பொது அறிவு
Published:Updated:

கிங் கிடாம்பி!

கிங் கிடாம்பி!
பிரீமியம் ஸ்டோரி
News
கிங் கிடாம்பி!

பு.விவேக் ஆனந்த்

லிம்பிக் சாம்பியனை வென்றிருக்கிறார்; அதுவும் ஆஸ்திரேலிய ஓப்பனில் இறுதிப்போட்டியில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார் ஸ்ரீகாந்த் கிடாம்பி. பேட்மின்டன்  உலகில் இந்தியாவுக்குப் பெரும்புகழைச் சேர்த்திருக்கும் கிடாம்பி பற்றித் தெரிந்துகொள்வோமா?    

கிங் கிடாம்பி!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்தின் முழுப்பெயர் ஸ்ரீகாந்த் நம்மாழ்வார் கிடாம்பி. 24 வயதாகும் இவர், இந்தியாவின் நம்பிக்கை வீரர். இந்திய அளவில் ஜூனியர் டோர்னமென்ட்களில் இவர் பெரிதாகச் சாதிக்கவில்லை. ஆனால் இன்று, ஒன்பது டைட்டில்களை வென்ற சாதனைக்குச் சொந்தக்காரர். சுமார் வீரராக இருந்த ஸ்ரீகாந்த், கடந்த ஐந்து ஆண்டுகளில் உலக அளவில் கலக்கும் சூப்பர் பிளேயராக மாறியதற்குக் காரணம் இவரின் பயிற்சியாளர்.

ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பி.வி.சிந்துவுக்குப் பயிற்சியளித்த கோபிசந்த்- தான் கிடாம்பிக்கும் பயிற்சியாளர். பேட்மின்டனைப் பொறுத்தவரையில் பி.டபிள்யூ.எஃப் சூப்பர் சீரிஸ்களை ஜெயிப்பது எந்தவொரு வீரருக்கும் கனவுதான். இந்த சீரிஸ்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஒட்டுமொத்தமாக நான்கு டைட்டில்கள் ஜெயித்திருக்கிறார். ஒருமுறை ரன்னர் அப். இந்தோனேஷிய ஓப்பனைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓப்பனிலும் வென்றுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த இறுதிப்போட்டியில்,  ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சென் லாங் என்கிற வீரரை எதிர்கொண்டார். 22-20, 21-16 என நேர் செட்களில் அபார வெற்றிபெற்றார் கிடாம்பி. போட்டி முடிந்ததும் பேசிய கிடாம்பி ``எதிரே இருக்கும் வீரர் துடிப்பானவர்; வலுவானவர்; கடும் போராளி; தன்னம்பிக்கை மிக்கவர். ஆனால், நான் முதல் செட்டில் அவரை வென்றால் மேட்ச்சை ஜெயிக்க முடியும் என நினைத்தேன். வெற்றி பெறுகிறோமோ இல்லையோ, அவருக்கு எளிதில் புள்ளிகளை விட்டுத்தந்துவிடக் கூடாது எனக் கவனத்துடன் விளையாடினேன். இதை என் உழைப்புக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன்’’ எனச் சொல்லியிருக்கிறார்.

கடந்த ஒலிம்பிக்கில் காலிறுதியில் தோற்றார் கிடாம்பி. இவரது இலக்கு, அடுத்த ஒலிம்பிக்கில் தங்கம் ஜெயிப்பதுதான். 

கிங் கிடாம்பி!

கிடாம்பி வென்ற சூப்பர் சீரிஸ் டைட்டில்கள்

2014 - சீன ஓப்பன்

2015 - இந்திய ஓப்பன்

2017 - இந்தோனேஷிய ஓப்பன்

2017 - ஆஸ்திரேலிய ஓப்பன்