பிரீமியம் ஸ்டோரி
ஐபிஎல் வின்னர்கள்!

பிஎல், பொழுபோக்குக்கான தொடர் மட்டுமல்ல; இளம் வீரர்களைக் கண்டெடுத்து அவர்களை உலகறியச்செய்யும் தொடரும்கூட. இந்த சீஸனில் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ். ஆனால், நிஜ ஹீரோக்கள் இளம் வீரர்கள்தான்.   இந்த சீஸனில் பல இளம் வீரர்கள் சாதித்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய அறிமுகம் இங்கே...

ராகுல் திரிபாதி    

ஐபிஎல் வின்னர்கள்!

தோனி மாநிலமான ஜார்கண்டிலிருந்து வந்தவர். 26 வயதாகும் ராகுல் திரிபாதி, இந்த சீஸனில் புனே அணிக்காக விளையாடினார். இவருக்கு சான்ஸ் கிடைத்த முதல் போட்டியிலேயே முத்திரை பதித்தார்.  துணிச்சலுடன் இவர் ஆடிய ஷாட்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. புனே அணியின் பயிற்சியாளர் ஃபிளெமிங் இவரைப் பட்டைதீட்ட, அடுத்தடுத்த போட்டிகளில் திரிபாதியைச் சமாளிப்பதற்குள் படாதபாடுபட்டனர் எதிரணி பெளலர்கள். இந்த சீஸனில் எட்டுப் போட்டிகளில் முப்பது ரன்களுக்குமேல் எடுத்திருக்கிறார் ராகுல். மொத்தமாக 14 போட்டிகளில் 391 ரன்கள் குவித்திருக்கிறார்.

சஞ்சு சாம்சன்      

ஐபிஎல் வின்னர்கள்!

சஞ்சு இவர் பெளலர்களுக்குப் பதில் சொல்வதெல்லாம் சிக்ஸர்களில்தான். இவருக்கு வயது 22, ‘டெல்லி பேட்டிங் லைனைக் குலைக்கணும்னா முதல்ல சாம்சன் விக்கெட்டை எடுக்கணும்’ எதிர் அணி களின் பெளலர்களுக்கு அந்த அணியின் கேப்டன் கொடுக்கும் டிப்ஸ் இதுதான். இந்த சீஸனில் 19 சிக்ஸர்கள் விளாசினார். 15 போட்டிகளில் 386 ரன்கள் குவித்திருக்கிறார். இந்த சீஸனில் முதல் சதத்தை விளாசியதும் சாம்சன்தான்.

நிதிஷ் ராணா   

ஐபிஎல் வின்னர்கள்!

செம ஸ்டைலிஷ் ஆட்டம் ராணாவினுடையது. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடினார். வேகப்பந்துகளை பெளண்டரிக்கு விளாசுவது நிதிஷுக்கு ஜாலி வேலை. டெல்லியைச் சேர்ந்த ராணாவுக்கு வயது 23. ராணா களத்தில் இருந்தால், தனி ஒருவனாகவே மேட்சை மாற்றிவிடுவார். அணியின் சூழ்நிலைக்கு ஏற்ப பொறுப்பாகவும் ஆடுகிறார்; இடதுகை வீரரான ராணா, விரைவில் இந்திய அணியில் யுவராஜின் இடத்தைப் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷ்ரேயாஸ் ஐயர்      

ஐபிஎல் வின்னர்கள்!

டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஆடினார் ஷ்ரேயாஸ் ஐயர். இவருக்கும் வயது 22 தான். இவரது சில டிரைவ்கள் விராட் கோலியை நினைவுபடுத்தும். அபாயகரமான பந்துகளைக்கூட லாகவமாகத் தள்ளிவிட்டு,   ஃபீல்டிங்கில் நிற்கும் வீரர்களுக்கு இடையேயான இடைவெளியில் ‘நச்’ பெளண்டரி விளாசுவது ஷ்ரேயாஸின் வழக்கம்.

