சுட்டி ஸ்டார் நியூஸ்!
பொது அறிவு
புதிர் பக்கங்கள்
Published:Updated:

விளையாட்டு

விளையாட்டு
பிரீமியம் ஸ்டோரி
News
விளையாட்டு

மு.பிரதீப் கிருஷ்ணா

விளையாட்டு

சில்வர் சிந்து!

விளையாட்டுடெ
ல்லியில் நடந்த இந்தியன் ஓப்பன் பேட்மின்டன் போட்டியில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். அமெரிக்க வீராங்கனை ஜங் பெய்வன் - சிந்து இடையிலான இறுதிப் போட்டியில், 18-21, 21-11, 20-22  எனச் சிந்து போராடித் தோல்வியடைந்தார். முன்னணி வீராங்கனைகள் சாய்னா நேவால், கரோலினா மரின் இருவரும் காலிறுதியோடு வெளியேறினர். ஆண்கள் பிரிவில் சீனாவின் ஷி யூகி சாம்பியன் பட்டம் வென்றார்.

விளையாட்டு

வெல்டன் ஜூலன்!

விளையாட்டுகளிர் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீராங்கனை என்ற சிறப்பை இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமி பெற்றார். கிம்பர்லி டைமண்டு ஓவல் மைதானத்தில் நடந்த தென்னாப்பிரிக்க அணிக் எதிரான ஒருநாள் போட்டியில் அவர் இந்தச் சாதனையைப் படைத்தார். 35 வயதான கோஸ்வாமி 16 வருடங்களாக இந்திய அணிக்காக விளையாடிவருகிறார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்கும் ‘ஆண்டின் சிறந்த வீராங்கனை’ விருதை முதன்முதலில் பெற்றவரும் இவரே!

விளையாட்டு

சாதனை ஃபெடரர்!

விளையாட்டுஸ்திரேலியன் ஓப்பன் கிராண்டு ஸ்லாம் (2018) போட்டியை வென்று சாதனை படைத்துள்ளார் ரோஜர் ஃபெடரர். இதன்மூலம் ஆண்கள் பிரிவில் 20 கிராண்டு ஸ்லாம் பட்டங்கள் வென்ற முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். 36 வயதான ரோஜர் ஃபெடரர் வெல்லும் 6-வது ஆஸ்திரேலிய ஓப்பன் பட்டம் இது. இது தவிர்த்து அவர் 8 முறை விம்பிள்டன், 5 முறை அமெரிக்க ஓப்பன் பட்டங்களையும் ஒரு ஃப்ரெஞ்சு ஓப்பன் பட்டத்தையும் வென்றுள்ளார்.

விளையாட்டு

சூப்பர் டோனி!

விளையாட்டுருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பராக 400 பேரை ஆட்டமிழக்கச் செய்து சாதனை படைத்துள்ளார் மகேந்திர சிங் தோனி. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் டேவிட் மில்லரை ஸ்டம்பிங் செய்து, இந்தச் சிறப்பைப் பெற்றார் தோனி. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 400 பேரை ஆட்டமிழக்கச் செய்த நான்காவது விக்கெட் கீப்பர் தோனிதான். இலங்கையின் குமார் சங்கக்காரா 482 பேரை அவுட்டாக்கி முதலிடம் வகிக்கிறார்.

விளையாட்டு

ISL அப்டேட்!

பெ
ங்களூரு எஃப்.சி அணியுடன் நடந்த ஐ.எஸ்.எல் போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் சென்னையின் எஃப்.சி தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டியில் பெற்ற வெற்றியின்மூலம், பெங்களூரு அணி 30 புள்ளிகளுக்கு முன்னேறியது. பிப்ரவரி 7-ம் தேதி நிலவரப்படி, புள்ளிப்பட்டியலில் பெங்களூரு அணி முதலிடத்தில் இருக்கிறது. புனே சிட்டி அணி இரண்டாம் இடத்திலும், சென்னையின் எஃப்.சி அணி மூன்றாவது இடத்திலும் நீடிக்கின்றன. 22 புள்ளிகள் பெற்றுள்ள ஜாம்ஷெட்பூர் எஃப்.சி அணி  நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

விளையாட்டு

மிரட்டல் விராட்!

விளையாட்டுகே
ப்டவுன் நகரில் நடந்த இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான 3-வது ஒருநாள் போட்டியில் சதமடித்ததன் மூலம், கேப்டனாக ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் விராட் கோலி. இதற்கு முன்பு கேப்டனாக சௌரவ் கங்குலி 11 சதங்கள்(கோலி 12)அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. இது ஒருநாள் போட்டியில் கோலி அடிக்கும் 34-வது சதம். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 55-வது சதம்.

விளையாட்டு

தெரியுமா?

ஒலிம்பிக் போட்டிகளில், ஓட்டப்பந்தய வீரர்      உசேன் போல்ட் 8   தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.