தமிழ் கேப்டன்கள்!

2018 ஐ.பி.எல் தொடருக்கான `கிங்ஸ் லெவன் பஞ்சாப்’ அணியின் கேப்டனாகத் தமிழக பௌலர் ரவிச்சந்திரன் அஷ்வின் தேர்வுசெய்யப் பட்டுள்ளார். அதேபோல, கொல்கத்தா நைட்ரைடர்ஸ்’ அணியின் கேப்டனாகத் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை எந்தத் தமிழக வீரரும் கேப்டனாகச் செயல்பட்டிராத நிலையில், இந்த சீசனில் இரண்டு அணிகளைத் தமிழர்கள் வழிநடத்தவுள்ளனர்.

டிராவிட்-டின் பெருந்தன்மை!

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்றதற்காக, இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு 50 லட்சமும் மற்ற பயிற்சியாளர்களுக்கு 20 லட்சமும் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டது. “அனைவருக்கும் இந்த வெற்றியில் சம பங்குண்டு. அதனால், அனைவருக்கும் சமமான தொகை வழங்கவேண்டும்” என்று கூறி 50 லட்சத்தை வாங்க மறுத்தார். அதை ஏற்றுக்கொண்ட பி.சி.சி.ஐ, அனைத்துப் பயிற்சியாளர்களுக்கும் ரூபாய் 25 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கியது.

ஃபெடரேஷன் கோப்பை!

22-வது ஃபெடரேஷன் கோப்பை தடகளப் போட்டிகள் பாட்டியாலாவில் உள்ள தேசிய விளையாட்டு ஆணையத்தில் நடந்துவருகிறது. ஆண்கள் 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீரர் லக்ஷ்மணன் முதலிடம் பிடித்தார். பெண்கள் 5,000 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை சூர்யா முதலாவதாக வந்தார். போல்ட் வால்டில், தமிழக வீரர் சிவா 5.15 மீட்டர் உயரம் தாண்டி தேசியச் சாதனையுடன் முதலிடம் பிடித்து அசத்தினார்.

சிறந்த வீரர்

2017-ம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை, டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் ஃபெடரர் வென்றார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓப்பன் மற்றும் விம்பிள்டன் பட்டங்களை வென்ற ஃபெடரர், ‘சிறந்த கம்பேக் பிளேயர்’ விருதையும் வென்றார். ஆண்டுதோறும் விளையாட்டு உலகில் சிறந்த செயல்பாடுகளுக்குக் கொடுக்கப்படும் இந்த லாரியஸ் விருது விழாவில், சிறந்த வீராங்கனைக்கான விருதை செரீனா வில்லியம்ஸுக்கும் ஃபார்முலா 1 கார் பந்தய அணிக்கான விருதை மெர்சிடஸ் நிறுவனத்துக்கும் அளிக்கப்பட்டது.

ஐந்தாவது பட்டம்!

லீக் கப் எனப்படும் கரபாவோ கோப்பை கால்பந்து தொடரை மான்செஸ்டர் சிட்டி அணி வென்றுள்ளது. மான்செஸ்டர் சிட்டி, அர்சனல் அணிகளுக்கு இடையே நடந்த இறுதிப்போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது. மான்செஸ்டர் சிட்டி அணி வென்ற ஐந்தாவது லீக் கோப்பை பட்டம் இது. பயிற்சியாளர் பெப் கார்டியாலோ தலைமையில் வெல்லும் முதல் பட்டம் இதுதான்.

எழுத்தாளரான விளையாட்டு வீரர்்!

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் கூடைப் பந்தாட்ட வீரரான கோபே ப்ரயன்ட், விளையாட்டுத் திடலைத் தாண்டித் திரையிலும் சாதித்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்குமுன் ஓய்வுபெற்ற ப்ரயன்ட் ‘டியர் பேஸ்கட்பால்’ என்ற அனிமேஷன் குறும்படத்தை எழுதினார். அந்தப் படம் 90-வது ஆஸ்கர் விருது விழாவில், சிறந்த அனிமேஷன் குறும்படமாகத் தேர்வானது. அந்தப் படத்தின் இயக்குநர் க்லென் கீன் மற்றும் அதை எழுதிய ப்ரயன்ட் இருவருக்கும் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

தெரியுமா?

ஆல் பட்ரஸ் பறவை ஒருமுறைகூடச் சிறகைப் படபடவென அடிக்காமல் நாள் முழுவதும் பறக்கும்.