இந்த சீஸனில் சீராக பேட்டிங் செய்து நல்ல சராசரி வைத்திருக்கிறார். 12 போட்டிகளில் 338 ரன்களைக் குவித்திருக்கிறார்.

ரிஷப் பன்ட்   

ஐபிஎல் வின்னர்கள்!

வயது 19. டைனமைட் பேட்ஸ்மேன். துடிப்பான விக்கெட் கீப்பர். இந்த ஐபிஎல்-லில் பெளண்டரி சிக்ஸர் விகிதம் கிட்டத்தட்ட சமமாக இருப்பது ரிஷபுக்குத்தான். இதுவரை 28 பெளண்டரிகள் அடித்திருக்கிறார். 24 சிக்ஸர்கள் விளாசியிருக்கிறார். 

வீரேந்திர சேவாக் போல முதல் பந்திலிருந்தே போட்டுப் பொளப்பவர். குஜராத்துக்கு எதிராக இவர் ஆடிய ஓர் ஆட்டம் மலைக்கவைத்தது. சச்சின் டெண்டுல்கர், `ஐபிஎல் வரலாற்றிலேயே நான் பார்த்த மிகச்சிறந்த இன்னிங்ஸ் இது’ எனப் புகழ்ந்தார்.

க்ரூனால் பாண்டியா   

ஐபிஎல் வின்னர்கள்!

டிவில்லியர்ஸ்க்கு இதுவரை நான்கு போட்டிகளிலும் பந்து வீசி நான்கு முறையும் அவரை வீழ்த்தியிருக்கிறார் க்ரூனால் பாண்டியா. டெக்னிகலான பந்து வீச்சும், ‘பவர் ஹிட்’ பேட்டிங்கும் க்ரூனால் பாண்டியாவின் அடையாளங்கள்.

மும்பை இந்தியன்ஸ் அணி இவரை வெகுவாக நம்பியிருந்தது. தம்பி ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து இந்த சீஸன் முழுவதும் கலக்கல் ஆட்டம் ஆடினார்.

ப்ளே ஆஃப் சுற்றிலும் சரி, இறுதிப்போட்டியிலும் சரி மும்பை அணிக்கு டாப் ஸ்கோரர் க்ரூனால்தான். மும்பை சாம்பியன் ஆவதற்கு மிக முக்கியக் காரணம் இவர். ஃபைனலில் மேன் ஆஃப் தி மேட்ச் விருதையும் பெற்றார் க்ரூனால்.

பவன் நெகி   

ஐபிஎல் வின்னர்கள்!

24 வயது பவன் நெகி, இந்த சீஸனில் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடியபோதே பிரபலமடைந்த நெகி, கடந்த ஆண்டில் சறுக்கினாலும் விரைவிலேயே மீண்டு இந்த முறை பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் கலக்கினார். 12 போட்டிகளில் 144 ரன்கள் அடித்தது மட்டுமின்றி, 16 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இந்த சீஸனில் மிகவும் சிக்கனமாக ரன்களை விட்டுத்தந்திருக்கிறார்.

வாஷிங்டன் சுந்தர்  

ஐபிஎல் வின்னர்கள்!

தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தருக்கு, வயது 17. புனே சூப்பர் ஜெயின்ட் அணிக்காக  ஆடினார். கடைசிக்கு முந்தைய இடத்துக்குப் போட்டிபோடும் நிலைமையில் இருந்த புனே அணி, வாஷிங்டன் சுந்தர் வரவுக்குப் பிறகுதான் வெற்றிப்பாதையில் பயணித்தது.

ஓவருக்கு வெறும் 6.16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த சிக்கனமான பெளலர். இம்ரான் தாகீருடன் இணைந்து கலக்கல் ஆட்டம் ஆடும் இவர், ஆல்ரவுண்டரும்கூட. புனே அணியில் பேட்டிங் செய்வதற்கு இவருக்குச் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. தோனி, ஸ்மித் எனப் பலரின் பாராட்டைப் பெற்றவர்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு