Published:Updated:

“நகைச்சுவை இல்லையென்றால் உலகமே இல்லை!”

“நகைச்சுவை இல்லையென்றால் உலகமே இல்லை!”
பிரீமியம் ஸ்டோரி
“நகைச்சுவை இல்லையென்றால் உலகமே இல்லை!”

காமெடி ஜங்ஷன் ஜெயச்சந்திரன்சுட்டி ஸ்டார்ஸ் - படங்கள்: அசோக்குமார்

“நகைச்சுவை இல்லையென்றால் உலகமே இல்லை!”

காமெடி ஜங்ஷன் ஜெயச்சந்திரன்சுட்டி ஸ்டார்ஸ் - படங்கள்: அசோக்குமார்

Published:Updated:
“நகைச்சுவை இல்லையென்றால் உலகமே இல்லை!”
பிரீமியம் ஸ்டோரி
“நகைச்சுவை இல்லையென்றால் உலகமே இல்லை!”

ந்த ஆண்டின் சுட்டி ஸ்டார் களாகத் தேர்வாகியிருக்கும் எங்களின் முதல் பேட்டி இது. ‘பேனா பிடிக்கலாம் பின்னி எடுக்கலாம்’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தமது அனுபவத்தைச் சொல்லி எங்களைக் குலுங்கக் குலுங்கச் சிரிக்கவைத்தார், சன் டிவியின் ‘காமெடி ஜங்ஷன்’ புகழ், ஜெயச்சந்திரன். பிறகு, எங்களின் கலகல கேள்விகளுக்கு அவர் சொன்ன லகலக பதில்கள் இங்கே...   

“நகைச்சுவை இல்லையென்றால் உலகமே இல்லை!”

‘‘நீங்க ஏன் காமெடியைத் தேர்ந்தெடுத்தீங்க?’’

‘‘நம்ம எல்லோரின் வாழ்க்கையிலும் நகைச்சுவை ரொம்ப முக்கியம். அந்த நகைச்சுவைதான் நம்மை உற்சாகமா நடமாட வெச்சிட்டிருக்கு. அந்த உணர்வு இல்லாதிருந்தா, உலகத்தில் மக்கள் இத்தனை வருஷங்களா இருந்திருப்பாங்களானு டவுட்டுதான். சினிமாவை எடுத்துக்கங்க... நூறு வருஷமா எத்தனையோ ஹீரோக்கள் வந்தாங்க... எத்தனையோ மெகா ஹிட்ஸ் கொடுத்தாங்க. ஆனா, அவர்களில் ஒரு சிலரைத் தவிர எத்தனை பேரை எல்லோருக்கும் ஞாபகம் இருக்கு. அந்தப் படங்களை இப்போ இருக்கிறவங்க பார்த்தால் போர் அடிக்கும். அதேநேரம் நகைச்சுவை நடிகர்கள் காலங்கள் தாண்டியும் எல்லோரின் மனசிலும் இருக்காங்க. என்.எஸ்.கிருஷ்ணன், டணால் தங்கவேல், நாகேஷ், தேங்காய் சீனிவாசன், மனோரமா, சுருளிராஜன், கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேல் எனச் சொல்லிட்டே போகலாம். அந்தக்காலத்தில் வந்த டி.ஆர்.ராமச்சந்திரன் நடிச்ச ‘சபாபதி’ என்கிற நகைச்சுவைப் படத்தை இப்போ பார்த்தாலும் எல்லோருக்கும் பிடிக்கும்.’’   

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“நகைச்சுவை இல்லையென்றால் உலகமே இல்லை!”

‘‘நீங்கள் யாரை முன்மாதிரியாக நினைச்சு காமெடியனா வந்தீங்க?’’

‘‘என் மாமா ஒருத்தரை முன்மாதிரியா வெச்சுத்தான் இந்தத் துறைக்கு வந்தேன். என் சின்ன வயசுல வீட்டுல, உறவுகளில் நடக்கும் எந்த ஒரு நிகழ்ச்சியானாலும் அவரை எல்லோரும் எதிர்பார்ப்பாங்க. தேடித் தேடிப் பேசுவாங்க. எல்லோர்கிட்டேயும் காமெடியாப் பேசி சிரிக்கவெச்சிட்டே இருப்பார். எப்பவுமே அவர் இருக்கிற இடம் கலகலப்பா இருக்கும். ஒரு நிகழ்ச்சிக்கு அவர் வரலைன்னாலும் எல்லாரும் அவரைப் பத்தியே பேசிட்டிருப்பாங்க. அப்போதான் எனக்குத் தோணுச்சு, ‘இப்படி என்னைப் பத்தியும் நாலு பேர் நினைச்சிட்டே இருக்கணும்னா நாமும் இப்படி மாறணும். மத்தவங்களைச் சிரிக்கவெச்சிட்டே இருக்கணும்னு முடிவு பண்ணினேன். என் அப்பாவுக்கும் நல்ல நகைச்சுவை உணர்வு உண்டு. அவரும் எனக்கு முன்மாதிரிதான்.’’     

“நகைச்சுவை இல்லையென்றால் உலகமே இல்லை!”

‘‘காமெடியனாக உங்க முதல் நிகழ்ச்சி ஞாபகம் இருக்கா?’’

