
பு.விவேக் ஆனந்த்
1. ரவி சாஸ்திரி, இவற்றில் எந்த கவுன்டி அணிக்காக விளையாடினார்?

A. க்ளாமோர்கன் B. லீ சிஸ்டிஷைர் C. க்ளோஸ்டிஷைர் D. லங்காஷைர்

2. ஐஸ் ஹாக்கியில், ஓர் அணியில் எத்தனை வீரர்கள் இருப்பார்கள்?
A.5 B.4 C.7 D.6

3. டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை ‘மேன் ஆஃப் தி மேட்ச்’ விருதை வென்றவர் யார் ?
A. சச்சின் டெண்டுல்கர் B. ராகுல் டிராவிட் C. ஜாக்குவஸ் காலிஸ், D. டான் பிராட்மேன்

4. டேவிஸ் கோப்பை, எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
A. டென்னிஸ் B. ஹாக்கி C. கால்பந்து D. பேட்மின்டன்

5. செஸ் விளையாட்டு வீரர் கேரி கேஸ்ப்ரோவ் எந்த நாட்டைச் சேர்ந்தவர் ?
A. கொரியா B. ரஷ்யா C. இங்கிலாந்து D. அமெரிக்கா

6. தமிழகத்தைச் சேர்ந்த சதீஷ் சிவலிங்கம், கிளாஸ்கோ காமன்வெல்த்தில் எந்த எடைப் பிரிவில் தங்கம் வென்றார்?
A. 87 கிலோ B. 77 கிலோ C. 65 கிலோ D. 71 கிலோ

7. சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியம், எந்த ஆண்டு திறக்கப்பட்டது?
A . 1977 B.1993 C.2002 D.1969

8. ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் விளாசிய நியூசிலாந்து வீரர் யார் ?
A. பிரண்டன் மெக்குல்லம் B. ஸ்டீபன் பிளமிங் C. மார்ட்டின் கப்தில் D. கோரே ஆண்டர்சன்

9. மில்கா சிங் எந்த விளையாட்டைச் சேர்ந்தவர்?
A. ஓட்டப் பந்தயம் B. தொடர் ஓட்டப் பந்தயம் C. தடை தாண்டும் ஓட்டப் பந்தயம் D. ஈட்டி எறிதல்.

10. ஒலிம்பிக்கில் அதிக தங்கப் பதக்கத்தை வென்ற வீரர் யார்?
A. மைக்கேல் பெல்ப்ஸ் B. பாவோ நர்மி C. உசேன் போல்ட் D. மார்க் ஸ்பிட்ஸ்

11. பெண்கள் பேட்மின்டனில் ஒற்றையர் பிரிவுத் தரவரிசையில், தற்போது முதல் இடத்தில் இருக்கும் வீராங்கனை யார் ?
A. பி.வி.சிந்து B. அகானே யாமாகுச்சி C. கரோலினா மரின் D. தய் சூ யிங்

12. பெண்கள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி எது?
A. இங்கிலாந்து B. நியூசிலாந்து C. இந்தியா D. ஆஸ்திரேலியா

13. கங்குலி தலைமையில் இந்தியா எத்தனை உலகக்கோப்பையில் விளையாடியுள்ளது?
A. 2 B. 1 C. 0 D. 3

14. லா லிகாவில் அதிகமுறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணி எது?
A. பார்சிலோனா B. அட்லெடிகோ மாட்ரிட் C. ரியல் மாட்ரிட் D. வாலென்சியா

15. 2020-ம் ஆண்டு ஒலிம்பிக், எந்த நாட்டில் நடக்கவுள்ளது?
A. டோக்கியோ, ஜப்பான் B. தென் கொரியா C. ஸ்விட்சர்லாந்து D. ஏதென்ஸ், கிரீஸ்
விடை: 1-A 2-D 3-C 4-A 5-B 6-B 7-B 8-C 9-A 10-A 11-D 12-D 13-B 14-C 15-A