Published:Updated:

விளையாட்டு

விளையாட்டு
பிரீமியம் ஸ்டோரி
News
விளையாட்டு

மு.பிரதீப் கிருஷ்ணா

விளையாட்டு

சாதனை சாய்னா!

விளையாட்டு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz


தேசிய சீனியர் பேட்மின்ட்டன் தொடரில், பி.வி.சிந்துவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார், சாய்னா நேவால். இந்தியாவுக்காக ஒலிம்பிக் பதக்கம் வென்ற இரு வீராங்கனைகளும்  விளையாடிய இந்தப் போட்டி, மிகவும் சவாலானது. இரு வீராங்கனைகளும் புள்ளிகளுக்காகக் கடுமையாகப் போராட, ஆட்டம் இழுபறியாகச் சென்றது. இறுதியில் 21-17, 27-25 என்ற செட் கணக்கில் சாய்னா வெற்றிபெற்றார். சர்வதேச பேட்மின்ட்டன் தர வரிசையில் சிந்து இரண்டாவது இடத்திலும், சாய்னா 11-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

விளையாட்டு

மிரட்டல் மிட்சல்...

ஒரே போட்டியில் இரண்டு ஹாட்ரிக் வீழ்த்தி அசத்தியுள்ளார், ஆஸ்திரேலிய பௌலர் மிட்சல் ஸ்டார்க். ஆஸ்திரேலியாவின் உள்ளூர்ப் போட்டியில்  நியூ சௌத் வேல்ஸ் அணிக்காக விளையாடிவரும் அவர், வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஹாட்ரிக் விக்கெட்டைக் கைப்பற்றினார். முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் இந்தச் சாதனையைச் செய்யும் எட்டாவது வீரர் இவர். இங்கிலாந்துடனான ஆஷஸ் தொடரில், ஆஸ்திரேலிய அணியின் பவர்ஃபுல் வெப்பன் இவர்தான்.

விளையாட்டு

வெயிட் குறைத்தார்... வெற்றி பெற்றார்!

விளையாட்டு



ஆசியப் பெண்கள் குத்துச்சண்டைப் போட்டியில், 48 கிலோ எடைப் பிரிவில் ஐந்தாவது முறையாகத் தங்கம் வென்று அசத்தியுள்ளார் இந்தியாவின் மேரி கோம். கடந்த ஐந்து ஆண்டுகளாக வேறு எடைப் பிரிவில் பங்கேற்றதால் அவரால் பெரிதாகச் சாதிக்க முடியவில்லை.

2016 ரியோ ஒலிம்பிக் போட்டிக்கும் அவரால் தகுதிபெற முடியவில்லை. எனவே, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு  உடல் எடையைக் குறைத்து, மீண்டும் 48 கிலோ எடைப் பிரிவுக்கே மாறினார். இது அவரது ராசியான பிரிவு. அதனால்தான் மீண்டும் இந்த ஆசிய சாம்பியன்ஷிப்பில் சாதிக்க முடிந்தது.

விளையாட்டு

பௌலிங் நாயகன் பும்ரா!

நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி-20 தொடரையும் வென்று வீரநடைபோடுகிறது, கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. மூன்று போட்டிகள்கொண்ட தொடரை இந்தியா 2-1 என வென்றது. இந்தத் தொடரில்,  10 ஓவர்களில் 69 ரன்கள் மட்டுமே கொடுத்து, மூன்று விக்கெட்களை வீழ்த்திய இந்திய இளம் பௌலர் ஜாஸ்ப்ரித் பும்ரா, தொடர் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வெஸ்ட் இண்டீஸுடனான டி20 தொடரை இழந்தபிறகு, தொடர்ந்து ஏழு தொடர்களில் தோற்காமல் இருக்கிறது இந்திய அணி. நியூஸிலாந்துக்கு எதிராக இதற்கு முன் நடந்த ஒருநாள் தொடரையும் இந்தியா 2-1 என வென்றிருந்தது.

விளையாட்டு

வெல்கம் திரிஷா!

எட்டு வயதிலேயே 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஹைதராபாத் கிரிக்கெட் டீமில் தேர்வானார் திரிஷா, களத்தில் இறங்கிவிட்டால் சீனியர்களே திணறுவார்கள். பேட்டிங், சுழற்பந்துவீச்சு எனப் பின்னி பெடல் எடுப்பார். கேரள அணிக்கு எதிராக விளையாடிபோது, 10 ஓவர் வீசி 9 ரன்கள் மட்டுமே கொடுத்து, 3 விக்கெட்களை வீழ்த்தியவர். படிப்பிலும் ஸ்மார்ட் திரிஷா. விளையாட்டுப் போட்டிகளுக்காக விடுமுறை எடுக்கும்போதெல்லாம், அவர் படிக்கும் ஸ்ரீ சைதன்யா ஸ்கூல் சப்போர்ட்டாக இருப்பதாகச் சொல்கிறார் திரிஷா. இந்தியப் பெண்கள் கிரிக்கெட் டீமுக்கு அடுத்த மித்தாலி ராஜ் ரெடி.

-ஆ.சாந்தி கணேஷ்

விளையாட்டு

தெரியுமா?

ஐந்து வளையங்கள் கொண்ட ஒலிம்பிக் சின்னம் உருவாக்கப்பட்ட ஆண்டு 1913.