“நல்லாவே ஞாபகம் இருக்கு. அது என்னுடைய பத்தாவது வயசுல நடந்துச்சு. ஸ்கூல் ஃபேர்வெல் பார்ட்டியில் மியூஸிக் சேர் போட்டி. அதுல நான் வின் பண்ணினேன். வின் பண்ணினவங்க ஒரு சீட்டை எடுக்கணும். அதில் என்ன எழுதியிருக்கோ அதைச் செய்யணும். எனக்கு மிமிக்ரின்னு சீட்டு வந்துச்சு. பல குரல்களில் பேசிக் காட்டினேன். எல்லோரும் ரசிச்சு சிரிச்சாங்க.’’

‘‘நீங்க நிஜத்திலும் ஜாலி டைப்பா?’’

‘‘இல்லை, இல்லை. நான் நிஜத்தில் சீரியஸான டைப். எங்க வீட்ல வந்து கேட்டால் கதை கதையா சொல்வாங்க. எனக்கு அடிக்கடி கோபம் வரும்.’’     

“நகைச்சுவை இல்லையென்றால் உலகமே இல்லை!”

‘‘ஒரு காமெடியனா வரணும்னா என்ன செய்யணும்?’’

‘‘நாம காமெடி பண்ண நினைச்சதுமே வந்துடாது. நிறைய நகைச்சுவைப் புத்தகங்களைப் படிக்கணும். நகைச்சுவை சினிமாக்கள், நிகழ்ச்சிகளைப் பார்க்கணும். உள்ளுக்குள்ளே நகைச்சுவை எண்ணங்களை வளர்த்துக்கிட்டே இருக்கணும்.’’      

“நகைச்சுவை இல்லையென்றால் உலகமே இல்லை!”

‘‘நகைச்சுவை உலகுக்கு அவசியமா?’

‘‘நிச்சயமா! சிரிப்பு இல்லையென்றால் உலகமே இல்லை. ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர். மிகப்பெரிய கொடுமைக்காரர். அவரைப் பார்த்தால் எல்லோருமே நடுங்குவாங்க. ஆனால், சார்லி சாப்ளின் ‘நாம் ஏன் இவரின் உருவத்தில் மற்றவர்களைச் சிரிக்கவைக்கக் கூடாது?’னு நினைச்சார். அவர் குடும்பம் அப்போது ரொம்ப வறுமையில் இருந்துச்சு. ஆனாலும். எதுக்கும் கவலைப்படாமல், ஹிட்லரின் உருவத்தில் ‘தி கிரேட் டிக்டேட்டர்’ என்ற படத்தில் நடிச்சார். அதன்மூலம் எல்லோரையும் சந்தோஷப்படுத்தினார். அந்தப் படத்தை ஆரம்பமா வெச்சு பல நாடுகளில் பல மொழிகளில் அரசைக் கிண்டல் செய்யும் படங்கள் வந்துச்சு. ‘23ம் புலிகேசி’யும் அப்படியான ஒரு படம்தான்.’’    

“நகைச்சுவை இல்லையென்றால் உலகமே இல்லை!”

‘‘உங்களுக்கு பல்பு வாங்கின அனுபவம் இருக்கா?’’

‘‘நிறைய இருக்கு. ஒருமுறை ஒரு ஆபீஸில் ஊழியர்களிடையே பேசக் கூப்பிட்டாங்க. நானும் கெத்தா போய், ஒரு மணி நேரத்துக்கு விதவிதமா பேசி காமெடி செஞ்சேன். சில பேர்தான் போனா போகட்டும்னு லைட்டா சிரிச்சுவெச்சாங்க. எனக்கு வருத்தமாப்போயிடுச்சு. நிகழ்ச்சி முடிஞ்சதும், ‘ஏன் யாருமே சரியா ரெஸ்பான்ஸ் பண்ணலை. அவ்வளவு மொக்கையாவா இருந்துச்சு’னு கேட்டேன். ஒருத்தர், “நீங்க நல்லாதான் செஞ்சீங்க. ஆனால் இங்கே இருக்கிற நிறைய பேருக்கு ஹிந்திதான் தெரியும், அதான் அவங்களுக்குப் புரியலை’னு சொன்னதும் பெரிய பல்பு கிடைச்ச மாதிரி இருந்துச்சு. திருநெல்வேலியிலும் ஒரு நிகழ்ச்சியில் அப்படித்தான். வட்டார மொழியில் பேசாததால், பலரும் நகைச்சுவையை ரசிக்காததைத் தெரிஞ்சுக்கிட்டேன். இடத்துக்குத் தகுந்த மொழியில் பேசினால்தான் நம்ம நகைச்சுவை சரியாகப் போய்ச் சேரும்னு கத்துக்கிட்டேன்.’’   

“நகைச்சுவை இல்லையென்றால் உலகமே இல்லை!”

‘‘உங்க இந்த வளர்ச்சிக்குப் பின்னாடி யார் யார் இருக்கா?’’

(சட்டென திரும்பிப் பார்க்கிறார். அறையில் சிரிப்பொலி): ‘‘எனக்குப் பின்னாடி டேபிள் சேர்தான் இருக்கு. சும்மா காமெடி... நான் இந்த இடத்துக்கு வர காரணம், என் பள்ளித் தோழர்கள்.

 ‘‘எங்களை மாதிரி மாணவர்களுக்குச் சொல்ல விரும்புவது...’’


“முடியும் என்றால் தொடர்ந்து முயற்சி செய்... முடியாது என்றால் தொடர்ந்து பயிற்சி செய்!”