Published:Updated:

தமிழர் கலை சிலம்பம்! - 88 வயதில் சிலம்பம் சுற்றும் தாத்தா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தமிழர் கலை சிலம்பம்! - 88 வயதில் சிலம்பம் சுற்றும் தாத்தா
தமிழர் கலை சிலம்பம்! - 88 வயதில் சிலம்பம் சுற்றும் தாத்தா

சுட்டி ஸ்டார்ஸ் ஸ்பெஷல்

பிரீமியம் ஸ்டோரி

மிழகத்தின் பாரம்பர்ய விளையாட்டாக வும் தமிழர் வீரத்தின் அடையாளமாகவும் இருப்பது, சிலம்பம். உடலை உறுதியாக்கி, மனதை என்றென்றும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் மாயம், சிலம்பத்துக்கு உண்டு. அதற்கு ஓர் உதாரணம்தான், திருச்செங்கோடு பகுதியில் வசிக்கும் அங்கப்பன் தாத்தா. எட்டு வயதில் சிலம்பத்தைச் சுழற்ற ஆரம்பித்த இவருக்கு, இப்போது வயது 85. ‘மற்றவர்களுக்குத்தான் 85 என்பது தள்ளும் வயது; எனக்கோ துள்ளும் வயது’ என்று உற்சாகம் குறையாமல் சிலம்பம் சுற்றுகிறர். முன்னாள் உடற்கல்வி ஆசிரியரான இவர், இப்போது பலருக்கு இலவசமாகச் சிலம்பம் கற்றுத்தருகிறார்.  

தமிழர் கலை சிலம்பம்! - 88 வயதில் சிலம்பம் சுற்றும் தாத்தா

‘‘சிலம்பக்கலை எப்படி உருவானது?’’

‘‘ஆதி கால மனிதனோடு பிறந்த கலை, சிலம்பம். இது கையில் இருந்தால்...

முள் விலக்கும்

கனி உதிர்க்கும்

கவ்வு நாய் காக்கும்

ஆழம் அளக்கும்

ஆற்றைக் கடக்க உதவும்’ என்கிறார் அகத்தியர். எந்த நேரமும் கையில் கம்போடு இருந்த ஆதிமனிதன் கண்டு பிடித்ததுதான் சிலம்பம்.’’

‘‘உங்கள் குரு யார்?’’

‘’என் குரு, என் அப்பா அங்கப்பன். அவரின் அப்பா பெயரும் அங்கப்பன். என் பெயரும் அங்கப்பன். நான், எட்டு வயதில் அப்பாவி டம் சிலம்பம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். இன்று நான் உற்சாகத்தோடும் உடல் நலத்தோடும்  இருப்பதற்குக் காரணம், இந்தச் சிலம்பப் பயிற்சிதான்.’’

‘‘நீங்கள் பெற்ற விருதுகள்..’’

‘’தமிழக அரசு வழங்கிய ‘கலை முதுமணி’, ‘மாஸ்டர் ஆஃப் சிலம்பம்’, ‘துரோணாச்சாரியார் விருது’ மற்றும் பல பரிசுகளையும் பெற்றுள்ளேன்.’’   

தமிழர் கலை சிலம்பம்! - 88 வயதில் சிலம்பம் சுற்றும் தாத்தா

‘‘சிலம்பம், தற்காப்புக் கலையா... விளையாட்டா?’’

‘’சிலம்பத்தை விளையாட்டு என்பதைவிட, தற்காப்புக் கலை என்று சொல்வதே சரி.’’

‘‘சிலம்பத்துக்கும் மற்ற வீர விளையாட்டு களுக்கும் என்ன வித்தியாசம்?’’

‘’கலைகளில் முதன்மையானது, சிலம்பம். நுணுக்கம் நிறைந்த கலைகளில் சிலம்பம் முக்கியமானது. இதில் இருந்துதான் மற்ற தற்காப்புக் கலைகள் உருவாகின. சிலம்பம் கற்பதால், நம் உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் பயிற்சி கிடைக்கும். உடலை உறுதி செய்யும்.’’ 

தமிழர் கலை சிலம்பம்! - 88 வயதில் சிலம்பம் சுற்றும் தாத்தா

‘‘சிலம்பம் கற்பதால் மாணவர்களுக்கு என்ன பயன்?’’

‘’சிலம்பம் கற்பதால், மனதை ஒருங்கிணைக்க முடியும். நமது சிந்தனை ஆற்றல் முழுவதையும் ஒரு புள்ளியில் குவிக்கும் கலை கைவரப் பெறும். இதனால், படிக்கும்போது கவனச் சிதறல் இல்லாமல் படிக்கலாம். வரும் முன் காக்கும் ஆற்றல் உருவாகும்.’’   

தமிழர் கலை சிலம்பம்! - 88 வயதில் சிலம்பம் சுற்றும் தாத்தா

‘‘சிலம்பக் கலையில் உங்களால் மறக்க முடியாத விஷயம் எது?’’

‘’சிலம்பக் கலையில் தொய்வு ஏற்பட்டிருந்த காலகட்டம். 1987 ஆம் ஆண்டு, அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஏற்பாட்டில் இந்தியக் கலாசார அமைப்பின் சார்பாக, சோவியத் ரஷ்யாவுக்கு இரண்டு மாணவிகளுடன் சென்று கலந்துகொண்டேன். அந்த நாளில், அது மிகவும் பெரிதாகப் பேசப்பட்டது. தமிழகம் முழுக்கச் சிலம்பம் பற்றிய விழிப்புஉணர்வு ஏற்பட்டது. நிறைய பேர் சிலம்பம் கற்றுக்கொள்ள முன்வந்தார்கள். இன்று பலரும் சிலம்பக் கலையில் சாதனை படைப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.’’  

தமிழர் கலை சிலம்பம்! - 88 வயதில் சிலம்பம் சுற்றும் தாத்தா


‘‘சிலம்பத்தில் பிரிவுகள் உள்ளனவா?’’
 
‘‘ஆமாம். மான்கொம்பு, வாள், சுருள்வாள், ஈட்டி, செடிகுச்சி எனப் பல பிரிவுகள் இருக்கின்றன. ஆதிச்சநல்லூரில் நடந்த அகழ்வராய்ச்சியில், 32 வகை சிலம்ப ஆயுதங்களைக் கண்டுபிடித்துள்ளனர். அவை, சென்னை அருங்காட்சியம் மற்றும் ராமேஸ்வரம் ராமவிலாஸிலும் வைக்கப்பட்டுள்ளன.’’

‘’எதிர்காலத் தலைமுறைக்குச் சிலம்பத்தை எப்படிக் கொண்டுசெல்வது?’’


‘’எனது ஊரில் யார் அழைத்தாலும், நானும் எனது மாணவர்களும் சென்று, பள்ளிகளிலும் மற்ற இடங்களிலும் இலவசமாகச் சிலம்பம் கற்றுக்கொடுக்கிறோம். இதுபோல சிலம்பம் கற்கும் ஒவ்வொருவரும், அதை இன்னொருவருக்குக் கற்றுத் தருவதைத் தம்  கடமையாக நினைக்க வேண்டும். இதனால், எதிர்காலத் தலைமுறைக்குச் சிலம்பத்தை எளிமையாகக் கொண்டுசெல்ல முடியும். அது, நிச்சயம் நடக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு