வயசுலேயும், உடல் பலத்திலேயும் பெரியவங்க. அப்போதான் எனக்கு புரிஞ்சுது, ‘பயம்தான் சாதிக்கிறதுக்குத் தடையா இருக்கிற முதல் எதிரினு.’ அதுக்குப் பிறகு எந்தப் போட்டிக்கும் நான் பயப்படுறதில்ல.

ஒரு நாளைக்குக் குறைஞ்சது 2 மணி நேரம் பயிற்சி செய்வேன். பயிற்சி முடிந்து வீட்டுக்குப்போக இரவு 9 மணியாகிடும். அதன் பிறகு பள்ளிப் பாடங்களை முடித்துவிட்டுத் தூங்கப் போறப்போ 12 மணியாகிடும். ஆனாலும் காலையில 5 மணிக்கெல்லாம் அலாரம் வைத்து எழுந்துடுவேன். போட்டிகளுக்குப் போற நாள்களில் பயிற்சி நேரம் குறைவா இருக்கும். அதனால போட்டிக்குப் போறதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே முறையா பயிற்சி செய்துடுவேன்.

என் பெற்றோர், என் பள்ளி நிர்வாகம், பயிற்சியாளர் சிவக்குமார் சார் இவங்க வழிகாட்டல் இல்லாம இந்த வெற்றி சாத்தியமில்ல. அதேபோல என்னை எப்பவும் ஊக்கப்படுத்துற நண்பர்களுக்கும், என் வெற்றியில் பங்கு இருக்கு’’ என்றார்.

கணேஷின் சாதனை பற்றி அவருடைய பயிற்சியாளர் சிவக்குமாரிடம் கேட்ட போது, ‘‘கணேஷ் படிப்பு, விளையாட்டு இரண்டிலுமே சிறப்பா செயல்படுறான். 10-ம் வகுப்புல நிறைய மாவட்ட, மாநிலப் போட்டிகள்ல கலந்துகிட்டு ஜெயிச்சான். அதே நேரத்தில பொதுத் தேர்விலும் 470 மதிப்பெண் வாங்கினான். அவன் பயிற்சி செய்றப்போ இவ்ளோ மீட்டர் தூரத்தை இவ்ளோ நேரத்துல கடக்கணும்னு ஒரு இலக்கு கொடுத்தேனா அந்த நேரத்தை விட 1 மைக்ரே விநாடியாவது குறைவா கடந்துட்டு வந்தாதான் அவனுக்குத் திருப்தியா இருக்கும். ஓட்டப்பந்தய வேகத்தில் கணேஷின் தற்போதைய பதிவு 100 மீட்டரில் 11.2 விநாடியும், 200 மீட்டரில் 22.38 விநாடியும். இந்த நேரத்தைக் குறைக்கத் தற்போது பயிற்சி கொடுத்து வருகிறோம்’ என்றார்.

ஓட்டப்பந்தய வேகத்தில் உசேன்போல்டின் பதிவை முறியடிக்க வேண்டும் என்கிற கணேஷுக்கு உசேன் போல்ட்தான் ரோல் மாடலாம். ‘‘வரும் காலங்களில் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்று இந்தியாவுக்குத் தங்கப் பதக்கங்களை அள்ளி வர வேண்டும் எனும்’’ இந்த உக்கடை உசேன்போல்டுக்கு வாழ்த்துகள் கூறிவிட்டுக் கிளம்பினோம்.

-மா.அருந்ததி

படங்கள்:செ.ராபர்ட்