பொது அறிவு
Published:Updated:

பாட்டு ஒண்ணு பாடலாமா!

பாட்டு ஒண்ணு பாடலாமா!
பிரீமியம் ஸ்டோரி
News
பாட்டு ஒண்ணு பாடலாமா!

பாவண்ணன் - ஓவியங்கள்: ரமணன்

பாட்டு ஒண்ணு பாடலாமா!

வண்டி

த்திப் பெட்டி வண்டி
வளைந்து போகும் வண்டி
இழுத்த திசையில் வளையும்
இங்கும் அங்கும் அலையும்
பள்ளம் வந்தால் உருளும்
பாறையில் மோதிப் புரளும்
ஓய்வுத் தேவையில்லை
ஓடிக் கொண்டே இருக்கும்
வள்ளி இழுக்கும் வண்டி
வாசல் வரைக்கும் செல்லும்
வேந்தன் இழுக்கும் வண்டி
வீதி வரைக்கும் ஓடும்
எனது வண்டி மட்டும்
எல்லைத் தாண்டிப் போகும்
எல்லாம் சுற்றிய பின்னர்
களைப்பில்லாமல் உருளும்.

பாட்டு ஒண்ணு பாடலாமா!

பற பற

காகித விமானமே பற பற
காற்றின் விசையில் பற பற
வண்ண விமானமே பற பற
வானத்தை நோக்கிப் பற பற
இறக்கையை விரித்துப் பற பற
இலக்கை நோக்கிப் பற பற
மாடியைத் தாண்டிப் பற பற
மரத்தையும் தாண்டிப் பற பற
ஒரே திசையில் பற பற
ஓசை இன்றிப் பற பற
நாரையைப் போல பற பற
நடுங்க வேண்டாம் பற பற
வெட்ட வெளியில் பற பற
வேகம் கூட்டிப் பற பற
தளரும் வரையில் பற பற
தலையை நிமிர்த்து பற பற

பாட்டு ஒண்ணு பாடலாமா!

மூன்று சக்கர மிதிவண்டி

ம்மா அம்மா நில்லுங்கள்
சம்மதம் தானா சொல்லுங்கள்
வாசல் பக்கம் செல்லட்டுமா?
வண்டியை எடுத்து நிறுத்தட்டுமா?
அழுக்குப் போகத் துடைக்கட்டுமா?
இருக்கை உறையை மாற்றட்டுமா?
ஏறி அமர்ந்து ஓட்டட்டுமா?
வீதி வரைக்கும் செல்லட்டுமா?
வளைந்து வளைந்து திருப்பட்டுமா?
மணியை அடித்துப் பார்க்கட்டுமா?
கோயில் பக்கம் போகட்டுமா?
கூட்டத்தில் புகுந்து வளையட்டுமா?
அரைமணி நேரம் ஓட்டட்டுமா?
அதற்குப் பிறகு திரும்பட்டுமா?
அம்மா அம்மா நில்லுங்கள்
சம்மதம் தானா சொல்லுங்கள்!